நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன்
என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என
நினைத்தால் வலிமை படைத்தவனாக நீ ஆகிவிடுவாய்.
· அற்ப இதயமுடைய மனிதரிடமிருந்து எந்த ஒரு உருப்படியான
காரியத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆகையால் நீ கடலைக் கடக்க
விரும்பினால் இரும்பைப் போன்ற மனஉறுதி உன்னிடத்தில் இருக்க வேண்டும்.
மலைகளைத் துளைத்துச் செல்வதற்குப் போதுமான வலிமை உனக்கு இருந்தாக
வேண்டும்.
· ஒரு முகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப்
பெறலாம். இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழியாகும்.
· மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த
உறுதியான முடிவில் பிடிப்புடன் இருந்தால் பிறகு நிச்சயமாக மற்றவை
நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.
· உலக வரலாறு என்பது தன்னம்பிக்கையுள்ள, சில மனிதரின் வரலாறே
ஆகும். உள்ளே மறைந்து இருக்கும் தெய்வத்தன்மையை வெளிக்கொணரும் ஆற்றல்
தன்னம்பிக்கைக்கு உண்டு.
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Saturday, December 25, 2010
[கடி] ஜோக்ஸ்
Man1 : C-க்கு கண்டிப்பா கேன்சர் வரும், ஏன்?
Man2 : "BD"பீடி"பக்கத்தில இருந்தா கான்சர் வாராமல் பின்னை என்ன வரும்??
********************
தேளுக்கும் அருவிக்கும் என்ன ஒற்றுமை சொல்லுடா? தெரியாது நீயே சொல்லுடா... ரெண்டுமே கொட்டும்டா.
********************
Doctor : உங்க கிட்னி ஃபெயில் ஆகிடுச்சு....
Patient : நான்தான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே .Doctor... அது எப்படி ஃபெயில் ஆகும்.
*******
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்.....
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது !
********************
ஓட்டல்லே சாப்பிட்டு முடிச்சுப் பார்க்கறேன்..கையிலே காசு இல்லை..!’’
‘’அடடா! அப்புறம் என்ன பண்ணினே?’’
‘’பாக்கெட்லேர்ந்து எடுத்துக் கொடுத்தேன்’
********************
நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?
குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க...
*****************
நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?
டிராபிக் ஜாம் ஆயிடும்
*************************
சார், டீ மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?
*****************************
ஜட்ஜ்: ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..
சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்ஸ்...
ஜட்ஜ் : ஷட் அப்..
சர்தார்: இல்ல.. இல்ல.. எனக்கு செவன் அப்..
ஜட்ஜ்: ????!
*******************
லஞ்சம்
ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா,''ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,''என்று அறிவித்தார்.மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர்.அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது.அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார்.வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது.அனால் எலித்தொல்லை குறையவில்லை.இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில்தெரிய வந்தது;
பணம் கிடைக்குமே என்றுமக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்!
பணம் கிடைக்குமே என்றுமக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்!
சிரி சிரி
சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.
ராமசாமி : என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம்
குப்புசாமி : பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.
நோயாளி : டாக்டர் என் காதுக்குள் பல்லி போயிருச்சி சார்?
டாக்டர் : ஏம்பா காதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தாய்?
நோயாளி : எற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.
அருண் : சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.
போலிஷ் : இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.
நபர் 1 : இந்த டாக்டர் ரொம் மோசம். என் மனைவியை பார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்?
நபர் 2 :நீங்களாவது பரவாயில்லை, நான் போஸ்ட் மேன் போஸ்ட் டெலிவரி கொடுக்க வந்த என்னை பெட்டில் அட்மிட்ட பண்ணிவிட்டார்.
ஜோசியர் : உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?
வந்தவர் : ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம் இப்ப அதுவும் நீங்கிருச்சி.
மனைவி : பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண்ணிட்டீருந்தீங்க?
கணவன் :: இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
டாக்டர் நீங்க கொடுத்த மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டேன் உருண்டையா இருந்த பெரியகண்ணாடி மாத்திரைதான் முழுங்க சிரமமா இருந்தது.
டாக்டர் : அடப்பாவி பேப்பர் வெயிட்டை எடுத்துட்டு போனது நீதானா?
--

அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....