முருங்கைக் கீரை மனித உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்துகளையும் அளிப்பதில் காய்கறிகளும், பச்சைக் கீரைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையைப் பச்சைப் பசேல் என்று அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் மிகவும் சிறந்தது. எந்த கீரையானாலும், அவற்றைக் கழுவிய பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது சர்க்கரையைச் சேர்த்து அதில் கீரையைப் போட்டு அரைமணி நேரம் மூடி வைத்து விடவேண்டும். பின்பு கீரையை எடுத்து உப்பு, சீரகம் மட்டும் சேர்த்து வேகவைத்து மசித்து கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றைத் தாளித்துச் சாப்பிடவும். பருப்பு வேகவைத்து கீரையுடன் சேர்த்து மசித்துக் கொள்ள சுவைகூடும். முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும், உறுதியும் கிடைக்கிறது. முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக் கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும்போது, ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும். முருங்கைக் கீரை உண்பதால், தாதுபலம் பெருகுவதுடன், இரத்த அழுத்தமும் குணமாகும். கொழுப்புச் சத்து குறைவதுடன், நீரிழிவு நோயும் குணமாகிறது. முருங்கை கீரை சாப்பிடுவதால் காமாலை குறையும். கண்பார்வை தெளிவாகும்.ஆனால், மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது. சிறுகீரையுடன் சீரகம், மிளகு, சோம்பு, வெங்காயம், இஞ்சி, தக்காளி, உப்பு சேர்த்து வேக வைத்து சூப் வைத்துச் சாப்பிடலாம். கீரையைக் கடைந்து சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் சிறுகீரை சூப் தினமும் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் இயல்பாகச் சுரக்கும். போதை மருந்து, மது அருந்துதல் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள் சிறு கீரை சூப் செய்து 90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் கிட்டும். காச நோய், கண் நோய்கள், நீர்க்கடுப்பு, வீக்கம், பித்த நோய்கள், உடலில் சேரும் நச்சுத்தன்மை போன்றவை சிறுகீரை உண்பதால் நீங்கும். சிறுகீரை உடலுக்கு எழில் தருவதோடு மூளை, இதயம், குடல், ரத்தம் இவற்றிற்கு வலிமையையும் தருகிறது. ஆயுர்வேத மருந்து சாப்பிடுபவர்கள் சிறுகீரையைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது. கூடிய வரை கீரை வகைகளைச் சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருங்கள் முருங்கையில் தவசு முருங்கை, கொடி முருங்கை, நன்முருங்கை, காட்டு முருங்கை, கொடிக்கால் முருங்கை என்று பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் வீடுகளில் மரமாக இருக்கும் முருங்கையை நன்முருங்களை என்று நம் முன்னோர்கள் அழைத்து வந்துள்ளனர். முருங்கை மரத்தின் இலை, பூ, காய் ஆகியவை சிறந்த உணவாகப் பயன்படுகின்றன. இவை சிறந்த பத்திய உணவாகவும் கருதப்படுகின்றன. அதோடு முருங்கை மரத்தின் அடி முதல் முடி வரை அனைத்துப் பகுதிகளும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகின்றன. முற்றிய விதைகளை நட்டோ அல்லது முற்றிய கிளைகளை வெட்டி நட்டோ முருங்கை மரத்தை இனவிருத்தி சய்யலாம். முருங்கை மரம் சுமார் 9 மீட்டர் வரை வளரும். காற்றடித்தால் எளிதில் ஒடிந்துவிடும். முருங்கை மரம் வளர அதிக தண்ணீர் தேவையில்லை. முருங்கை இலையில் வைட்டமின் "ஏ", வைட்டமின் "சி", இரும்பு சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன. முருங்கைக் கீரையை பல முறைகளில் சமைத்துச் சாப்பிடலாம். முருங்கை இலையை சாம்பாராகவும், பொரியலாகவும், துவட்டலாகவும் செய்து சாப்பிடலாம். முருங்கைப் பூவையும் பருப்புடன் சேர்த்துச் சமைத்து உண்ணலாம். அது