மனிதனின் கை, மற்றும் கால் விரல்களின் நுனிப்பகுதியை ஒரு தகடு போன்று மூடி இருப்பதுதான் நகங்களாகும். நகங்கள் `கெரட்டின்' என்று சொல்லக்கூடிய ஒருவகை கடினமான புரோட்டின் பொருளால் ஆனது. மனிதனின் வெளிப்புறத்தை மூடியிருக்கும் சருமத்தையும், ரோமத்தையும் போலவே நகமும் அமைந்திருக்கிறது. மனிதனைப் போல் சில பாலூட்டி விலங்குகளுக்கும் நகங்கள் உண்டு. ஆடு, மாடுகளின் கால் விரல் நுனிப்பகுதியை `குளம்பு' என்று நாம் சொல்லுவதுண்டு. மனிதனுக்குள்ள நகங்கள்தான் சற்று மாறி, விலங்குகளுக்கும் அதன் உபயோகத்திற்கேற்ப, `குளம்பு' என்ற பெயரில் மிகக் கடினமான, மிக உறுதியான, சற்று நீளமான பெரிய நகங்களாக காட்சியளிக்கின்றது. மனித உடலின் நுனிப் பகுதிகளாக இருப்பது கை விரல்களும் கால் விரல்களும் தான். விரல்கள் அனைத்துமே மிக மெல்லியதாக இருப்பதால் அவைகளின் பாதுகாப்புக்காகத்தான், ஒவ்வொரு விரல் நுனியிலும் நகங்கள் இயற்கையாக அமைந்திருக்கின்றன. நகங்கள் இல்லையெனில் விரல்களுக்கு அதிக பாதுகாப்பில்லை. நகம் எல்லோருக்கும் ஒரே சீராக வளர்வதில்லை. ஒருவருக்கு மிக வேகமாக வளரும். இன்னொருவருக்கு மிக மெதுவாக வளரும். கால் விரல் நகங்களை விட, கை விரல் நகங்கள் நான்கு மடங்கு மிக வேகமாக வளரும். அதனால்தான் கைவிரல் நகங்களைப் போல கால்விரல் நகங்களை நாம் அதிகமாக வெட்டுவதில்லை. அதேபோல் ஆள் காட்டி விரல் நகம், சுண்டு விரல் நகத்தை விட மிக வேகமாக வளரும். ஒரு மாதத்துக்கு சராசரியாக 3 மில்லி மீட்டர் நீளத்திற்கு நகங்கள் வளரும். கைவிரல் நகங்கள் விழுந்து புதிதாக முழுவதும் வளர வேண்டுமென்றால், சுமார் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் ஆகும். அதே நேரத்தில் கால் விரல் நகங்கள், புதிதாக முழுவதும் வளர, சுமார் 1 முதல் 11/2 ஆண்டுகள் ஆகும். மழைக்காலத்தை விட, வெயில்காலத்தில் நகங்கள் வேகமாக வளரும். ஒருவருடைய வயது, அவர் ஆணா- பெண்ணா, அவரது அன்றாட உழைப்பு, அவரது சாப்பாடு விஷயங்கள், அவரது பரம்பரை மற்றும் பருவ காலங்களைப் பொறுத்தே, நகங்கள் வளரும் நீளமும் வேகமும் அமையும். மனிதன் இறந்த பிறகும் நகம் வளரும் என்று சிலர் சொல்வதுண்டு. இது உண்மையல்ல. இறந்தவுடன் நகத்திற்குக் கீழுள்ள தோலிலும், தசையிலுமுள்ள தண்ணீர் குறைந்து விடும். அதனால் தோல் சுருங்கி, இறுக ஆரம்பித்து விடும். தோல் சுருங்கி இறுகி விடுவதால், நகம் மேலே நீளமாக, பெரிதாக தெரிய ஆரம்பிக்கும். இதுதான் உண்மை. இறந்த பிறகு நகம் வளரவே வளராது. அநேகம் பேர் அழகுக்காக நகங்களை வளர்க்கிறார்கள். ஆண்களை விட, பெண்கள் தான் அதிகமாய் நகம் வளர்க்கிறார்கள். ஆனால் சிலர், தான் வளர்க்கும் நகத்தை ஒழுங்காக சீவி, வெட்டி, நெயில் பாலிஷ் எல்லாம் போட்டு, நகங்களுக்கடியில் அழுக்கு சேரவிடாமல் மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அநேகம் பேர் இதைக் கண்டுகொள்வதே இல்லை. சிலருக்கு நகம் அடுத்தவர்களை கிள்ளிவிட மட்டுமே உபயோகப்படும். சிலருக்கு நகம் அவர்கள் செய்யும் வேலைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். பஸ் கண்டக்டருக்கு டிக்கெட் கிழிக்க, டெய்லருக்கு துணி மற்றும் காஜா பட்டன் தைக்க நகம் மிகவும் உபயோகப்படுகிறது. கேரளாவில் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் நிறைய பேர் கட்டை விரல் நகத்தையும், ஆள் காட்டி விரல் நகத்தையும் சற்று நீளமாக வளர்த்து வைத்திருப்பார்கள். தேயிலைச் செடியிலிருந்து கொழுந்துகளை வேக வேகமாக பறிப்பதற்கு நகம் அவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. வீட்டில் சமையலறையில் வெங்காயத்தை உரிப்பதற்கும், வேக வைத்த முட்டை தோலை கீறி உடைப்பதற்கு நகம் கொஞ்சம் நீளமாக இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று வீட்டுப் பெண்மணிகள் சொல்வதுண்டு. பெண்களின் பாதுகாப்புக்கு கூட நகங்கள் சில சமயங்களில் உபயோகப்படுவதுண்டு. கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த `லீ ரெட்மாண்ட்' என்ற பெண் 28 அடி 41/2 அங்குலம் நீளத்திற்கு கை விரல் நகத்தை வளர்த்து சாதனை புரிந்துள்ளார். 1979-ம் ஆண்டிலிருந்து நகம் வளர்க்க ஆரம்பித்த இவர், 23.02.2008-ல் இந்த சாதனையை அடைந்துள்ளார். அதே அமெரிக்காவைச் சேர்ந்த `மெல்வின் பூத்' என்பவர் 32 அடி, 3.8 அங்குலம் நீளத்திற்கு கைவிரல் நகத்தை வளர்த்து 30.05.2009-ல் சாதனை புரிந்துள்ளார். நமது உடல் உயரத்தை மாதிரி சுமார் ஆறு மடங்கு நீளம் இவர் தனது நகத்தை வளர்த்துள்ளார்.நகத்திற்கு உள்ளே தெரியும் நிறத்தை வைத்தே, இவருக்கு இன்ன நோய் இருக்கும் என்ற ஓரளவு கண்டுபிடித்து விடலாம். உடம்பு ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா என்பதை நகத்தைப் பார்த்தே சொல்லி விடலாம். மருத்துவமனையில் நோயாளியாக வரும் ஒருவரின் கைவிரல் நகங்களைப் பார்த்தே, உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றும் கண்டுபிடித்து விடலாம். நகங்களின் குறுக்கே, அதிக பள்ளமான கோடுகள் தெரிந்தால் வயதாகி விட்டது என்று அர்த்தம். நகத்தில் அதனுடைய இயற்கையான நிறம் போய், வேறு நிறம் தென்பட்டாலோ, நகம் மிகமிக மெல்லியதாக இருந்தாலோ, நகம் மிக மிக தடியாக இருந்தாலோ, நகம் சுலபமாக உடைந்து போகிற மாதிரி இருந்தாலோ, நகத்தில் பிளவு இருந்தாலோ, நகரத்தில் வெடிப்பு இருந்தாலோ, நகத்தில் பள்ளமான கோடுகள் இருந்தாலோ, நகத்தில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தாலோ, மொத்த நகமும் குவிந்து வளைந்து இருந்தாலோ, நகம் லேசாக வளைந்திருக்காமல் தட்டையாக இருந்தாலோ, நகம் உள்பக்கம் வளைந்திருந்தாலோ, இவை எல்லாம் உடலில் ஏதோவொரு இடத்தில் நோய் இருக்கிறது என்பதை காட்டும் அறிகுறியாகும். சிலருக்கு நகம் அதனுடைய இயற்கையான நிறத்தில் இல்லாமல், நிறம் மாறி, அழுக்காக இருப்பது போல் தோன்றும். `பங்கஸ்' என்று சொல்லக்கூடிய ஒருவகை கிருமியினால் ஏற்படும் நோயே, நகத்தை இவ்வாறு பாதிக்கச் செய்கிறது. நீல நிறத்தில் கைவிரல் நகம் இருந்தால், `சயனோஸிஸ்' என்று சொல்லப்படும் நோயின் அறிகுறி இருக்கிறதென்று அர்த்தம். அதாவது ரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருக்கிறதென்று அர்த்தம். இருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று முருங்கைக்காய் போன்று இருக்கும், இதை `க்ளப்பிங்' என்று கூறுவதுண்டு. சருமத்தைப் போல நகங்களும் காய்ந்து, உலர்ந்து போக வாய்ப்புண்டு. சில சமயங்களில் நகம் அதிகமாக காய்ந்து, உடைந்து போகக்கூட வாய்ப்புண்டு. நகம், செதில் செதிலாக உரிந்து வருவதும் உண்டு. சமையல்காரர்கள், துணி துவைப்பவர்கள், கெமிக்கல் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு கைவிரல் நகங்கள் அதிகமாக பாதிப்படையும். கால் விரல் நகங்களும் அப்படித்தான் பாதிப்புக்குள்ளாகின்றன. கால் விரல்களை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளாததால், நகங்களில் நோய் ஏற்படுகின்றன. ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி சிலர் பார்ப்பதற்கு மிக அழகாக, மிக சுத்தமாக இருப்பது போன்று தோன்றுவார்கள். ஆனால் அவர்களுடைய காலையும், கால் விரல்களையும் பார்க்க சகிக்காது. அவ்வளவு அசிங்கமாக வைத்திருப்பார்கள். கால் விரல்களுக்கு கண்டிப்பாக கவனிப்பு அவசியம். தினமும் ஷூ போடும் பழக்கமுள்ளவர்கள் தினமும் துவைத்த சாக்ஸை அணிய வேண்டும். ஒருநாள் முழுக்க, காலுக்கும், ஷூவுக்கும் இடையில் இருக்கும் சாக்ஸ்களை கழற்றி, கழற்றி போடுவதினாலும், வியர்வையினாலும் சீக்கிரமே அழுக்காகி, சில நேரங்களில் நாற்றமடிக்கவே ஆரம்பித்து விடும். சில பேர் டிப்-டாப்பாக டிரெஸ் பண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஷூவைக் கழற்றினால், நாற்றம் தாங்க முடியாது. எனவே சாக்ஸை தினமும் மாற்ற வேண்டும். மேலும் முரட்டுத்தனமான சில உடற்பயிற்சிகள் செய்யும் போது கால் விரல் நகங்கள் பாதிக்கப்படும். ஷூ ரொம்ப டைட்டாக போட்டால் கூட கால் விரல் நகங்கள் பாதிப்புக்குள்ளாகும். எனவே சரியான அளவு பார்த்து காலனிகளை வாங்க வேண்டும். வெளியில் நடந்து போகும் போது, அதுவும் செருப்பில்லாமல் நடக்கும் போது, விரல் நகங்களில் கல், முள், கம்பி போன்றவை பட்டு நகங்கள் பாதிக்க வாய்ப்புண்டு. YOGANANDHAN GANESAN |
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Thursday, March 31, 2011
நகத்தை பாருங்கள் நலம் தெரியும்
Wednesday, March 30, 2011
நோன்ஸ்டிக் பாத்திர சமையல் குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும்
உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் எண்ணையின் அளவை குறைப்பதற்காக சமீப காலமாக “நோன்ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்கின்றனர்.
இதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டாது.
எனவே அவற்றில் சமையல் செய்வது ஒரு பாஷனாக கருதப்படுகிறது. ஆனால், அதுவும் ஒருவகையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
“நோன்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்து தயாரிக்கப்படும் உணவை குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் “பேப்ரிக்குகளும் கொழுப்பு சத்தை உணவில் அதிகரிக்கின்றன.
அந்த உணவை சாப்பிடும் குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. லிபோபுரோட்டீனின் அளவை குறைக்கிறது. இதனால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.
நோன்ஸ்டிக் பாத்திரங்களில் உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க “பெர்புலோரோ அல்சைல் திரவம் பூசப்படுகிறது.
இதன் மூலம் தான் கொழுப்புசத்து அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வை மேற்கு வர்ஜினீயா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டெபானியா பிரிஸ்பீ தலைமையிலான குழு மேற்கொண்டனர்.
***
நன்றி http://www.z9tech.com/
***
"வாழ்க வளமுடன்"
சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்

சமைத்த உணவுகளை உண்ணும் ஒரு ஆரோக்கியமான மனிதனின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், நுரையீரல் முதலியவற்றை ஸ்கேனிங் செய்து பார்த்தால் அவை முழுவதும் சளி, கபம் போன்ற நோய் உண்டாக்கும்.கசடுகள் நிறைந்து காணப்படுகின்றன.
உதாரணமாக
ஒரு ஸ்பாஞ்சை எடுத்து பசையில் முக்கினால் அது எப்படி இருக்குமோ, அது போல் மனிதனுடைய இலாஸ்டிக் தன்மைக் கூட குறைந்து விடுகின்றது.
அதனால் சிறுநீரகம் சா¢வர வேலை செய்ய முடிவதில்லை. நுரையீரல் சா¢யாக சுவாசிக்க உதவுவது இல்லை.
*
அந்த மனிதன் ஒரு வாரம் முழுவதும் உயிருள்ள உணவுகளான இலை, காய்கனி முதலியவற்றின் சாறுகளை மட்டும் சாப்பிட்டு உண்ணா நோன்பு இருந்தால்,
பசையில் முக்கிய ஸ்பாஞ்சைக் கழுவிச் சுத்தம் செய்த மாதி¡¢ அவனது முக்கிய உடலுறுப்புகள் எல்லாம் சுத்தமடைகின்றன.
இந்த உண்ணா நோன்பில் அவனுடைய உடலில் உள்ள ஜீவ சக்தி (Vital force) முழுவதும் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் தீவிரமாக இருக்கின்றது.
உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படும் பொழுது மனிதனுக்குச் சிறிது அசெளகா¢யம் இருக்கும். ஆகையினால் தான் ஒரு நேரம் பட்டினி இருந்தால் கூட எனக்குத் தலைவலி வந்து விடும் என்று சிலர் கூறுகின்றனர்.
அவன் பட்டினியிலிருந்து உடலை சுத்தப்படுத்த அவனுடைய ஜீவ சக்தியை உபயோகிக்காமல் மீண்டும் மீண்டும் ஓய்வு இல்லாமல் சாப்பிடுவதால், அவனுடைய ஜீவ சக்தி முழுவதும் வயிற்றில் உள்ள உணவை சீரணிக்க மட்டும் தான் பயன்படுத்தப்படுகின்றது.
ஆகையினால் அவனுடைய உடம்பிலுள்ள நோய்ப் பொருள்களான கசடுகள் வளர்ந்துகொண்டே போய் கொடிய நோயாளியாகின்றான்.
நோயாளியான இந்த மனிதன் நோய்ப் பொருள்களான கசடுகளை வெளியேற்றாமல் மருந்துகளைச் சாப்பிடுகிறான்.
தேவைக்கு அதிகமான மருந்துகள் உடம்பில் உள்ள இரத்தத்தையும் உறுப்புகளையும் விஷமாக்குகின்றன. சிறுநீரகம் பழுதடைகின்றது.
*
இதனால் எந்த மருத்துகளினாலும் குணமடைய முடியாத நோயாளியாக, மனிதன் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
சில சைவ குடும்பங்களில் மது, புகை, மாமிசம் போன்ற எந்த கெட்ட பழக்கங்கள் இல்லாவிட்டாலும், ரொமாடிஸம் என்ற கீழ்வாத நோய்களால் அவதிப்படுகின்றனர்.
அதற்குக் காரணம் அவர்கள் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் நெய், தயிர், எண்ணெயில் பொ¡¢த்து எடுத்த பலகாரங்கள் முதலியன ஆகும்.
*
இன்று உலகிலுள்ள மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான வருடங்களாகச் சமைத்த உணவைச் சாப்பிட்டு வாழ முடியுமா என்று சோதனை செய்து பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தச் சோதனையின் விளைவு தான் இன்று மனிதன் ஆயிரக்கணக்கான நோய்களுக்கு நடுவில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றான்.
உலகில் உள்ள எந்த உயி¡¢னங்களுக்கும் அவற்றின் ஆரோக்கியமான வாழ்விற்கு ஆபத்தில்லை. மனிதன் மட்டும் தான் சமைத்த உணவிற்கு அடிமையாகி, பழக்கமாகி நாவை அடக்காமல் சாவை வரவழைத்துக்கொள்கின்றான்.
இன்றைய உலகில் மனிதர்கள் சமைத்த உணவுகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்களே தவிர, இயற்கையான மரணத்தை யாரும் பெறுவதில்லை.

உடல் உறுப்புகளின் தாங்கும் திறன்
1. மனிதனுடைய உடல் உறுப்புகள் வாழ்நாள் முழுவதும் சமைத்த உணவின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டே வருகின்றன. கழிவுகளை வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன.
*
2. பல வருடங்கள் கழித்து அக்கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாத பொழுது தான் அவைகள் வேலை நிறுத்தத்தில் (Strike) ஈடுபடுகின்றன.
*
3. அதன் பிறகே புற்றுநோய், இரத்த அழுத்தம், நீ¡¢ழிவு, ஆஸ்துமா, சிறுநீரகம் வேலை செய்யாமை போன்ற நோய்கள் வருகின்றன.
*
4. இரத்தம் உடலிலிருந்து வெளியே வந்த சில நிமிடத்தில் அதில் உள்ள செல்கள் எல்லாம் இறந்துவிடுகின்றன.
*
5. அதே போல் மாமிசங்களும் கெட்டுப்போக ஆரம்பித்து நேரம் ஆக ஆக முழு விஷப் பொருட்களாக மாறிவிடுகின்றன. அதைச் சமைக்கும் பொழுது அதில் விஷப் பொருள் மேலும் அதிகா¢க்கின்றது.
*
6. மிருகங்களிலிருந்து கிடைக்கும் புரதச் சத்துக்களே மிகவும் உயர்ந்த புரதம் என்று கூறுவது தவறாகும். அப்படியென்றால் அந்த உயர்ந்த புரதம் எப்படி உருவாக்கப்பட்டது.
*
7. இலை, தழை போன்ற இயற்கை உணவுகளினால் தானே. சளி, இருமல், ஆஸ்துமா, இரத்த அழுத்தம், நீ¡¢ழிவு போன்ற நோய்களை உண்டாக்குவதற்கும் அவற்றை வளர்ப்பதற்கும் மிகவும் உதவி செய்கின்றவை.
*
8. சமைத்த உணவுகளான பால், வெண்ணெய், ஜாம், இனிப்புகள் அ¡¢சி, மீன், முட்டை, மாமிசம் முதலியவைகளே ஆகும்.
***
இயற்கை உணவு சிறிதும் தராமல், ஒரு சமயம் இங்கிலாந்தில் தண்டனை பெற்ற சிறைச்சாலைக் கைதிகளுக்கு முட்டை, மீன், மாமிசம் முதலியவைகளை மட்டும் எண்ணெயில் பொ¡¢த்துக் கொடுத்ததில் அவர்கள் 28 நாட்களுக்குள் இறந்து விட்டார்கள்.
ஆனால் பட்டினி இருக்கும் மனிதன் 70 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். மாமிச உணவுகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய விஷக்கழிவுப் பொருள்களே அந்தக் கைதிகளை விரைவில் கொன்றுவிட்டன.
