"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது. நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!' "என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!' "இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது. YOGANANDHAN GANESAN |
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Friday, December 17, 2010
இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா : நோட்டீஸ் வினியோகத்தால் பரபரப்பு
சோர்வு
சோர்வு என்பது இயற்கையான ஒன்றுதான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்விளைவு உள்ளது போல் நல்ல புத்துணர்வு கிடைக்க சோர்வும் அவசியமாகும். அயராது உழைப்பவர்கள் சோர்வுற்று இருப்பார்கள். தூக்கமின்மையும், போதிய ஓய்வு கிடைக்காமலும் இருப்பவர்களுக்கும் சோர்வு தோன்றும். ஆனால் அந்த சோர்வே நிரந்தரமாக இருந்தால் அது ஒரு நோயாகத்தான் கருத வேண்டும். இத்தகைய சோர்வு இருவகைகளில் ஏற்படுகிறது. உடல் சோர்வாகவும், மனச் சோர்வாகவும் வெளிப்படும். உடல் சோர்வை உடற்பயிற்சி மூலமும் ஓய்வின் மூலமும் போக்கலாம். மனச் சோர்வை தியானம், யோகா மூலம் போக்கலாம். சோர்வடைய காரணங்கள் சோர்வு என்பதே உடலின் சக்தியற்ற தன்மைதான். சத்து குறைந்த தன்மையின் வெளிப்பாடே சோர்வுதான். இந்த சோர்வுக்குக் காரணம் உடல் செல்கள், சுறுசுறுப்பாக இயங்குவதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெற இயலாமல் போவதேயாகும். இவை தவிர இரத்தச் சோகை, மந்தம் போன்றவை இருப்பின் அடிக்கடி உடல் களைப்பு மேலிடும். சிலருக்கு சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப்படி ஏறினாலோ உடல் சோர்ந்து அமர்ந்து விடுவார்கள். இரத்தச் சோகை காரணமாக மிகக் குறைந்த அளவே ஆக்ஸி-ஜன் திசுக்களுக்கு செல்கிறது. இதனால் திசுக்கள் போதுமான அளவு சக்தியை பெற இயலாமல் உடலும், மனமும் களைத்துவிடுகிறது. குடற்புழுக்கள் இருந்தாலும் சோர்வு உண்டாகும். ஏனெனில் குடற்புழுக்கள் சத்துக்களை உறிஞ்சி விடுவதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். இதுபோல் குறைந்த இரத்த அழுத்தம், இரத்தத்தில் குறைந்த சர்க்கரை, நோய்த் தொற்று, கல்லீரல் பாதிப்பு போன்ற காரணங்களாலும் சோர்வு உண்டாகிறது. மனச் சோர்வு உடலை சோர்வுக்கு அழைத்துச் சென்று தீராத தொல்லையைக் கொடுப்பது மனம்தான். மனம் சோர்வுற்றால் உடலும் சோர்வுறும். ஆரோக்கிய மாக மனதை வைத்திருந்தால் தான் உடல் ஆரோக்கியத்தைப் பேணமுடியும். மனச்சிக்கல், மன இறுக்கம், மனக் கிளர்ச்சி இவைகளால் உடலில் இரத்தத்தின் வேகம் அதிகரித்து இரத்தம் சூடேறுவதால், பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளுக்குச் சென்றடைகிறது. இதனால் உடல் உறுப்புகள் அதிக சோர்வு பெறுகின்றன. இந்த சோர்வு, நாள் செல்லச் செல்ல நீடித்துக்கொண்டே போகும். பல நோய்களுக்கு இதுவே வழியாக மாறும். மேலும் சூழ்நிலைக்கேற்ப மனச் சோர்வு உண்டாகும். சில உணர்ச்சிபூர்வமான பிரச்சனைகளுக்கும் சோர்வு முக்கிய காரணமாகிறது. உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதால் அதன் வெளிப்பாடு சோர்வாகத்தான் முதலில் அமையும். சோர்வை நீக்க சோர்வைப் போக்க நாம் சில நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சோர்வு வரும் போது சிறிது ஓய்வெடுத்துக்கொள்வது நல்லது. அல்லது எந்த செயலில் ஈடுபடும்போது சோர்வு வந்ததோ அந்த செயலை சற்று நிறுத்திவிட்டு வேறு சில வேலைகளில் நம் கவனத்தை திசை திருப்பினால் அந்த சோர்வு நீங்கும். மீண்டும் நிறுத்தி வைத்த வேலையை உற்சாகமாகத் தொடரலாம் . சோர்வைப் போக்க ஓய்வு ஒரு மருந்தாகும். ஆனால் அந்த ஓய்வு நீடித்தால் அதுவே சோர்வை வளர்க்கும் விஷமாக மாறும். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி அதிகம் பார்ப்பது, அல்லது தனிமையில் அமர்ந்து தேவையற்ற சிந்தனைகளில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர்த்தால் சோர்வு ஏற்படாது. உடல் சோர்வைப் போக்க எளிய வழி உணவு முறைதான். சிலர் மூன்று வேளை உணவு சாப்பிடுவதோடு வேறு எதையும் இடையில் சாப்பிடமாட்டார்கள். இதனால் இவர்களுக்கு உணவு உண்டபின்பும் சோர்வு ஏற்படும். சாப்பிடும் முன்பும், சோர்வு ஏற்படும். ஆனால் இடையிடையே சிறிது உண்பவர்களுக்கு உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துக்கொண்டிருக்கும். வயிற்றுக்கும் வேலை சீராக கிடைக்கும். இதனால் இவர்கள் சோர்வின்றி எப்போதும் புத்துணர்வுடன் காணப்படுவார்கள். சோர்வைப் போக்க தினமும் உணவில் அதிக காய்கறிகள், கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்கள், கோதுமை ரொட்டி, முளைகட்டிய பயறு வகைகள், கீரை, சூப், காய்கறி சாலட் சாப்பிடலாம். வயிறு புடைக்க உண்பதை விட அரை வயிறு உணவே உற்சாகத்தை அளிக்க வல்லது. வலி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள், அதிக காஃபி, மது, போதை வஸ்துக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. சோர்வை நீக்க சரப்பயிற்சி சிறந்தது. சரப்பயிற்சி செய்தால் சோர்வு நீங்கும். அலுத்துப்போன உடம்பிற்கும் மனதிற்கும் சரசுவாசமே சிறந்த மருந்தாகும். சோர்வு ஏற்படும் நேரத்தில், அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து சரசுவாசம் செய்தால் உடல் புத்துணர்ச்சி அடைவதை கண்கூடாக நாம் காணலாம். உடலுக்கும் மனத்திற்கும் புத்துணர்வு தரும் எண்ணங்களையே வளர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி, யோகா, தியானம், சுவாசப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சோர்வைப் போக்க மருந்து மாத்திரைகள் தற்காலிக நிவாரணமாக இருக்குமே தவிர நிரந்தர நிவாரணம் ஆகாது. இயற்கை முறையிலும், உணவு முறை மாற்றத்தின் மூலமும் சோர்வை நீக்கி புத்துணர்வுடன் வாழ்வோமாக. YOGANANDHAN GANESAN |
அழகோ! அழகு...
அழகு என்ற சொல் தமிழுக்கு அழகு சேர்க்கும் சொல்லாகும். இயற்கை அழகு, மலை அழகு, உடல் அழகு என அழகை வர்ணித்துக்கொண்டே போகலாம். அதுபோல் மனிதர்களில் அழகு என்பது புற அழகை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. காரணம் உடலின் அகத்துள்ளே பூரிப்பு உண்டானால் அது புற அழகில் மெருகேறிவிடும்.
முக அழகையும், உடலையும் பேணி பாதுகாப்பது அவசியம். உடல்தான் மனித உயிரின் அஸ்திவாரம் ஆகும். ஒவ்வொருவரும் செயற்கை அழகை விட இயற்கை அழகை மேம்படுத்துவதே சாலச் சிறந்தது. செயற்கை அழகு சாதனப் பொருட்கள் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியவை, ஆனால் மூலிகை பொருட்களால் ஆன அழுகு சாதன பொருட்களே மேனியை மெருகூட்டும். வறண்ட சருமம் சிலருக்கு உடலில் ஒவ்வாமை காரணமாக சருமத்தில் பாதிப்பு உண்டாகி வறட்சி ஏற்படும். இதனால் புற அழகு குன்றி காணப்படுவார்கள். இந்த சரும வறட்சியை நீக்க பயிற்ற மாவு - 50 கிராம் மஞ்சள் தூள் - 5 கிராம் எலுமிச்சம் பழச்சாறு - 50 மிலி இவற்றை சேர்த்து