போலவே, முருங்கைப் பிஞ்சு, காய் ஆகியவற்றையும், சாம்பாராகவும் ரசமாகவும், அவியலாகவும், பொரியலாகவும், புளிக்குழம்பாகவும் பல வகைகளில் சமைத்துச் சாப்பிடலாம். முருங்கை இலையைப் பழுப்பு நீக்கி நன்கு ஆய்ந்து பொரியல் செய்து சாப்பிடலாம். முருங்கை இலைப் பொரியலுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறினால் அது சத்துள்ள உணவாகும். இந்த முருங்கை இலைப் பொரியலை 40 தினங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல வலிமை பெறும். தாது புஷ்டி உண்டாகும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும். உடலுக்கு அழகையும் மதர்ப்பையும் கொடுக்கும். பாலூட்டும் தாய்மார்கள் முருங்கைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். முருங்கை இலைச் சாற்றைப் பாலுடன் கலந்து கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். எலும்புகள் உறுதி அடையும். இரத்தம் சுத்தமாகும். முருங்கைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வைட்டமின் "ஏ" பற்றாக்குறை தொடர்பான கண்நாய்கள் நீங்கும். கண்கள் குளிர்ச்சியடையும். பார்வை தெளிவடையும். பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை, காமாலை போன்ற நோய்கள் குணமாகும். |
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Friday, December 24, 2010
முருங்கை மரம்
பிட்டு - 34
1. உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன். சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க, பொறையா, பிஸ்கட்டா ? ========== 2. பள்ளிக்கூட திறப்பு விழாவுக்கு நம்ம தலைவரைக் கூப்பிட்டது ரொம்பத் தப்பா போச்சு. எதனால .. ..? வகுப்பு அறைகளைப் பார்த்துட்டு, இதென்ன ரூம், ரூமா கட்டியிருக்கு, லாட்ஜா? -னு கேட்கிறாரு ========== 3. இயக்குனர்: விஜய் துப்பாக்கி சுடும் வீரராக நடிக்கிறாப்போல ஒரு படம் எடுக்கிறேன். தயாரிப்பாளர்: பேர் என்ன? இயக்குனர்:அழகிய டுமீல் மகன்! ========== 4. நண்பர்: கார்த்திக் அஜித் ஃபேன் என்பதை நிருபிச்சுட்டாண்டா... நண்பர்2: எப்படிறா? நண்பர்1: வரலாறு ல மட்டும் பாஸ் மத்த சப்ஜெக்ட்ல எல்லாம் பெயில் ஆகிட்டான். ========== 5. இயக்குனர்: நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் கதையை வச்சு ஒரு சரித்திர படம் எடுக்கப்போறேன். தயாரிப்பாளர்:பெயர் என்ன வச்சு இருக்கிங்க... இயக்குனர்: நேதாஜி - "the bose" ========== 6. உங்க பையன் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாக பேசுறான்... அப்படி என்ன பேசினான்: வெங்காயத்தை உரிச்சா கண்ணில தண்ணீர் வரும் சொன்னிங்க, பெருங்காயத்தை உரிச்சா என்ன வரும்னு கேட்கிறான்? ========== 7. கல்லூரி னு படம் வந்துச்சு அதுக்குள்ள பழனியப்பா கல்லூரினு ஒரு படம் வருதே, ரெண்டும் ஒண்ணா? படத்துக்கு கல்லூரினு பேரு வச்சாங்க ஆனா கல்லூரிக்கு பேருக்கு வைக்க மறந்துட்டாங்களாம், அதான் பழனியப்பா கல்லூரினு பேரு வச்சு கல்லூரிய திரும்பவும் ரிலீஸ் செய்றாங்க! ========== இன்றைய மெகா ஜோக்: 8. நிதி வசூலிப்பவர்:" flood donation" நிதி கேட்டா ஒரு பாட்டில் தண்ணீர் தரிங்களே! என்னை என்ன கேணைப்பயனு நினைச்சிங்களா.... "blood donation" என்று வந்திங்க ஒரு பாட்டில் ரத்தம் கேட்டிங்க கொடுத்தேன், இப்போ "flood donation" கேட்கறிங்க அதான் சரியா ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தேன்! YOGANANDHAN GANESAN |
விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு
வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம். அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது. * சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். * வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். * இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும். * கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது. * பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது. YOGANANDHAN GANESAN |
