Saturday, July 30, 2011

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் - I

1. எல்லா ஊரும் நம் ஊரே ; எல்லா நாடும் நம் நாடே.
2. அனைவரும் நம் உறவினர்.
3. தீமைக்கும் நன்மைக்கும் நாமே காரணம்.
4. பெரியோர் என யாரையும் வியந்து போற்றாதீர்.
5. சிறியோர் என யாரையும் இகழாதீர்.
6. தன்னலமாய் வாழாதீர்.
7. பிறர் நலம் பேணி வாழ்வீர்.
8. துன்பம் கண்டு துவளாதவரே வெற்றி காண்பார்.
9. உள்ளம் உயர்வானால் வாழ்வும் உயரும்.
10. வெற்றி கண்டு மயங்காதீர்.
11. வாழ்க்கைத் துணை என்றும் ஒருவரே.
12. காற்று, உணவு, மொழி முதலியவற்றில் தூய்மை பேணுவீர்.
13. சுற்றுப்புறத் தூய்மையே நலவாழ்விற்கு அடிப்படை.
14. உண்மை பேசி உள்ளத்தைத் தூய்மை ஆக்குவீர்.
15. அன்பே வாழ்வின் அடிப்படை.
16. அருள் வாழ்வே அறவாழ்வு.
17. நல்லது செய்யாவிட்டாலும் தீயது செய்யாதே.
18. சான்றோன் ஆக்குதல் பெற்றோர் கடமை.
19. நல்லொழுக்கம் தருதல் ஆளுவோர் கடமை.
20. செல்வம் அழியும் ; அறிவு அழியாது.
21. துன்புறுத்துபவர் துன்பம் காண்பார்.
22. செல்வம் பிறருக்கு உதவவே.
23. தானும் பயன்படுத்தாத பிறருக்கும் உதவாத செல்வரை விட ஏழையே
செல்வந்தன்.
24. செய்க பொருளை.
25. அறவழியில் பொருள் ஈட்டுக.
26. பிறரை உயர்த்த நீ உயர்வாய்.
27. பிறர் வாழ நீ வாழ்வாய்.
28. மறதியை மற.
29. விலையை மிகுதியாகப் பெறாமல் பொருளைக் குறைவாகக் கொடுக்காமல்
வாணிகம் செய்க.
30. குறுக்கு வழியில் பணம் தேடாதே.



Tuesday, July 12, 2011

பொன்மொழிகள்-19

வயது செல்லச்செல்ல தோல் சுருங்கி விடுகிறது.-ஆனால்
மகிழ்ச்சியை விட்டுவிட்டால் வாழ்வே சுருங்கிவிடும்.
**********
சதா தள்ளாடுவதைவிட ஒருமுறை விழுந்து எழுவது சிலாக்கியம்.
**********
நாள் என்பது இரவையும் சேர்த்துத்தான்.
பூ என்பது காயையும் சேர்த்துத்தான்.
கடல் என்பது நுரைகளையும் சேர்த்துத்தான்.
வாழ்க்கை என்பது ரணங்களையும் சேர்த்துத்தான்.
**********
மீனுக்குக்கூடத் தொல்லை வராது-அதுதன்
வாயை மூடிக் கொண்டிருந்தால்.
**********
சின்னக் கவலைகள் என்பது கொசு போல:
ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தால் அது பறந்து ஓடிவிடும்.
**********
மனிதர்களில் இரண்டு வகையினர் மட்டுமே உண்டு.
ஒன்று திறமையானவர்கள்.
இரண்டு,திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.
**********
முகத்தை அழகாக வைத்துக்கொள்ள
செலவில்லாத ஒப்பனை புன்னகை.
**********
ஆசைப்படுவது மனம்.
ஆசைப்பட வைப்பது புத்தி.
அவதிப்படுவதோ உடல்.
**********
உன் கௌரவம் உன் நாக்கின் நுனியில் உள்ளது.
**********
இவ்வளவு நீண்ட வாழ்வில் ஒரே ஒரு முறைதான் சாகிறோம்.
**********
கோபத்தில் ஆரம்பமாவது எல்லாம்
இறுதியில் வெட்கப்படும்படி முடியும்.
**********
ஆபத்து பயத்தையும்,பயம் அதைவிடப் பெரிய ஆபத்தையும் தருகிறது.
**********
வயதானவர்கள் கவலைப்படுவதெல்லாம்,தங்களுக்கு வயதாகி விட்டதே என்பதல்ல:மற்றவர்கள் இளமையாக இருக்கிறார்களே என்றுதான்.