பாம்பின் வாயில் விஷம் உண்டாவது போல் எல்லா மிருகங்களும் விஷத்தை உற்பத்தி செய்கின்றன. மாமிசத்திலிருந்து விஷத்தை தனியாகப் பி¡¢க்க முடியாமல் மாமிசம் சாப்பிடும் மனிதன் விஷத்தையும் சேர்த்துச் சாப்பிடுகின்றான்.
சைவ உணவுகளை விட மாமிச உணவுகளைச் சாப்பிடும் பொழுது பத்து மடங்கு அதிகமாக யூ¡¢க் அமிலம் உற்பத்தியாகின்றது.
இதை வெளியேற்ற கல்லீரல், சிறுநீரகம், இருதயம் நான்கு மடங்கு அதகமாக வேலை செய்ய வேண்டியிருக்கின்றது.
சைவ உணவு உட்கொள்வோர் வெளியேற்றும் சிறுநீரில் யூ¡¢க் அமிலம் 0.2 லிருந்து 0.7 கிராம்தான் ஒரு மணிநேரத்திற்கு.
ஆனால் மாமிச உணவு ¦¡கள்வோர் ஒரு மணி நேரத்திற்கு 2 கிராம் யூரிக் அமிலம் வெளியேற்றுகின்றனர்.
*
உருளைக் கிழங்கு, ரொட்டி, தானியங்கள், பருப்புகள் நிறைந்த சமைத்த உணவுகளும், அமிலங்களையும் விஷத்தன்மைகளையும் உற்பத்தி செய்து நோய்களை உண்டாக்குகின்றன.
தானியங்களிலும் பருப்புகளிலும் கிடைக்கும் எல்லாச் சத்துக்களையும் மிக எளிதாக, பழங்களிலிருந்தும் கொட்டைகளிலிருந்தும் (Fruits and nuts) பெற்று விடலாம்.
கொட்டைகள் என்பது இங்கே தேங்காய், முந்தி¡¢ப் பருப்பு, பாதாம் பருப்பு, அக்ரூட் பருப்பு போன்றவற்றைக் குறிக்கும். சமையல் என்பது ஒரு உபயோகமற்ற, தேவையில்லாத, நேரத்தை வீணாக்கும் செய்கையே.
அது இல்லத் தலைவிகளை இருளில் மூழ்கடித்து சமையலறைக்கு அடிமைகளாக்கி விடுகின்றது.
***
நன்றி மார்டன் தமிழ் வெல்டு.
***
" வளமுடன்"
இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்

துளசி:-
1. ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது.
2. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.
*
வில்வம்:-
1. காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது.
2. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
*
அருகம்புல்:-
1. எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு.
2. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான்.இந்த மாதி¡¢ செய்தால் எல்லா நோய்களும் குணமடையும்.
3. உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக்.
4. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகா¢க்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான்.
5. தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும்.
6. இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது.
*
அரச இலை:-
1. ஏழைகளின் டானிக் அரச இலைச்சாறு, நல்ல மலமிளக்கி, உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது.
2. காம உணர்ச்சிகளைத் தூண்டும்; கர்ப்பப்பைக் கோளாறுகள் மறையும். காய்ச்சலுக்கும் நல்லது.
3. அரசமரத்தின் பழங்கள் மலட்டுத் தன்மையை நீக்கவல்லது.
*
பூவரசு:-
1. நல்ல டானிக், தீக்காயங்கள், புண்கள், தோல் வியாதிகள், தொழுநோய் எல்லாவற்றிற்கும் இந்த இலையை அரைத்துப் பூசலாம்.
2. சாறும் குடிக்க வேண்டும். பேதி, சீதபேதிக்கு சாறு மிகவும் சிறந்தது.
*
கல்யாண முருங்கை (முள் முருங்கை):-
1. அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும்.
2. நீர் பி¡¢யும், மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும்.
3. நீ¡¢ழிவு, சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.
*
வாழைத்தண்டு:-
1. சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது.
2. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது.
3. பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effecitve in kidney disorders).
4. சிறுநீர் தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டுநாள் வாழைத்தண்டு சாறு குடிக்க வேண்டும்.
*
கொத்தமல்லி:-
1. இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும்.
2. காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
கறிவேப்பிலை:-
நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், எ¡¢ச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.
*
புதினா:-
நல்ல டானிக் சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.
*
கற்பூர வல்லி (ஓமவல்லி):- 1
1. மிகச் சிறந்த இருமல் மருந்து.
2. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும்.
3. புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் பு¡¢யும்.
*
வல்லாரை:-
1. நல்ல டானிக், எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது.
2. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.
*
கண்டங்கத்தி¡¢:-
காசநோய், ஆஸ்துமா, மார்சளி, காய்ச்சல், தொழுநோய், இரத்த அழுத்தம், பக்கவாதம், கல்லீரல் நோய்கள் முதலியவற்றிற்கு மிகவும் சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.
*
தூது வேளை:-
1. நரம்புத்தளர்ச்சி மறையும், மார்புச்சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது.
2. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக் ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.
3. காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூது வேளை நல்லது.
*
மஞ்சள் கா¢சாலங்கண்ணி:-
காமாலை, கண்கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றிற்கு சிறந்தது.
*
செம்பருத்தி:-
1. மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது.
2. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது.
3. இதன் பூக்களையும் சாப்பிடலாம் அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது. பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.
*
மணத்தக்காளி கீரை:-
1. இதுவும் ஒரு டானிக் சீரணக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது.
2. உடலுக்கு உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், குளிர் தாங்கும் சக்தியை அதிகா¢க்கிறது.
3.காயங்களுக்கும், புண்களுக்கும் இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம். World best ointment.
*
தும்பை:-
1. பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்சளி, மூட்டு வாதம் முதலியவற்றைக் குணப்படுத்த சிறந்தது.
2. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும் வாழைத் தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும்.
3. தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.
*
வெங்காயமும் பூண்டும்:-
1. கிறுமிகளை வெளியேற்றும் டானிக், சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, சைனஸ், டான்ஸில், இரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும்.
2. கொலாஸ்ட்ரால் குறையும். பச்சைப் பூண்டுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது.
*
குப்பைமேனி:-
1. ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது.
2. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும்.
3. எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்து பஊச்சலாம்.
4. சொறி சிரங்குக்கு கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும்.
5. வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்.
***
நன்றி மார்டன் தமிழ் வெல்டு.
***
கீரைகள் (100 கிராம் அளவு) சத்துக்கள்...

முளைக்கீரை :
இரும்பு 22.9 மி.கி., கால்ஷியம் 397 மி.கி., பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி சிறிதளவு உள்ளன.
ரத்த சோகையைப் போக்கும்.
(கீரையைச் சிறிது நேரமே வேகவைக்கவும்)
*
அகத்திக் கீரை :
கால்ஷியம் 1130 மைக்ரோ கிராம், இரும்பு 3.9 மி.கி., வைட்டமின் ஏ 5400 மைக்ரோ கிராம் உள்ளன.
வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன. ரத்தசோகை, எலும்பு வலுக்குறைவு ஆகிய நோய்கள் வராமல் காக்கும்.
(மூடப்பட்ட பாத்திரத்தில் வைத்துச் சமைக்கவும்)
*
பொன்னாங்கண்ணி :
இரும்பு 1.63 மி.கி, கால்ஷியம் 510 மி.கி, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன.
இரும்புச் சத்துக் குறைவால் ரத்த சோகை உண்டாகும். கால்ஷியம் குறைவால் பற்களும் எலும்பும் வலிமை குறையும்.
(பச்சைக் கீரைகளை அதிக நேரம் வதக்க வேண்டாம்)
*
பசலைக் கீரை :
வைட்டமின் ஏ 5580 மைக்ரோகிராம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு 1.14 மி.கி., பொட்டாஷியம் 306 மி.கி ஆகியவை உள்ளன.
பார்வைக் கோளாறைக் தடுக்க உதவும் வைட்டமின் ஏ உடல் சோர்வைத் தடுக்க உதவும் பொட்டாஷியச் சத்து ஆகியவை பசலைக் கீரையில் உள்ளன.
*
வெந்தியக் கீரை :
கால்ஷியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93மி.கி. உள்ளன.
பார்வைக் கோளாறு ரத்த சோகையைப் போக்கும்.
(கீரைகளை நன்கு கழுவவும்)
*
புளிச்ச கீரை :
இரும்புச் சத்து 2.28 மி.கி. வைட்டமின் ஏ 2898 மைக்ரோ கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் வைட்டமின் சி உள்ளன.
பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும்.
கீரைகள் சமைத்த நீரை கீழே ஊற்றாமல் சாம்பார், சூப் அல்லது மாவு பிசையப் பயான்படுத்தவும்
*
முட்டைகோஸ் :
வைட்டமின் சி 124 மி.கி. வைட்டமின் ஏ, ·போலிக் அமிலம், வைட்டமின் பி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை சிறிதளவு உள்ளன.
இதில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவும்.
*
முருங்கைக் கீரை :
வைட்டமின் ஏ 6780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்ஷியம் 440மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி ஆகியவை உள்ளன.
வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். எனவே முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
*
கறிவேப்பிலை :
வைட்டமின்ஏ 75000 மைக்ரோகிராம் கால்ஷியம் 830 மி.கி. ·போலிக் அமிலம் 93.9 மைக்ரோ கிராம் மற்றும் வைட்டமின் பி. சி. சிறிதளவு உள்ளன.
முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். பார்வைக் கோளாறுகளைக் தடுக்கும்.
*
புதினா கீரை :
போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்ஷியம் 200மி.கி. இரும்புச் சத்து 15.6 மி.கி. வைட்டமின்கள் ஏ.பி.சி சிறிதளவு உள்ளன.
ரத்த சோகையைப் போக்க வல்லது.