பருக்கள் மறைய
இயற்கை அழகே அழகு. சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம். சோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் கார்போக அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும். பருக்கள் மறைய
முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும். செம்பருத்திப் பூ இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதனுடன் பச்சை பயறு மாவு கலந்து குழைத்து முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம், முகக்கருமை, முகப்பரு, கழுத்துப்பகுதி கருப்பு, முகத்தில் உண்டான தழும்புகள், மூக்கில் ஏற்படும் கருப்பு போன்றவை நீங்கும். பேன் பொடுகு மாற வேப்பிலை, மருதோன்றி இலை, இரண்டையும் எடுத்து அதனுடன் சிறு துண்டு வசம்பு சேர்த்து மை போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். முடி உதிர்வது குறையும். புழுவெட்டு நீங்கும். உடல் நாற்றம் நீங்க வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ், எலுமிச்சைப் பழத்தோல் ஆகியவற்றை மெல்லிய துணியில் கட்டி தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடல் நறுமணம் உண்டாகும். நாற்றம் நீங்கும். உணவில் காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் உடல் நாற்றம் ஏற்படாது. காய்ந்த எலுமிச்சம் பழத்தோலை பொடிசெய்து அதனுடன் காய்ந்த ரோஜா இதழ் பொடி, வெட்டி வேர் (ராமிச்சம்) பொடி, இவைகளை சம அளவு எடுத்து இவற்றுடன் சிறிது சந்தனத் தூள் சேர்த்து நீரில் குழைத்து முகம் மற்றும் உடலெங்கும் பூசி குளித்து வந்தால், பித்தம் தணிந்து, பித்தச்சூடு குறைந்து வியர்வை நாற்றம் நீங்கும். YOGANANDHAN GANESAN |
கோபம் தீர
தீயவர் நடுவே
32 பற்கள் நடுவே நாக்கு இருப்பது போலத்தான் வாழ்க்கை.அந்தப் பற்கள் நம்மைக் கடிக்காமல் இருப்பது நம் வசம் உள்ளது.பற்களையும் மீறி நாக்கு வெளியே வந்து தேவையான ஐஸ் க்ரீம் சாப்பிடுவது போல நம் சூழலின் நிர்பந்தங்களை மீறி நாம் வெளியே வந்து நமக்குத் தேவையான மகிழ்ச்சிகளை அனுபவிக்கும் சாத்தியம் உண்டு.
பயிற்சி
பிரச்சினை என்ன?
மற்றவர் மீது சுமத்துவதாக நாம் நினைக்கும் குற்றச்சாட்டு உண்மையில் நம் மனதில் தான் பாரமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறது.நம் இயல்பையும் வேகத்தையும் சிதைக்கிறது
----ஞானி ஜாக்கி வாசுதேவ்
மன்னனின் மதிப்பு
மன்னர்; முல்லா!உண்மையைச் சொல்.என் மதிப்பு என்ன இருக்கும்?''
முல்லா;''பத்துப் பொற்காசுகள்,அரசே!''
மன்னர்; ''என் துண்டின் மேல் உள்ள பெல்டே பத்துப் பொற்காசுகள் பேருமே,உனக்குத் தெரியாதா?''
முல்லா; ''தெரியும் அரசே,அதனால் தான் பத்துப் பொற்காசுகள் என்றேன்!''
நீயாக இரு.
''நான் ஆக்குவதால் நீ ஆகி விட்டால் ,பிறர் அழிப்பதால்,நீ அழிந்தும் போய் விடுவாய்.என்னைக் காட்டிலும் உண்மை மிகுந்தவர்கள் இருக்கிறார்கள்.எனவே நீ நீயாகவே இரு.எவராவது உன்னை ஏதாகிலும் ஆக்கினால்,அப்படி ஆகாதே..''என்று அறிவுறுத்தினார் வினோபாஜி.
என்ன வேண்டும்?
உலகையே வெல்லப் புறப்பட்ட மகா அலெக்சாண்டர் அவர் அருகிலே வந்தார்.ஞானி அவரைக் கவனிக்க வில்லை.கால் மேல் கால் போட்டபடி சூரிய வெப்பத்தில் குளித்துக் கொண்டிருந்தார்.
''நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்,''என்றார் அவர்.
அப்படியாவென சாதாரணமாகக் கேட்டார் ஞானி.
''ஏ ஞானியே!உனக்கு என்ன வேண்டும்?கேள்;நான் தருகிறேன்.''என்றார் அலெக்சாண்டர்.
''எனக்கு ஒரே ஒரு உதவி வேண்டும்,''என்றார் ஞானி.
''என்ன வேண்டும்?பொன் வேண்டுமா,பொருள் வேண்டுமா,மாளிகை வேண்டுமா?''என்று கேட்டார் அலெக்சாண்டர்.
''அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.நீகொஞ்சம் தள்ளி விலகி நிற்க வேண்டும்.உன் நிழல் வெயிலை மறைக்கிறது.''என்றார் ஞானி.
அலெக்சாண்டரின் ஆணவத்தை ஞானியின் ஆணவம் தோற்கடித்தது.காரணம்,ஞானிக்குத் தேவை என்று எதுவும் இல்லை.
சவால்
குப்பத்துக்காரன்,''என் ஊருக்கு வாடா,என்ன நடக்கிறது பார்.''என குப்பத்துக்காரன் மிதித்தவன் ஊருக்கே வந்தான்.''உன் ஊருக்கே வந்து விட்டேன்.என்ன செய்யப் போகிறாய்?''என்று சவால் விட்டான்.
''என்னுடைய தெருவிற்கு வாடா,தெரியும்,''என்றான் குப்பத்துக்காரன்.மிதித்தவன் அவனுடைய தெருவிற்கும் வந்து விட்டான்.
''என் வீட்டு வாசற்படியை மிதித்தால் பிறகு தெரியும்.''
மிதித்தவன் குப்பத்துக்காரன் வீட்டு வாசற்படிக்கும் வந்தான்.
''என் வீட்ட்ற்குள் வந்தால் என்ன ஆகும் தெரியுமா?''
அவன் வீட்டிற்குள்ளும் நுழைந்து விட்டான்.குப்பத்துக்காரன் உடனே நெடுஞ்சாண் கிடையாக அவன் காலில் விழுந்தான்.''அண்ணே,வாங்க!நமக்குள் என்ன சண்டை?உட்காருங்க,காபி சாப்பிடுங்கோ!''என்று உபசரித்தான்.
அளவுக்கு மீறி தன்னைப் பற்றிப் பேசி அச்சத்தை உருவாக்குபவர்கள் அருகில் நெருங்கிச் சென்றால் தான் அத்தனையும் வெத்து வெட்டு என்பது தெளிவாகும்.
கழுதை லாயம்
சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பிக் காட்டினான்.அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.''எங்கே போகிறீர்?''என்று அரசன் கேட்டான்.''கழுதை லாயத்திற்கு''என்றார் அமைச்சர்.
முரட்டுத்தனம்
சாபம்
''இப்போது இருட்டி விட்டது.நாளை காலை வந்தால் தைத்துத் தருகிறேன்.''என்றான் அவன்.
''இப்போதே தைத்துக் கொடுக்க வேண்டும்.இல்லாவிடில் உன் வாய் அடைத்துப் போகும்படி சாபம் கொடுப்பேன்.''என்று பயமுறுத்தினார் சாமியார்.
''உமக்கு அவ்வளவு சக்தி இருந்தால் அறுந்து போன செருப்பை சாபம் போட்டு ஒட்டி வைத்துக் கொள்வது தானே?''என்று சொல்லி விட்டுப் போனான்,செருப்புத் தைப்பவன்.
பொய்சொல்வது
யாரிடம் குறை?
விற்றவன்; நீ விசிறியை எப்படி உபயோகிப்பது என்று தெரியாமல் உபயோகித்திருப்பாய்.அதனால் தான் சேதமாகி விட்டது.
வாங்கியவன்; எப்படி அதை உபயோகிக்க வேண்டும்?
விற்றவன்; விசிறியை உன் முகத்துக்கு நேரே பிடித்துக் கொண்டு உன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்ட வேண்டும்.அப்படி உபயோகித்தால் தான் நீண்ட காலம் என் விசிறி உழைக்கும்.என் விசிறியின் மேல் குறை இல்லை.நீ உபயோகித்த முறை தான் தவறு.
சிரமம்
''ஏன் சிரிக்கிறாய்?''என்று மிரட்டினான்.''நான் பகலில் காண முடியாத பணத்தை இரவில் கண்டு விடலாமென இவ்வளவு சிரமப்படுகிறாயே!அதை நினைத்தேன்.சிரிப்பு வந்தது.''என்றார் பால்சாக்.