நன்றாக கலக்கி சருமம் எங்கும் பூசி 10 நிமிடம் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் குளித்து வரவேண்டும். இக்காலங்களில் குளியல் சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மேற்கண்ட முறை வாரம் இருமுறையாவது செய்து வந்தால் வறட்சி நீங்கி சருமம் பளபளக்கும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வயிற்றில் விழும் கோடுகள் மறைய கருவுற்றிருக்கும்போது வயிறு பருக்கும். குழந்தை பிறந்த பின் வயிற்றில் சிலருக்கு வெள்ளையாக கோடுகள் விழும். இக்கோடுகள் மறைய கற்றாழை - 1 துண்டு சேர்த்து நன்றாக கலக்கி இரவு படுக்கைக்கு செல்லும் முன் வயிற்றில் பூசி வரவேண்டும். காலை எழுந்தவுடன் இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் வயிற்றில் உண்டான கோடுகள் மறையும். வெயிலில் செல்லும்போது ஏற்படும் கருமை மாற வெயிலில் அலைந்து வேலை செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் உடம்பில் வெயில் படும் இடங்களில் கருமை உண்டாகும். உடல் எண்ணெய் பசை போல் காணப்படும். இவர்கள் உருளைக்கிழங்கு சாறு - 1 ஸ்பூன் இவற்றை ஒன்றாக சேர்த்து குழைத்து கருமை உள்ள இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் கருமை நீங்கும். இளநீரை முகத்தில் தடவி வந்தால் சின்னம்மையினால் உண்டான வடுக்கள் விரைவில் மறையும். முடி உதிர்தல், செம்பட்டை முடி மாற தேங்காய் எண்ணெய் - 1 லி இவற்றை கலந்து கொதிக்க வைத்து15 நாட்கள் வெயிலில் காயவைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் மாறி, பொடுகு நீங்கும். கேசம் கருமையடையும். YOGANANDHAN GANESAN |
ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது)
ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர்பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.
உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.
இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வயதிற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது.
அதாவது ஒரு எட்டு மாதக் குழந்தையின் வளர்ச்சி எல்லையானது (mile stone) தாவழப் தொடங்குதல் .
இவ்வாறு மனிதனின் வளர்ச்சி எல்லை நான்கு முக்கிய பிரிவுகளில் நடைபெறுகிறது.
- அசைவு சம்பந்தமான வளர்ச்சி (தவழுதல், நடத்தல், ஊடுதல்)(GROSS MOTOR)
- சமூகத்தோடு ஐக்கியமாகும் வளர்ச்சி( சிரித்தல், கையசைத்தல், )(SOCIAL)
- நுணுக்கவேலைகள் மற்றும் பார்வை(FINE MOTOR)
- பேச்சு மற்றும் செவிப்புல வளர்ச்சி(SPEECH AND HEARING )
இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப் படிமுறைகளை பார்ப்போம்.
- தலைய நேராக வைத்திருத்தல் (head control ) ------- 4 மாதம்
- குழந்தை உடம்பை சுழற்றுதல்(குப்புறப் படுத்தல்) ------- 3 - 6 மாதம்
- துணையாக நாம் பிடித்துக் கொள்ளும்போது இருத்தல் -------5 மாதம்
- எந்தத் துணையும் இல்லாமல் இருத்தல் ------- 6மாதம்
- தவழுதல் -------- 8மாதம்
- எழுந்து நிற்றல் -------- 9மாதம்
- பிடித்துக் கொண்டு நடத்தல் ---------10மாதம்
- துணையின்றி நடத்தல் ---------12மாதம்
- ஓடுதல் -------- 15மாதம்
- ஒரு பந்தை உதைத்தல் -------- 24மாதம்
- மூன்று சக்கரங்களைக் கொண்ட வண்டியை மிதித்தல் --------36மாதம
மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..
அசைவு சம்பந்தமான செயற்பாடுகள்
- தலையை நிமிர்த்தி வைத்திருக்கும் திறன் .