*
கொத்தமல்லி :
கால்ஷியம் 184 மி.கி. இரும்பு 1042 மி.கி, வைட்டமின் ஏ 8918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி.சி, உள்ளன.
பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்க வல்லது.
*
மணத்தக்காளி:
இரும்புச் சத்து 20.5 மி.கி., கால்ஷியம் 410 மி.கி., வைட்டமின் பி.சி உள்ளன.
வாய்ப்புண் ஏற்படுவதைக் தடுக்கும்.
***
இனி கீரை சப்பிடாதவர்கள்க்கூட கட்டாயம் கீரை சாப்பிடுவிர்கள் தான :)
***
நன்றி மார்டன் தமிழ் வெல்டு.
***
"வாழ்க வளமுடன்"
விட்டமின் மாத்திரைகள் தேவைதானா?
சாதாரணமாக மூன்று ரூபா முதல் முப்பது ரூபாய் வரை என இவை பலவகைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. தாராளமாக வாங்கிப் போடுகிறார்கள். தாராளமாக செலவு செய்கிறார்கள் ஆனால் செலவழிக்கும் பணத்திற்கு பலன் கிடைக்கிறதா?
*
இன்னொரு முறையில் சிந்தித்துப் பார்த்தால் இது ஒருவகை நாகரிக மோகம் போலாகிவிட்டதோ எனவும் தோன்றுகிறது.
*
ஏனைய பலரையும் விட, மாதவிடாய் நின்ற பின் பெண்கள் விட்டமின்களை நாடுவது அதிகம். மாதவிடாய் நின்ற பின் மாரடைப்பு புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பு அதிகமென கருதப்படுகிறது. அதைத் தடுக்க மாத்திரைகளை நாடுகிறார்கள். இதனால் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறதா?
*
மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறதா, புற்றுநோய் வராமல் காப்பாற்றுகிறதா?
இல்லை என்கிறது Archives of Internal Medicine என்ற மருத்துவ இதழ்.
*
ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான பெண்களை உள்ளடக்கிய ஆய்வின் முடிவு என 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி இதழ் கூறுகிறது.
*
ஆனால் இவற்றை உட்கொள்வதால் வேறு நோய்கள் வருகிறதா என்று கேட்டால் அதற்கும் ஆதாரம் இல்லை. அதாவது அத்தகைய விட்டமின் மாத்திரைகளால் நன்மை ஏற்படுவதாகவும் தெரியவில்லை. தீமைகள் ஏற்படுவதாகவும் தெரியவில்லை. எனவே கொடுக்கும் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என அவற்றின் பாவனையாளர்கள் தாங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டியதுதான்.
*
ஆனால் மருந்துகளை விட சாதாரணமாகக் கடைப்பிடிக்கக் கூடிய பல ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் இத்தகைய நோய்கள் வராமல் தடுக்கின்றன என்பதை மறக்கக் கூடாது.
*
உதாரணமாக:
புற்றுநோய்களையும் அழுத்தங்களையும் தடுக்க கூடிய ஒட்சிசன் (Antioxidents) எதிரிகள் காய்கறிகளிலும் பழங்களிலும் தாராளமாகக் கிடைக்கின்றன.
*
இவை இயற்கையானவை என்பதால் உடலுக்கு தீங்கற்றவை என கருதலாம். இவற்றைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொண்டால் விட்டமின் மாத்திரைகளை நாட வேண்டியதில்லை.
*
அடுத்ததாக இந் நோய்களைத் தடுக்க ஒருவர் செய்ய வேண்டியது உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியாகும்.
***
உடலுக்கு வேலை கொடுக்காது சோம்பேறியாக இருந்தால் என்ன நடக்கும் ?
எடை கூடும், நீரிழிவு, பிரஸர், கொலஸ்டரோல் போன்ற நோய்கள் தேடி வரும்.
*
உடலுளைப்பற்ற வாழ்க்கை முறையானது தசைகளைப் பலவீனப்படுத்தும் எலும்புகளை தேய்வடையச் செய்யும் என்பதையும் மறக்கக் கூடாது.
*
பெரும்பாலான விட்டமின் மாத்திரைகள், மருந்துகளாக அன்றி மேலதிக உணவு (Supplimentary Food) என்றே வகைப்படுத்தப்படுகின்றன.
*
இதனால் மருந்துகள் மீது இருப்பது போல அரசின் இறுக்கமான கட்டுப்பாடுகளோ, கண்காணிப்போ குறைவு. அத்துடன் விலைகளும் அதிகமாக இருக்கின்றன.
*
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளிலும் விளம்பரப்படுத்தக் கூடியன. எனவே கவர்ச்சியான விளம்பரங்களாலும் ஏமாந்து வீணாகச் செலவு செய்யும் நிலைமை நிலவுகிறது.
*
எனவே அடுத்த தடவை நீங்கள் விட்டமின் மருந்துகளை வாங்குமுன் இரண்டு தடவை சிந்தியுங்கள். உங்கள் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள்.
*
மாத்திரைகளுக்குப் பதிலாக உணவின் மூலம் அவற்றை எடுக்க முடியுமா என மீள பரீசிலனை செய்யுங்கள். (மாதவிடாய் நின்ற பெண்கள் ஓஸ்டியோபொரோசிஸ் நோயைத் தடுப்பதற்காக மேலதிக கல்சியம் எடுப்பது வேறு விஷயம் அதை நிறுத்த வேண்டாம்.) - டாக்டர் எம்.கே. முருகானந்தன்
***
விட்டமின் மாத்திரைகளால் எற்படும் எதிர் விளைவுகள்:
அதிக விட்டமின் மாத்திரைகளால் எற்படும் எதிர் விளைவுகள்
பிள்ளைகள் அதிகமாக விட்டமின் மாத்திரைகளை உண்பதால் பல எதிர் விளைவுகளை சந்திக்க நேருகிறது என்று புதிய ஆய்வு வெளியாகியுள்ளது.
*
விற்றமின் மாத்திரைகளில் இனிப்பை சேர்த்து தயாரிப்பதால் அதிகமான பிள்ளைகள் அவற்றை விரும்பி உண்கிறார்கள். இவ்வாறு விட்டமின் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் அவை பிள்ளைகளின் உடலில் எதிர்வினையாக செயற்பட்டு நச்சுத் தன்மையை ஏற்படுத்துகிறது.
*
ஒவ்வொரு ஐந்து பிள்ளைகளுக்கும் ஒரு பிள்ளை என்றளவில் இந்தப் பாதிப்பு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
*
ஒரு வருடத்தில் பல ஆயிரக்கணக்கான தொலைபேசிகள் விட்டமின் நஞ்சூட்டல்கள் குறித்து தமக்கு வருவதாகவும், அமெரிக்காவில் பல பிள்ளைகள் இத்தகைய பாதிப்பால் மடிந்துமுள்ளனர் என்றும் இந்த ஆய்வில் பங்கேற்ற டேனிஸ் வைத்தியர் கிம் டால்கொப் தெரிவித்தார்.
*
அளவுக்கு அதிகமாக விட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டால் உடலில் சேர முடியாத சத்துக்கள் சிறுநீராக வெளியேறிவிடும் என்ற பழைய கருத்தில் ஒரு திருத்தத்தை உண்டு பண்ணும்விதமாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.
*
விட்டமின் மாத்திரைகளை வாங்கும்போது இரும்புச்சத்து 8 மில்லி கிராமிற்கு குறைவாக இருக்கக் கூடிய மாத்திரைகளை வாங்கும்படியும், மாத்திரைகளை உயரமான இடத்தில் வைக்கும்படியும், ஒரு நாளைக்கு ஒரு மாத்திரையை மட்டுமே வழங்குங்கள் என்றும் பல அறிவுரை கூறும் இந்த ஆய்வு,
விட்டமின் மாத்திரைகளை அளவோடு உட்கொள்வதை தவறென்று கூறவில்லை என்பதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியதாகும்.
***
உணவு மருந்துகள் ( மருத்துவம் ) :
விட்டமின் மாத்திரைகளுக்கு மாற்றாக சக்தி வாய்ந்த உணவு மருந்துக்க......
1. சோர்வை அகற்றும் பழம் நான்கு பேரீச்சம் பழங்களை எடுத்து நன்கு கழுவி அரை டம்ளர் தண்ணீரில் போட்டுவிட்டு இரவில் படுக்கைக்குச் செல்லுங்கள். காலையில் கொட்டைகளை நீக்கிவிட்டு ஊறிய பேரீச்சம் பழங்களையும் அந்தத் தண்ணீரையும் அருந்துங்கள். வாரம் இரு தினங்களில் இது போல் சாப்பிட்டு வந்தால், சோம்பல் எட்டியே பார்க்காது.
மாணவ மாணவிகளுக்கு இது ஒரு சுறுசுறுப்பு டானிக்!
***
தலைவலியை முன்கூட்டியே தடுக்க முடியும்!
நமது உடலின் லைசின் என்ற அமினோ அமிலம் குறைந்தால், தலைவலிக்கு வரவேற்புக் கொடுத்த மாதிரிதான். லைசின் குறையாமல் பாதுகாத்து வருகிறது வைட்டமின் சி.
இதைத் தடுக்க தினமும் இந்த வைட்டமின் மாத்திரையை டாக்டர் யோசனைப்படி சாப்பிடலாம்.
இதைவிடச் சிறப்பு சி வைட்டமின் அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தால் தலைவலி வராது.
அந்த உணவுகள்:
பட்டாணி, சோளம், உளுத்தம் பருப்பு, முருங்கைக்கீரை மற்றும் காய், முட்டைக் கோஸ், பாகற்காய், நாட்டு நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சுச்சாறு, தேங்காய், தேங்காய்ப்பால், ஆட்டு ஈரல், பால்கோவா, நல்ல பசும்பால்
ஆகியவற்றில் போதுமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது.
***
கருத்தரிக்க வழி!
மூலிகைக் கடைகளில் அமுக்கிரா பவுடர் (இதுதான் உண்மையில் வாயாக்ராவாக உருவெடுத்துள்ளது) கிடைக்கிறது.