தண்டனை
மரணபயம்
மரணத்தின் மகிமை
அங்கிருந்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை.இவற்றை ஏன்செய்யவேண்டும் என்று ஆர்வமுடனும் வருத்தத்துடனும் அவரையே கேட்க அவர் சொன்னார்,''நான் எத்தனை நாடுகளை வென்ற போதும் எத்தனை கோடி செல்வத்தை வாரி எடுத்த போதிலும்,இறந்தபின் நான் வெறுங் கையுடன் தான் போகிறேன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள என் கைகளை வெளியே தொங்க விட வேண்டும்.மிகச்சிறந்த மருத்துவர்கள் இருந்தாலும் சாவை வெல்ல முடியாது என்பதை உணர்த்த மருத்துவர்கள் சவ ஊர்வலத்தில் செல்ல வேண்டும்.வைரங்களும் வைடூரியங்களும் இறந்த பின் மதிப்பில்லாதவை என்பதை அறிவிக்கத்தான் அவற்றை ஊர்வலத்தில் வீசச் சொன்னேன்.''
பயமுறுத்தல்
மென்மை
வெற்றிக்கு வழி
---பெர்னாட்ஷா
பகைவன்
லிங்கன் சொன்னார்,''நட்பு கொள்ளும் போதே பகைவன் ஒழிந்து விடுகிறானே!''
ஆறுதல்
குதிரைக்காரன் காதில் அது விழுந்ததோ இல்லையோ,வேடனுக்கு ஆறுதல் கிடைத்தது.
கவலை ஏன்?
நஷ்டமா? புதிய முயற்சி செய்வோம்.
சாவா? நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
காட்சியா?கண்டு களிப்போம்.
சங்கீதமா?கேட்டு மகிழ்வோம்.
இப்படி எல்லாவற்றையும் அவற்றிற்குரிய மதிப்பளித்து ஏற்றுக் கொண்டு விட வேண்டும்.வினைகளும் அதன் விளைவுகளும் இயற்கை நியதி என்று ஆகி விட்ட பின் மனதில் தொய்வுக்கும் தாழ்ச்சிக்கும் இடம் கிடையாது.அது போல் கவர்ச்சிக்கும் எக்களிப்புக்கும் அர்த்தம் கிடையாது.மனதினை மாத்திரம் புதிதாக வைத்துக் கொள்வோம்.நாம் செய்த செயல்களையும் அதன் விளைவுகளையும் தொகுத்து வைத்துக் கொண்டு அந்தத் தொகுப்பு தான் நாம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.
குழந்தை வளர்ப்பு
நையாண்டி செய்து வளர்க்கப்படும் குழந்தை எதைக் கண்டும் வெட்கி ஒதுங்க ஆரம்பிக்கிறான்.
அவமான உணர்ச்சியோடு வளர்க்கப்படும் குழந்தை ,குற்ற உணர்வுகளுக்கு அடிமையாகிப் போகிறான்.
பொறுப்போடு வளர்க்கப்படும் குழந்தை ,நிதானத்தோடு இருக்கிறான்.
சரியான தூண்டுதலோடு வளர்க்கப்படும் குழந்தை ,தன்னம்பிக்கையோடு திகழ்கிறான்.
தக்க பாராட்டுதல்களுடன் வளர்க்கப்படும் குழந்தை நல்லவற்றை ரசிக்க கற்றுக் கொள்கிறான்.
நியாய உணர்வோடு வளர்க்கப்படும் குழந்தை நேர்மையைக் கடைப் பிடிக்கிறான்.
பாதுகாப்போடு வளர்க்கப்படும் குழந்தை மற்றவர்களை நம்பப் பழகுகிறான்.
தட்டிக் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தை தன்னையே புரிந்து கொண்டவனாக இருக்கிறான்.
அன்பு,நட்பின் அர்த்தம் புரிந்து வளர்க்கப்படும் குழந்தை நிஜமான அன்பைக் கொடுக்கவும் ,பதிலுக்கு அதைப் பெறவும் தெரிந்து கொள்வதால் ஆயுசு முழுவதும் நிம்மதியாக இருக்கும் வழியைத் தெரிந்து கொள்கிறான்.
தைரியம்
கொள்ளையன் சொன்னான்,''நாடு பிடிக்கத் தங்களுக்கு எந்த தைரியம் காரணமோ ,அதே தைரியம் தான்.''
ஆண்டவா!
மாற்றக்கூடியதை மாற்றும் தைரியத்தை எனக்குத்தா.
மாற்றக்கூடியது எது ,மாற்ற முடியாதது எது என்பதைப் பாகுபடுத்தும்
தெளிவை எனக்குத்தா,ஆண்டவனே!