- குப்புறப் படுத்திருக்கும் போது தலை மற்றும் நெஞ்சினை உயர்த்துதல
- அசையும் பொருள் அல்லது நபர்களை தொடர்ச்சியாக பார்த்தல்
உணர்ச்சி மற்றும் சிந்தனை சம்பந்தமானவை
- ஒலி வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புதல்
- நீங்கள் ஒலி எழுப்பி விளையாட்டுக் காட்டுவதை உணர்ந்து ரசித்தல்
- நீங்கள் சிரிக்கும் போது பதிலுக்குச் சிரித்தல்
ஆறு மாதக் குழந்தையின் திறன்கள்
அசைவு சம்பந்தமானவை
- இருத்தி வைக்கும் போது தலையை நேராக வைத்திருத்தல்
- தூரத்தில் இருக்கும் விளையாட்டுப் பொருட்களை எட்டிப் பிடித்தல்
- சூப்பிப் போத்தலைப் பிடித்து பால் குடிக்க முயற்சித்தல்
- விளையாட்டுப் பொருட்களை ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாற்றுதல்
- தானாக எழுந்து இருத்தல் உடம்பை உருட்டிக் கொண்டே அசைதல்
-
உணர்ச்சி மற்றும் எண்ணம் சம்பந்தமானவை
- சாப்படைக் கொடு போகும் போது வாயைத் திறத்தல்
- மற்றவர்கள் செய்யும் சிறிய செயல்களை திருப்பிச் செய்ய முயற்சித்தல்
- நெருக்கமானவர்களின் முகங்களை அறிந்து கொள்ளுதல்
- தொந்ததரவுக்கு உள்ளாகும் போது அழுதல்
- கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்து சிரித்தல்
ஒரு வயதுடைய குழந்தையின் திறன்கள்
அசைவு சம்பந்தப்பட்டது
- சூப்பியில் இருந்து கோப்பையினால் குடிக்கப் பழகுதல்
- சிறிய உணவுத்துண்டுகளை தானாகவே எடுத்து வாயில் வைத்துச் சாப்பிடுதல்
- துணையின்றி சில அடிகள் நடத்தல்
உணர்ச்சி சம்பந்த பட்டவை
- மற்றவர்கள் செய்யும் செயற்பாடுகளை தானும் செய்ய முயற்சித்தல்
- இசையை கேட்டு சிறிய உடல் அசைவுகளைக் காண்பித்தல்
- தூரத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்களை தேடித் போய் விளையாட முயற்சித்தல்
பேச்சு
- அம்மா அப்பா தவிர்ந்த வேறு ஒரு வார்த்தையை பேசத் தொடங்குதல்
- வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்
- மற்றவர்களோடு பேச முயற்சித்தல்
- வீட்டில் உள்ளவர்களோடு நெருக்கமாகப் பழகி வெளியாட்களோடு அன்னியத்தைக் காண்பித்தல்
- பெரியவர்கள் சொல்லும் சிறிய சிறிய கட்டளைகளை உணர்ந்து கொள்ளுதல்
-
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
கடி ஜோக்ஸ்
'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு!
குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்?
குன்னக்குடி-வயலினிஸ்ட்! காந்திஜி-non வயலினிஸ்ட்!!
தேள் திரவப்பொருளா? திடப்பொருளா?
தெரியவில்லையே
திரவப்பொருள்!'
அதெப்படி?
கொட்டுமே!
மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!
ஏன் அப்படி சொல்றே?
மயிலுக்கு தமிழ் தெரியாதே!
கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி
நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!
என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு..
பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?
ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!
என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...?
நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!
எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு...
எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.
உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?
அது 'ஈஸி' சேராச்சே!
உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?
படுத்த படுக்கையாக...
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?
தெரியலையே.... என்னது?
தலையிலே முடி இருக்கிறது தான்...!
இந்த ரோடு எங்கே போகிறது?
எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது.
எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே?
எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா....
என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு...
அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
பாகப்பிரிவினை
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
ஹி!ஹி!
காதலன்:சே!சே!உனக்காக யார் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் உன்னைக் காதலித்திருப்பேன்.இது சத்தியம்.
**********
ஒரு சிலர் தனியாக இருந்து அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள்.
ஒரு சிலர் நண்பர்களுடன் சேர்ந்து அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள்.
ஒரு சிலர் திருமணம் செய்து கொண்டு,நிகழ்வதை அதிசயமாகப் பார்க்கிறார்கள்.
**********
ஒரு அழகான பெண் ஜவுளிக் கடைக்கு வந்தாள்.ஒரு துணியைத் தேர்வு செய்து அதன் விலையைக் கேட்டாள்.கடையின் உரிமையாளர் சொன்னான்,''ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம் விலை.''அந்தப் பெண்ணும் உடனே பத்து மீட்டர் துணி தரச் சொன்னாள்.அவனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேகமாக பத்து மீட்டர் துணியை அளந்து கொடுத்தான்.அதை வாங்கிக் கொண்டு அந்தப் பெண் சொன்னாள்,''இந்தத் துணிக்கான விலையை அதோ என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா தருவார்.''
**********
ஆசிரியர்:1947 ல் என்ன நடந்தது?
மாணவன்:இந்தியா சுதந்திரம் அடைந்தது.
ஆசிரியர்:நன்று.1950 ல் என்ன நடந்தது?
மாணவன்:சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டு ஆகி இருந்தது.
**********
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....