மாதவிலக்கு முடிந்த மறுநாளிலிருந்து தினமும் இரவில் பாலுடன் இந்தப் பவுடரில் ஆறு கிராம் பவுடரைச் சேர்த்து அருந்த வேண்டும். இதன் மூலம் கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.
*
இதற்கு ஃபோலிக் அமிலம் தேவை. அதற்காகக் கீரை வகைகளில் ஒன்றை பச்சைப் பருப்புடன் சேர்த்துக் சமைத்து பிரசவம் முடியும் வரை, தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வரவும்.
இதனால் பிரசவத்தில் தொந்தரவு இராது. ஆரோக்கியமான குழந்தையாகவும் பிறக்கும். கருத்தரிப்புத் தாமதமானால் மேற்கண்ட முறைகளுடன் தினமும் கணவனும் மனைவியும் 200 சர்வதேச அலகு வைட்டமின் ஈ மாத்திரையை சாப்பிட வேண்டும்.
***
ஜலதோஷம் தொடரக்கூடாது!
தொடர்ந்து ஜலதோஷம், மூக்கில் சளி என்றால் தொற்று நோய்க்கிருமிகள் உங்கள் மூக்கு வழியாக உடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்று பொருள்.
எனவே, இதைத் தடுக்க வைட்டமின் சி மட்டுமல்ல, வைட்டமின் உள்ள உணவுப் பொருள்களும் உடனடியாகத் தேவை.
வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவற்றை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது நல்லது. இல்லை எனில், ஜலதோஷம் குணமாகும்வரை இந்த இரு வைட்டமின்களும் தாராளமாக உள்ள.......
தட்டைப் பயறு, சோயா மொச்சை, வெண்ணெய், முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, ஆரஞ்சு, மாம்பழம், கேரட் முதலியவற்றை உணவில் நன்கு சேர்த்து வந்தால், ஜலதோஷம் குணமாகி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
***
அழகைத் தரும் கீரைகள்!
கேரட், கீரை, முள்ளங்கிக்கீரை, டர்னிப் கீரை, உலர்ந்த திராட்சைப்பழம், பப்பாளி, சீத்தாப்பழம் முதலியன உடலுக்கும் கண்களுக்கும் அழகைத் தருகின்றன.
பாதாம் பருப்பும் இந்த வகையில் உயர்வானது. தோல் சுருங்காமல், கண்கள் எரிச்சல் அடையாமல் எப்போதும் புதியனவாகக் காட்சியளிக்க இவற்றில் உள்ள ரிபோஃபிளவின் என்ற வைட்டமினே இந்தப் பணியைச் செய்கிறது.
***
மலச்சிக்கல் தீர!
காலைவரை வேறு உணவு வேண்டாம். மலச்சிக்கல் உள்ளவர்கள், ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இதே அளவு திராட்சையை வாரம் இருமுறை சாப்பிடவும்.
இதனால் குடல் முழுவதும் சுத்தமாகும். போனஸாக இதயமும் பலப்படும்!
***
www.nidur.info
***
தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போது கைகளிலே இருக்கும் , பெரும்பாலானோர் Mobile லை தண்ணீரில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு .
அப்போது என்ன செய்யவேண்டும் ...
moblie போன் சில நேரங்களில் தவறி தண்ணீரில் விழுந்தும் ,அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobile லில் இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் .
தண்ணீரில் விழுந்த Mobile லை என்ன செய்து சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம் ?
1. முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும்.
2. பிறகுதான் துணியால் நான்கு துடைத்து பிறகு அதனை வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும்.
3. அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது. நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து பிறகு உபயோகப்படுதிப்பார்க்கலாம் .
4. வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobie circuit இணைப்புகள் வெடித்தோ ,அல்லது துண்டித்துவிடவும் வைப்பு உண்டு .
5. இதனால் உங்கள் பாக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பு உண்டு.
6. எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது .. எலாவற்றிர்க்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு நல்லது ...
***
by Kathirvel.
Thanks:http://kathirpositive.blogspot.com/
http://saidapet2009.blogspot.com/2009/10/mobile.html
***
"வாழ்க வளமுடன்"
உங்கள் இனிய நண்பன் லேப்டாப் ( மடி கணிணீ )
குறைவான விலையில், அதிக திறனோடு, கூடுதல் வசதிகளோடு லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வருவதால், நீங்கள் நிச்சயமாய் ஒன்றை வாங்கியிருப்பீர்கள்.
1. முதலில் தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புகளை கம்ப்யூட்டரிலிருந்து நீக்குங்கள். இவை வெளிப்படையாக இயங்கவில்லை என்றாலும், பின்னணியில் இயங்கி, உங்கள் லேப்டாப்பின் இயங்கும் திறனைத் தாமதப்படுத்தும்.
2. உங்கள் கீழாக உள்ள உங்கள் டாஸ்க் பாரில் கடிகார நேரத்திற்கு அருகே உள்ள ஐகான்களைக் கவனியுங்கள்.
4. இந்த புரோகிராம்களை நீக்குவதால் உங்கள் ராம் மெமரியில் மற்ற புரோகிராம்கள் தாராளமாகவும் விரைவாகவும் இயங்க இடம் கிடைக்கும். ஆனால் மெமரியின் அளவு கூடாது.
5. இது மிகவும் எளிதான வேலைதான். உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே உள்ள ராம் மெமரி சிப்கள் மற்றும் அவற்றினை ஏற்றுக்கொள்ளும் போர்ட்களின் தன்மை குறித்து அறிந்து கொண்டு அதற்கான கூடுதல் மெமரி சிப்களை வாங்கி பொருத்த வேண்டியதுதான்.
11. நீங்கள் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், பேட்டரியின் திறனை அதிகப்படுத்த ஒரு இலவச புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து இயக்கலாம்.
இன்னொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையினையும் நாம் மேற்கொள்ளலாம்.
3. புத்திய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் தரப்படும் சில கூடுதல் வசதிகள் பழைய மாடல் லேப்டாப்களில் இல்லை என்பது பலரின் குறை.
5. இதே போல வீடியோ சேட்டிங் செய்திடப் பயன்படும் வெப் கேமரா, வேகமான இணையத் தேடலுக்கு மொபைல் பிராட்பேண்ட் சாதனம் ஆகியவற்றை, லேப்டாப்பின் இயக்கத்தினை நிறுத்தாமலேயே, இணைத்துப் பயன்படுத்தலாம்.
யு.எஸ்.பி.போர்ட் தவிர, இன்றைய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் வேறு வகை இணைப்பு முகங்கள் உள்ளன. உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் பக்கவாட்டில் பாருங்கள்.
6. எவ்வலவுக் கெவ்வளவு கூடுதலான நேரம் உங்கள் லேப்டாப்பினைப் பயன்படுத்து கிறீர்களோ, அந்த அளவிற்கு அது வெப்பத்தை வெளியிடும். இது போகப் போக அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
7. லேப்டாப் வேகமாகவும், சிறப்பாகவும் இயங்கினாலும் அது மற்றவர்களால் தவறான வழிகளில் பயன்படுத்தப்படக் கூடாது; மேலும் அது திருடப்படக் கூடாது என்ற இரண்டு பயம் நம்மிடம் எப்போதும் உண்டு. ஏனென்றால் எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் உள்ளதால், இது திருடு போகும் வாய்ப்பு அதிகம்.
9. உங்கள் லேப்டாப்பினை உங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். பலர் லேப்டாப்பினைச் சாதாரண லெதர் பேக்குகளில் வைத்து எடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டுள்ளனர். அல்லது சூட்கேஸ்களில் மற்ற பொருள்களுடன் வைத்து எடுத்துச் செல்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
10. இறுதியாக இன்னொன்றையும் கூற வேண்டும். லேப்டாப்பினை அப்படியே மின் சாரம் தரும் ப்ளக் ஹோலில் இணைத்துப் பயன்படுத்தலாம் என்றாலும், ஒரு சிறிய சர்ஜ் புரடக்டர் ஒன்றில் இணைத்துப் பயன்படுத்துவது நல்லது.
***
by: vayal.
நன்றி உங்களுக்காக.
***
உணவுப் பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வலைப்பக்கம் -”twofoods”

உணவுப் பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க மக்கள் எல்லாரும் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு குறித்துத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டனர்.
எந்த உணவுப் பொருளில் எத்தனை கலோரி சக்தி உள்ளது; கொழுப்புச் சத்து எவ்வளவு, புரோட்டீன் எவ்வளவு என்று அறிய ஆசைப்படுகின்றனர்.
அதற்கேற்ற வகையில் தங்கள் உணவுப் பழக்கங்களை வரையறை செய்திடவும் செய்கின்றனர். சில வேளைகளில் தாங்கள் எடுத்துக் கொள்ளும் இரண்டு உணவுப் பண்டங்களில் இந்த சத்துப் பொருட்கள் எவ்வளவு உள்ளன என்று அறிய விரும்புகின்றனர்.
அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ஒரு உணவினைத் தேர்ந்தெடுத்து தங்கள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்கின்றனர்.
இவர்களுக்கு உதவுவதற்காகவே “twofoods” என்ற இணையதளம் இயங்குகிறது.
இதில் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் காண விரும்பும் இரண்டு உணவுப் பொருட்களை அருகருகே அமைத்து என்டர் செய்தால், அந்த உணவுப் பொருட்களின் சத்து விகிதம் தனித்தனியே காட்டப்பட்டு ஒப்பீடு

அட்டவணை கிடைக்கிறது. குறிப்பிட்ட அளவில் எவ்வளவு கலோரிகள், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரோட்டீன் சத்து உள்ளதாகக் காட்டப்படுகிறது.