உண்மையான பாசம்
''இத்தனை நாள் இல்லாது இன்று மட்டும் அழுத காரணம் என்ன?''என்று தந்தை கேட்ட போது மகன் சொன்னார்,''அப்பா,இது வரை நீங்கள் அடித்த போதெல்லாம் வலி அதிகமாக இருக்கும்.நானும் பொறுத்துக் கொள்வேன்.இன்று நீங்கள் ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை.ஐயோ,உங்கள் உடம்பில் வலு குறைந்து விட்டதே என்று எண்ணித்தான் அழுதேன்.''
---சீனக்கதை
விலை மிகுந்த பொருள்
பதவி ஆசை
திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து ,''மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?''எனக் கேட்டான்.அவனோ,''மன்னா,எனக்குத் தெரியாது.ஆனால் என் கழுதைக்குத் தெரியும்.மழை வரும் முன் அது தன காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றான்.
உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.
இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,''அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான்.என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.''
மகனுக்கு
எவரும் முற்றிலும் நேர்மையானவர் அல்லர்;உண்மையானவர் அல்லர்--இதை அவனுக்குச் சொல்லுங்கள்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் கற்றுக் கொடுங்கள்.
பெருமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
மனம் விட்டுச் சிரிக்கும் இரகசியம் அவனுக்குத் தெரியட்டும்.
டம்பப் பேச்சுக்கு அடிமை ஆவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே அறியட்டும்.
புத்தகங்களின் விரோதங்களை அவனுக்கு உணர்த்துங்கள்.
இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட ,தோற்பது கண்ணியமானது என்பதனைக் கற்றுக் கொடுங்கள்.
எத்தனை பேர் கூடி 'தவறு'என்றாலும்,சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள்.
துன்பத்தில் அவன் சிரிக்கட்டும்.அத்துடன் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.
குற்றங்குறை கூறுபவர்களை அவன் அலட்சியப் படுத்தட்டும்.அத்துடன் அளவுக்கு அதிக இனிமையுடன் பேசுபவரிடம் எச்சரிக்கையாகவும் இருக்கச் சொல்லிக் கொடுங்கள்.
உரக்கக் கத்தும் கூட்டத்திற்கு அவன் செவி சாயாமல் இருக்கட்டும்.தன மனதுக்கு 'சரி' என்று தோன்றுவதை துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
அவனை மென்மையாக நடத்துங்கள்.அதற்காகக் கட்டித் தழுவாதீர்கள்.
எப்போதும் எதிலும் ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குத் தைரியம் ஊட்டுங்கள்.தொடர்ந்து தைரியசாலியாக இருக்க விடாமுயற்சியைக் கற்றுக் கொடுங்கள்.
தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.அப்போது அவன் மனித சமுதாயம்,அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.
இவையெல்லாம் மிகப்பெரிய ,கடினமான நடைமுறைகள்தான்.ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.ஏனெனில் இனிமையான என் மகன் மிகவும் சிறியவன்.
அறத்தின் உரு
பிறன் மனைவியைப் பார்க்கும் பொது குருடனாக இரு.
கோள் சொல்லும் விசயத்தில் ஊமையாக இரு.
அப்படி இருப்பவனுக்கு நல வழிப் பாடம் போதிக்க வேண்டியதில்லை.
அவனே அறத்தின் உருவமாவான்.
----நாலடியார்.
வார்த்தை
ஒரு கடுமையான வார்த்தை ,வாழ்க்கையை முறிக்கும்.
ஒரு கசப்பான வார்த்தை ,வெறுப்பை வளர்க்கும்.
ஒரு கொடுமையான வார்த்தை,துடித்துச் சாகடிக்கும்.
ஒரு இனிமையான வார்த்தை,நல வாழ்வைக் கொடுக்கும்.
ஒரு சந்தோசமான வார்த்தை,ஒளியைக் கொடுக்கும்.
ஒரு நேரமறிந்து கூறும் வார்த்தை,கடுமையைத் தணிக்கும்.
ஒரு அன்பான வார்த்தை பாசத்தை வளர்க்கும்.
முகஸ்துதி
ஒரு நாள் டயோனிக்ஸ் தன் வீட்டில் குழம்பு வைக்க கீரையை அலசிக் கொண்டிருந்தார்.அரிஸ்டோ பஸ் அப்போது அங்கு வந்தார். ''அரசனை முகஸ்துதி செய்ய நீ தெரிந்து கொண்டால் ,இப்படிக் கீரையை சாப்பிட வேண்டிய அவசியம் வராது.,''எனச் சினந்து சொன்னார் அரிஸ்டோ பஸ் .
''நண்பனே,கீரை போன்ற எளிய உணவை சாப்பிட நீ பழகிக் கொண்டால்,அரசனை முகஸ்துதி செய்ய வேண்டிய அவசியம் வராது.''எனச் சொல்லிச் சிரித்தார் டயோனிக்ஸ்.
இயலாமை
ஆண் சிங்கம் சொன்னது,''நான் இரைக்காக ஓடினேன்.ஆனால் மான் உயிருக்காக ஓடியது.''
லட்சியம்
-----டாக்டர் உதயமூர்த்தி
சுதந்திரம்
---தத்துவ விமரிசகர் சி.இ எம் .ஜோட்
கைக்குள்
அறிஞன் புரிந்து கொண்டான்.உயிரோடிருக்கிறது என்று சொன்னால் அரசன் குஞ்சை நசுக்கிக் கொன்று விடுவான்.இறந்து விட்டது என்றால் கையைத்திறந்து பறவையைப் பறக்க விடுவான். எனவே சொன்னான்,''அரசே,அது உன் விருப்பத்தைப் பொறுத்தது.அந்தப் பறவை சிறகை விரிக்குமா அல்லது செத்து மடியுமா என்பது உன் விருப்பத்தை மட்டுமே ஒட்டிய விஷயம்.''
அது போலவே ஒருவன் வாழ்வில் உயர்வானா அல்லது உதவாக்கரை ஆவானா என்பது அவன் கைக்குள் தான் உள்ளது.
ஆதாரம்
சமூகத்தின் செல்வமும் இத்தகையதே. செல்வம் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளே தங்கி விடாமல் சமூக ஓட்டத்திற்கு வெளியே,அது மிதப்பதற்கு ஆதாரமாக அமைய வேண்டும்.
--வினோபாஜி
இனிமையோடு பழக
மற்றவர்களை அனுசரித்துப் போனால் நீங்கள் இன்னும் நன்றாக இருக்க முடியும் என்பதை உணருங்கள்.
மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் நீங்கள் இளக்கார மானவர்அல்ல என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றோ மற்றவர்களைக் காட்டிலும் கெட்டிக்காரர்களாக இருக்க முயல வேண்டும் என்றோ எண்ணி எல்லாவற்றிலும் போட்டி போட வேண்டாம்.
பேசுவது நீங்களாகவே இருக்க வேண்டும் ,கேட்பதற்கு மட்டும் மற்றவர்கள் என்று நினைக்காதீர்கள்.உரையாடலின் போது மற்றவர்கள் பேசுவதற்குக் காது
கொடுத்து அவர்கள் பேச்சைக் கவனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்டுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.
யாரிடம் பயம்?
வழி
''உனக்கு சொர்க்கம் போகும் வழி சொல்கிறேன்.''பையன் சொன்னான்,''இதோ இருக்கும் போஸ்ட் ஆபீசுக்கு வழி தெரியாத நீங்களா ,சொர்க்கத்திற்கு வழி கட்டப் போகிறீர்கள்?''
தியாகம்
''என்னிடம் இரண்டு லட்ச ரூபாய் இருந்தால் உனக்கு ஒரு லட்சம் கொடுப்பேன்.''இரண்டாமவன் சொன்னான்,''என்னிடம் இரண்டு பங்களா இருந்தால் உனக்கு ஒன்று கொடுப்பேன்.''
முதல்வன் இரண்டாமவனின் பையில் இரண்டு பேனா இருப்பதைக் கண்டு ஒன்றைக் கேட்டான்.இரண்டாமவன் முதல்வனின் பையில் இருபது ரூபாய் இருப்பதைப் பார்த்து பத்து ரூபாய் கேட்டான்.அடுத்த நிமிடம் இருவரும் அந்த இடத்தில் இல்லை.இல்லாததைக் கொடுப்பதில் தான் எவ்வளவு தியாக மனப்பான்மை?
குறை
பெண்ணும் ஒரு பேப்பரை எடுத்து முதலில் தன கணவன் செய்த நல்ல காரியங்களை யோசித்து எழுதி முடித்தாள்.அப்போது அவளுக்குத் தோன்றியது,''சே!இவ்வளவு நல்ல காரியங்கள் செய்த என் கணவரையா குறை கூறுகிறேன்?''என்று வருத்தப்பட்டாள்.
வெற்றிகள்
செஸ் மாஸ்டர் ஆனந்த்