இதனைக் கொண்டு நாம் நம் உடல்நிலைக்கேற்ப, அல்லது டாக்டரின் ஆலோசனைக்கேற்ப உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆப்பிள்/ஆரஞ்சு,
வெள்ளை / பிரவுண் அரிசி,
கோதுமை/அரிசி,
கேழ்வரகு /அரிசி
என எந்த வகை ஒப்பீட்டிற்கும் பதில் கிடைக்கிறது.
இதனைக் காண http://www.twofoods.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
***
by: vayal.
நன்றி உங்களுக்காக.
***
"வாழ்க வளமுடன்"
மண்ணீரல் & மண்ணீரலைப் பலப்படுத்தும் உணவுகள்

மனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனிதன் நோயின்றி வாழமுடியும்.
இந்த உறுப்புகளில் மனித இயக்கத்திற்கு பிரதானமான சில உறுப்புகள் உள்ளன. அவற்றில் மண்ணீரலும் ஒன்று.
மண்ணீரலானது கல்லீரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும். நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான்.
இது ரெட்டிக்குலர் செல்கள் (Reticular cells) மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
***
மண்ணீரலின் பணிகள்:
மண்ணீரல் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடியது. மூளையின் செயல் பாடுகளையும், நரம்புகளின் தூண்டுதலையும் சீராக்குகிறது.
எண்ணங்களையும் செயல்களையும், உருவாக்குவதும், ஊக்குவிப்பதும் மண்ணீரல்தான்.
முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களை அழிக்கும் செயலே மண்ணீரலுக்கு முக்கிய வேலையாகும்.
இரத்த சிவப்பணுக்களின் செயல்பாடுகளை சீர்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் மண்ணீரலின் முக்கிய பணியாகும்.
மண்ணீரல் பாதித்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகும். சில சமயங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் கொடுத்து மாரடைப்பைக்கூட (Heart attack) ஏற்படுத்துகிறது.
நுரையீரலின் செயல் பாடுகளிலும் மண்ணீரலுக்கு பங்குண்டு.
இரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண் கிருமிகளை அழித்து சிறுநீரகத்தின் செயல் பாடுகளை தூண்டுகிறது.
அதுபோல் இரத்த ஓட்டப் பாதையில் கிருமிகள் போன்ற வெளிப் பொருட்களை வடிகட்டி வெளியேற்றும் உறுப்பாகவும் மண்ணீரல் செயல்படுகிறது.
இரத்தம் வழியாக வரும் நோய்க்கு எதிரான தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவதே மண்ணீரலின் முக்கிய பணியாகும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வியர்வை சுரப்பிகளைத் தூண்டுகிறது.
மன வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

மண்ணீரல் பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகள்:
உடம்பின் எடை அதிகரித்தல், அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாதல், நாக்கு வறண்டு விறைப்புத் தன்மையடைதல், வாயுக்களால் உடலெங்கும் வலி உண்டாதல்,
வாந்தி, உடல் பலவீனமடைதல், உடல் பாரமாக தெரிதல், கால் பகுதிகளில் வீக்கம், வலி, சாப்பிட்டவுடன் தூக்கம், எப்போதும் சோர்வு, இடுப்பு பக்கவாட்டு மடிப்புகளுடன் சதை உண்டாதல், மஞ்சள் காமாலை ஏற்படுதல், இரத்த அழுத்தம் அதிகரித்தல், சிறுநீர் சரியாக பிரியாதிருத்தல்.
***
மண்ணீரல் பாதிப்பு ஏற்படக் காரணம்:
1. மன அழுத்தம், கோபம், எரிச்சல் அடிக்கடி ஏற்படுவோர்க்கு மண்ணீரல் பாதிப்படையும்.
2· மதுப்பழக்கம், புகைப்பழக்கம், போன்ற வற்றாலும் இந்நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
3· கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல் பகுதியில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிப்படையும்.
4· இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பு காரணமாக மண்ணீரலில் பாதிப்பு உண்டாகும்.
5· இதயத்திற்கு இரத்தம் செல்வதுபோல் மண்ணீரலும் இரத்தத்தை உள்வாங்குகிறது.
6· கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் இவைகளால் மண்ணீரல் பாதிக்கப்படலாம்.
***
மண்ணீரலைப் பலப்படுத்தும் உணவுகள்:
கீரைகள், காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைத்த பயிறு, சின்ன வெங்காயம்.
கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ்.
இவற்றில் உள்ள மெத்தியோனின் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும், மண்ணீரல், பித்தநீர் சுரப்பிகளின் இயக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது.
***
நன்றி நக்கீரன்.
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6679
***
"வாழ்க வளமுடன்"
படுக்கையை நனைப்பது குட்டீஸ் மட்டுமா? ......
படுக்கையை நனைக்கும் கோளாறுக்கு மருத்துவப் பெயர் இது. பெரும்பாலும், குழந்தைகள் தான் படுக்கையை நனைப்பதுண்டு. ஐந்து, ஆறு வயதில் தானாகவே இந்த பழக்கம் நின்று விடும்!
அதற்கு பின், பத்து வயது வரை கூட சிலருக்கு படுக்கையை நனைக்கும் பழக்கம் நீடிக்கும். இன்னும் சிலருக்கோ, பெரியவனாக வளர்ந்த பின்பும் கூட, ஏன் திருமணம் ஆன பின்னும் கூட படுக்கையை நனைக்கும் பிரச்னை ஏற்படும்.
இதற்கு நோய் பாதிப்பு மற்றும் மரபு வழி தான் காரணம். பரம்பரையாக இருந்தால், அந்த வம்சத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பத்து வயது வரை கூட படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏற்படும்.
***
படுக்கையை நனைப்பதில் எத்தனை வகை? :
படுக்கையை நனைப்பதில் இரு வகை உண்டு.
1, ஆரம்ப நிலை.
2,இடையில் ஏற்படும் கோளாறு.
*
ஆரம்ப நிலை பாதிப்பு:
பிறந்ததில் இருந்தே ஏற்படும்.
*
இரண்டாவது வகை பாதிப்பு:
இரண்டு வயதில் கூட ஆரம் பிக்கும்; எப்போது நிற்கும் என்று சொல்ல முடியாது. வயதான பின், பெரும் பாலோருக்கு இந்த பாதிப்பு இல்லை.
ஒரு சதவீதம் பேருக்கு , பரம்பரையாக தொடர்வதால் இந்த பிரச்னை இருக்கக்கூடும். சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய், உடல் ரீதியான மாறுபாடுகள் போன்றவற்றால் கூட வயதான பின் படுக்கையை நனைக்கும் கோளாறு ஏற்படும்.
***
அறிகுறி என்ன? :
இதற்கு தனியாக அறிகுறி கிடையாது. படுக்கையை நனைப்பது ஆரம்பமானால் அது தான் அறிகுறி. சில குழந்தைகளுக்கு காலையில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.
இப்படிப்பட்ட குழந்தைகள் இரவில் எப்போதாவது தான் படுக்கையை நனைப்பர்.
அடிக்கடி ஜீரணம் ஆகாமல் மலச்சிக்கல் ஏற்படும் குழந்தைகளுக்கு இரவில் படுக்கையை நனைப்பது அடிக்கடி நேரும்.
***
எப்படி கண்டுபிடிப்பது? :
அடிக்கடி படுக்கையை நனைப்பதற்கு காரணம், பரம்பரையாக தொடர்வதா, வேறு கோளாறினாலா? என்பது பற்றி டாக்டர் கண்டுபிடித்து விட முடியும்.
சிறுநீர் பரிசோதனை செய்தாலே, இது தெரிந்துவிடும். ஸ்கேன் எடுத்துப்பார்த்தால் சிறுநீரக பகுதி மற்றும் உடலியலில் மாறுபாடுகள் இருப்பது பற்றி கண்டுபிடிக்கலாம். இதில் எல்லாம் கண்டுபிடிக்க முடியாவிட்டால்,
“இன்ட்ராவெனிஸ் பைலோகிராபி’ என்ற விசேஷ எக்ஸ்ரே பரிசோதனையை செய்ய வேண்டும். சிறுநீர்ப்பையில் உள்ள அழுத்தத்தை இது கண்டுபிடித்துவிடும். அதன் மூலம், கோளாறுக்கான காரணத்தை டாக்டர்களால் அறிய முடியும்.

சிகிச்சை என்ன? :
குழந்தைப்பருவத்தில் படுக்கையை நனைப்பதெல்லாம் அதிகபட்சம் ஆறு வயதில் நின்றுவிடும். ஆனால்,வேறு கோளாறு காரணமாக ஏற்படும் இந்த பழக்கத்தை நிறுத்த சில நடைமுறைகளை தான் கடைபிடிக்க வேண்டும்.
குழந்தையின் குணத்தை அறிந்து, அதற்கு ஆறுதலாக பெற்றோர் இருந்தால் போகப்போக படுக்கையை நனைப்பது குறைந்து விடும். அதுபோல, குழந்தைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
படுக்கையை நனைக்காவிட்டால் பரிசு தருவதாக கூறலாம். இப்படி செய்யாமல், தண்டித்தால் குழந்தை நிலைமை இன்னும் மோசமாகும்; படுக்கையை நனைப்பது அதிகமாகும்.
***
தடுப்பு முறை என்ன? :
மாலையில் இருந்தே திரவ உணவு அளிப்பதை நிறுத்த வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போது குழந்தைக்கு சிறுநீர் போவது குறையும்.
இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு அலாரம் வைத்துக் கொண்டு குழந்தையை எழுப்பி சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்தலாம். உணர்வு பூர்வமாக, தனிப்பட்ட காரணங்களால் கூட குழந்தைகள் இரவில் படுக்கையை நனைப்பது ஏற்படும்.
அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கவுன்சிலிங்குக்கு அழைத்துச் செல்லலாம். படுக்கையை நனைப்பதை தடுக்க மருந்துகளும் உள்ளன. அவற்றை குழந்தைகளுக்கு டாக்டர் ஆலோசனைப்படி பெற்று வழங்கலாம்.
***
எச்சரிக்கை எங்கே? :
படுக்கையை நனைப்பதை தடுப்பதற்காக மருந்துகளை வாங்கித் தருவதை கடைசி நிலையாக வைத்துக்கொள்ள வேண்டும். டாக்டர் ஆலோசனைப்படி இல்லாமல் அதை எடுத்துக்கொள்ளக்கூடாது.
இப்போது ஸ்ப்ரே வகையிலும் மருந்துகள் வந்துவிட்டன. மூக்கில் ஸ்ப்ரே செய்வது போல இதை ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும். ஆனால்,பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால் உஷாராக இருக்க வேண்டும்.
***
பெரியவர்கள் எப்படி? :
மனதில் பதட்டம், கவலை, சோர்வு போன்ற காரணங்களால், பெரியவர்கள் சிலருக்கு படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஆனால், அடிக்கடி இப்படி நேராது.
சரியான நேரத்தில் எழுந்து சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கடைபிடிக்காதவர்களுக்கு இப்படி பிரச்னைகள் வரலாம். இது போன்ற சமயத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்வது நல்லது.
டாக்டரிடம் காட்டி உரிய பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்; அலட்சியமாக இருக்கக்கூடாது.
***
“பேட்’ பயன்படுமா? :
குழந்தைகளுக்கு இப்போது பல வகையில் “பேட்’ (சிறிய பொதி போன்றது)கள் வந்துள்ளன. இவற்றை பிஞ்சுக்குழந்தைகளுக்கு பயன் படுத்தலாம்.
பெரியவர்களுக்கும் கூட இப்படி “பேட்’கள் விற்கப் படுகின்றன. இவற்றை தொடர்ந்து பயன் படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அதுவே பழக்கமாகி விடும்.
***
by: vayal.
நன்றி உங்களுக்காக.
***
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்...
பெற்றோரின் அக்கறையான கவனிப்பு, படிப்புக்கேற்ற வேலை என்று எளிதில் வாழ்க்கையில் முன்னேறி விடுவதால் விருப்பம்போல சாப்பிடுகிறார்கள்.
*
அழகாக உடை அணிந்து செல்லும் இளைய தலைமுறையினருக்கு குட்டித் தொப்பை(ஆரம்பமாவதை)யை காணமுடிகிறது.
*
இது உடலில் கொழுப்பு அதிகமாகிவிட்டதற்கான அடையாளம்.
*
இப்படி அடிவயிற்றில் கொழுப்பு படிந்த பிறகும்கூட 10-ல் 9 பேர் அதைப்பற்றிய அக்கறை இல்லாமல் அலட்சியமாக இருக்கிறார் களாம். இதனால் பல விபரீதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வு.
***
வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகம் இது தொடர்பாக ஆய்வு நடத்தியது.
12 ஆயிரம் ஐரோப்பிய இளைஞர்களிடம் செய்யப்பட்ட சோதனையில் கிடைத்த முடிவுகள் வருமாறு:
1. இளைஞர்கள் 10க்கு 9 பேர் வரை அடிவயிற்றில் சேரும் கொழுப்பைப் பற்றி சட்டை செய்வதில்லை.
*
2. இதற்கு முக்கிய காரணம் அதன் விளைவுகளைப் பார்க்கவோ, உணரவோ முடியாததுதான்.
*
3. ஆனால் இந்த அடிவயிற்றுக் கொழுப்பு நாளடைவில் வேறு சில பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
*
4. உட்புறமாக நாளங்களைச் சுற்றிப் படியும் கொழுப்பானது உடல் உஷ்ணத்துக்கு வழிவகுக்கும்.
*
5. நாளடைவில் ரத்த நாளங்களைப் பாதிக்கும். அதன் வழியாக கல்லீரலையும் தாக்கும் அபாயம் உள்ளது.
*
6. இதனால் உற்சாகக் குறைவு, உடற்பாதிப்புகள், சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
*
7. இந்த பாதிப்புகளையும் கவனிக்காமலே விட்டுவிட்டால் டைப்-2 நீரிழிவு மற்றும் இதயவியாதி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
*
8. இளைஞர்கள் சீரான இடையளவு பராமரிப்பு:
பெண்கள் 31.5 அங்குலம் (80 சென்டிமீட்டர்),
ஆண்கள் 35 அங்குலம் (90 சென்டிமீட்டர்)
*
9. இந்த சராசரி அளவை கடந்தவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும்.
*
10. நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதும்,
எண்ணெயில் பொறித்த உணவுகளையும் இறைச்சி முட்டை போன்ற உணவுகளையும் குறைய்த்துக் கொண்டு,
உடற்ப்பயிற்ச்சி செய்வதும் உடற்கொழுப்பைக் குறைக்க உதவும் .
*
வயிற்றைக் கவனிக்கும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.
***
நன்றி மாலை மலர்.
***
மாதவிடாய் டென்சன் - திர்வு !
ஹார்மோனின் வேலைகள்தான். Premenstrual Syndrome..
அதாவது, மாதவிடாயின் சில நாட்களுக்கு முன்பு ஏற்படும் சில அசௌகரியங்கள் அதற்கு பின்பு இருக்கும் மருத்துவ உண்மைகள், அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமளிக்கிறார் மகப்பேறு மருத்துவர் கீதா ஹரிப்பிரியா!
***
மாதவிடாயின் அசௌகரியங்கள் அதற்கு பின்பு இருக்கும் மருத்துவ உண்மைகள்:
சினை முட்டையை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு பெண்ணும், மாதவிடாய்க்கு முன்பு சில மாற்றங்களை அனுபவிக்கிறாள். மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் மாதவிடாய்க்கு முன்பு இருக்கும்.
*
இதனை மருத்துவம் Premenstrual Syndrome என்கிறது. அதிக சதவிகிதப் பெண்கள் உடலால் மட்டுமின்றி மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தொடர்ந்து சில நாட்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைகிறது.
*
முன்பெல்லாம் இதைச் சகித்துக் கொண்டு இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்றைய மருத்துவத்தில் இதற்குத் தேவையான மருந்துகள் வந்தாகிவிட்டது.
*
மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில், அவதிகள் காரணமாக பெண்கள் தங்கள் வேலைக்கோ, குடும்ப உறவுகளிலோ எந்தவித இடையூறுகளும் வராமல் ஜாலியாகச் சமாளிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
*
மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான்.
*
செல் அணுக்களில் நீர் தேங்கலால், உடலில் வெயிட் போட்டு விட்டது போல கனமான உணர்வு தோன்றுகிறது. தலைவலி சர்வ சாதாரணமாகப் பலருக்கும் இருக்கும்.
*
இளம் பெண்களின் ஒற்றைத் தலைவலிக்குக் காரணம், இந்த ஹார்மோனல் இம்பேலன்ஸ் தான். மேலும் பீரியட்ஸ் சமயத்தின் சில நாட்களுக்கு முன்பு முகப்பருக்கள் வரத் தொடங்கும்.
*
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், என்ட்ரோஜன் ஹார்மோன் அளவை மாற்றி, முகப்பருக்களைப் பருக்க வைத்துவிடும். உடலில் ஏற்படும் இந்தப் பிரச்னைகளின் பிரதிபலிப்பு உடல் சோர்வையும், மனப்பிரச்னைகளையும் கொடுக்கும்.
*
காரணமில்லாமல் எரிந்து விழுதல், அமைதியின்மை, மனக்கவலை, திடீரென்று அழுதல் என்று ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் பிரதிபலிப்பார்கள்...
*
வீட்டில் உள்ளவர்களும், கணவர்களும் இந்த நேரத்தில் அவர்களைப் புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்வதே அவர்களுக்குச்செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
*
பெண்களின் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டால், அவர்களுடைய உடல்நலம் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டு விடும்.
மாதவிலக்கு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும்.
*
இதை வைத்தே தீட்டு ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களும் அறிந்திருப்பார்கள். இதற்குக் காரணம் கருப்பையிலும், கரு முட்டையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான். சிலருக்கு வயிற்று வலி படாய்ப்படுத்தும்.
*
திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வலியால் சுருண்டு விடுவார்கள். நாக்கு வறண்டு போதல், வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம்.
*
மாதவிலக்கு ஏற்பட்டவுடன் வலி படிப்படியாகக் குறையலாம். கையால் பிசைவது போல வலி இருந்தால் அது கருப்பை அதிகமாக சுருங்கி விரிவதால்தான் இருக்கும்.
*
கருப்பையின் உட்சுவர் சீராகச் சிதையாமல், தாறுமாறாகச் சிதைவதால் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம். தாங்கமுடியாத வலி இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
*
ஒரு சில பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள், கரு முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் போன்றவை இருந்தால் கொஞ்சம் சீரியஸ் கவனம் தேவை.
*
கருப்பையின் உட்சுவர் திசுக்கள் கருப்பையினுள் வளர்வதுண்டு. அதேபோல, சினைக்குழாய், சினை முட்டைப்பை, வயிற்றுப் பகுதி போன்ற பகுதிகளாக வளர்ந்து எண்டோமிட்ரியோஸிஸ் எனப்படும் தொந்தரவுகளுக்கு ஆளாகலாம்.
*
எண்டோ மிட்ரியோஸிஸ் தீவிரமடைந்து சிறு குடலைப் பாதிக்கும்போது தான் மாதவிடாயின் போது வாந்தி, பேதி ஏற்பட்டுவிடுகிறது.
*
எனவே, மாதவிடாயின் போது இதுபோன்ற தீவிர பிரச்சினைகள் இருந்தால், அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதனால்கூட மாதவிடாயின் போது தீராத வலி ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் அவசியம்!
*
பொதுவாகத் தீட்டுக் கோளாறுகள் என்று நீங்கள் மருத்துவரை அணுகினால் அவர் ஹார்மோனல், இம்பாலன்ஸ் என்று தான் குறிப்பிடுவார்.
*
இந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது, ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறையினைக் குறிக்கிறது.
*
இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டை, மூளையின் அடிபாகத்தில் உள்ள பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கட்டுப்படுத்துகிறது.
*
அதுமட்டுமல்ல, இந்த பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஹைம்போதலாமஸ் எனப்படும் மூளையின் ஒரு பகுதி, இந்தப் பகுதி, உடலின் தேவையை அறிந்து அவ்வப்போது பிட்யூட்டரிக்கு கட்டளையிட்டுக் கட்டுப்படுத்தும்!
*
சாதாரணமாக ஏற்படும் மன பயம், அதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது, இந்த ஹைபோதலாமஸ் எனும் பகுதி தான்!
*
பொதுவாக, தீட்டுக் கோளாறுகளுக்கு மருத்துவர் அளிக்கும் பரிசோதனைச் சீட்டுகளைப் பாருங்கள், இந்த ஹார்மோன்களின் நிர்ணயப் பரிசோதனையாகத்தான் இருக்கும்.
*
பொதுவாக, மாதவிடாய் ஏற்படவும், முட்டை நல்ல ஆரோக்யமாக வெளிவர... சினைமுட்டைப்பை, பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் மற்றும் கருப்பை போன்றவற்றின் ஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று சீராக இருக்க வேண்டும்.
*
இதில் எந்த ஒரு உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் தீட்டுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
*
மாதவிலக்கின் முன்பு ஏற்படக்கூடிய இந்த அறிகுறிகளில் ஏற்படும் பிரச்னைகளை உட்கொள்ளும் உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம்.
***
உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம்:
1. கொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
*
2. உப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட வேண்டும்.
*
3. PMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்குமே என்றுபடும்.
*
4. சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு வெட்டு வெட்டத் தோன்றும். இருந்தாலும் இனிப்புக் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.
*
5. மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட வாக்கிங் பழகிக்கொண்டால் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கலாம்.
*
6. காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்க்கலாம். தினமும் இரண்டு கப்பிற்கு மேல் காபி, டீ, குடிக்கும் பெண்கள் சாதாரணப் பெண்களைவிட ஏழு மடங்கு றிவிஷி ஆல் அவதிப்படுவார்கள் என்கிறார்கள், ஆராச்சியாளர்கள். காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்தும்.
*
7. 7_8 மணி நேரம் உறக்கம் கட்டாயம்.
*
8. இந்தச் சமயத்தில் வைட்டமின் ஏ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், பசளைக்கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!
*
9. மார்பக வலி, களைப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற, வைட்டமின் பி6 உதவும். மீன், கோழி, வாழை, உருளை போன்றவை வைட்டமின் பி6 உள்ள உணவுகள்.
*
10. மனஅழுத்தம் நீங்க வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை சேர்த்துக் கொள்ளுங்கள்!
*
இந்த உணவுப் பழக்கங்களை மாதவிடாயின் ஒரு வாரத்துக்கு முன்பும், மாதவிடாயின் போதும் கடைப்பிடித்தல் நல்லது!
றிவிஷி லிருந்து விடுபட குடும்பத்தாரின் சப்போர்ட் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். இதுதான் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்!
***
by- ஜனனி.
நன்றி - மருத்துவர் கீதா ஹரிப்பிரியா.
நன்றி - குமுதம் ஹெல்த்
***
காலை கவனிப்பதுண்டா?
உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது கால் தான். ஆனால், இதனை பராமரிப்பதில் எத்தனை பேர் அக்கறை காட்டுகின்றனர் என்பது கேள்விக்குறி தான்.
தினமும் காலை, மாலை வேளையில் குளிக்கும் போது, காலை சுத்தமாக கழுவிக்கொள்வதில் இருந்து, வெளியில் போய் விட்டு வீடு திரும்பினால், காலை சுத்தம் செய்வது வரை மிக முக்கியமானது.
ஆனால், காலை சரியாக கூட கழுவத்தெரியாதவர்கள் இல்லாமல் இல்லை. கால் வழியாக பாக்டீரியா கிருமிகள், உடலில் புகுவதற்கு இடமுண்டு;
அதுபோல, பூச்சி கடித்து, அதன் மூலம் நோய் வரும் ஆபத்தும் உண்டு. அதனால் , கால் மீது அதிக கவனம் தேவை.
***
புறக்கணிப்பதா? :
உடலில் மற்ற பாகங்களை போல கால் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், அதை அவ்வப்போது பராமரித்து வர வேண்டும். எங்காவது இடித்துக்கொண்டாலும், புண் ஏற்பட்டாலும், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.
காலில் ஏதாவது அலர்ஜி ஏற்பட்டால், தோல் தடித்தால் கண்டுகொள்ளாமல் விட்டு விடக்கூடாது. தோல் சிகிச்சை நிபுணரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.
***
வறண்டு போவதேன்? :
கால்களில் தான் அதிகமான வியர்வை சுரப்பிகள் உள்ளன. அவற்றில் சில எண்ணெய் சுரப்பிகளும் அடங்கும். அதனால் தான் கால் எப்போதும் வறண்டதாகவே இருக்கிறது.
அதேசமயம், உள்ளங்கால்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. அதனால், எண்ணெய் பசையுடன் வியர்வை வெளியேறுவதில்லை; வறண்டு போவதும் இல்லை.
பொதுவான பாதிப்பு பெரும்பாலும் கோடை காலத்தில் கால்களில் பாதிப்பு வராது; ஆனால், மழைக் காலத்தில் தான் பாதிப்பு அதிகம். பெண்களுக்கு சேற்றுப் புண் வருவதுண்டு.
கால் விரல்களில் இடுக்குகளில் வியர்வை தங்குவதாலோ, அதிக நீர் கோர்த்தாலோ தடித்துப்போய் காளான் குடை போல பாதிப்பு வரும்.
அதிக புழுக்கம், அதிக மழை நீர் படுவதால் இப்படி ஏற்படும். சிலருக்கு சொறி, சிரங்கு போன்றவை வரும். வழக்கமாக காலுறை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும்;
பெரும்பாலும் பருத்தியினாலான காலுறைகளை அணிய வேண்டும். வியர்வை தங்காமல் இருக்கும் வகையில் அணிய பருத்தி காலுறை தான் சிறந்தது. நைலான் காலுறை அணிந்தால், அவ்வப்போது சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.
***
காலாணி வருவதேன்? :
கால் எப்போதும் உராயக்கூடியதும், அழுத்தம் ஏற்படுத்திக் கொள்வதுமாகத் தான் இருக்கும். அதனால் தான், காலாணி ஏற்படுகிறது.
மூட்டு வலி இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு காணப்படும். காலின் வெளிப்பகுதியில் உள்ள தோல் அடர்த்தியாகிறது; அதனால், வலியும் ஏற்படுகிறது. சீரான வடிவத்தில் உள்ள காலில் காலாணி வராது;
அப்படியே வந்தாலும் வலி அதிகமாக இருக்காது. அப்படியில்லாதவர்களுக்கு தான் காலாணி பாதிப்பு அதிகமாக இருக்கும். வெறுங்காலுடன் நடப்பது, காலில் அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் வேலை செய்வது, பொருத்தமில்லாத செருப்பை அணிவது போன்றவை தான் இதற்கு காரணம்.
வெதுவெதுப்பான தண்ணீரில் காலை சில நிமிடங்கள் வைத்து கொண்டால் வலி குறையும். காலாணியும் வராது.
சிலருக்கு அதிகமான வியர்வை சுரக்கும். அதனால் காலில் நாற்றம் எப்போதும் குடிகொண்டிருக்கும். காலை சுத்தம் செய்வதில் குறைபாடு, அடிக்கடி செருப்பு போடாமல் நடப்பது போன்றவற்றாலும் இது ஏற்படும்.
காலுறை மாற்றாமல் தொடர்ந்து நாலைந்து நாள் பயன்படுத்துவதாலும் கால் நாற்றம் அடிக்கும். பனியன் , ஜட்டி மாற்றுவது போல, காலுறையையும் தினமும் மாற்ற வேண்டும்.
ஆனால் இதை பலர் செய்வதில்லை. காலுறையையும், ஷூவையும் சுத்தம் செய்வதும் இல்லை.
வளைந்த நகங்கள் கைகளை போல, கால் விரல்களையும் சீராக வைத்திருக்க வேண்டும். அதற்காக அவ்வப்போது சீராக்கிக்கொள்ளவும், சுத்தம் செய்யவும் வேண்டும்.
அப்படியில்லாவிட்டால், காலில் உள்ள நகங்கள் வளைந்தும், உடைந்தும் இருக்கும். இப்படி இருந்தால் காலில் செருப்பு போட்டு நடக்க முடியாது;
நகங்கள் வளைந்து இருப்பதன் மூலம் இடுக்குகள் வழியாக கிருமிகள் நுழைந்து விடும் ஆபத்தும் ஏற்படும்.
***
எப்படிப்பட்ட காலணி? :
செருப்பு, ஷூ வாங்கி அணியும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இறுக்கமானதோ, மிகவும் பெரிதானதோ அணியக்கூடாது.
அப்படி அணிந்தால் காலுக்கு வசதியாக இல்லாதது மட்டுமின்றி, பாதிப்பையும் ஏற்படுத்தும். காலில் மிகவும் இறுக்கமான காலணியை போடக்கூடாது.
அதனால் தான் பல பிரச்னைகள் வரும். ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு சரும பாதிப்பும் வரும். காலணி போல, காலுறைகளையும் கவனமாக தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
பருத்தி காலுறையை தவிர, மற்ற வகையில் தயாரிக்கப்படும் காலுறைகளை பயன்படுத்தினாலும் தினமும் அதை மாற்ற வேண்டும்.
***
சுத்தம் முக்கியம் :
காலுக்கு எப்போதும் சுத்தம் தான் மிக முக்கியம். குளிக்கும் போதும், வெளியில் போய்விட்டு திரும்பும் போதும் முழுமையாக கால்களை அலம்ப வேண்டும்.
குதிகாலில் தண்ணீர் படாமல் சிலர் காலை கழுவுவர்; அது தவறு.
***
by: vayal.
நன்றி vayal.
***