ஆலமரம் விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது. மழை, வறட்சி இவைகளால் அதிகம் பாதிக்கப்படாதது. அதுபோல் குடும்ப உறவை விழுதுகள் போல் அனைவரும் தாங்கி வருவதற்காகவே ஆலமரத்தைச் சொல்கின்றனர். நீண்ட நெடிய பல விழுதுகளைக் கொண்டு பரந்து விரிந்து பசுமையாகக் காணப்படும் மரம்தான் ஆலமரம். மரத்தின் கிளைகளைத் தாங்கி நிற்கவே விழுதுகள் தோன்றி அவை மண்ணில் ஊன்றுகின்றன. இன்றும் கிராமங்களில் சாலைகளிலும், குளக்கரைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நிழல் தரும் மரமாகத் திகழ்கிறது. பண்டைய காலத்தில் மன்னர்கள் ஆலமரம், புங்கமரம் இவற்றை நட்டு வளர்த்தனர். அதன் பயனை பலநூறு ஆண்டுகளுக்குப் பின் நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம். ஆலமர நிழல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அரசமர நிழல் எவ்வாறு ஆரோக்கியத்தைத் தருகிறரோ அதேபோல் ஆலமர நிழலும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. இதனை இயக்கு ரோதம், காமரம், சோளி, தோல்மரம், பாமரம், பூதம், வடம், பானோக்கி என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை, பழம், பூ, விழுது, பால் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. - தேரையன் வெண்பா பொருள் - நாள்பட்ட புண்கள், மேகம், வயிற்றுக் கடுப்பு, நீரிழிவு இவைகளைப் போக்கி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்குப்பைக் உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும். அதுபோல், ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் கலந்து, கரப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போகும். ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவலாம்.
வெள்ளை படுதல் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். மேலும் அவர்கள் மெலிந்து காணப்படுவார்கள். இவர்கள் ஆலமரத்தின் சிறு வேர்ப்பட்டைகளை உரித்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து பிறப்புறுப்பின் மீது கழுவி வந்தால், வெள்ளை படுதல் குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
எலும்பு முறிவு, சுளுக்கு, இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கட்டு மீதும், சுளுக்கு, இரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், இரத்தக்கட்டு, சுளுக்கும் நீங்கும். எலும்புகள் பலமாகும்.
ஆலம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈற்றுப்புண் இவைகள் நீங்கும். இரண புண்களுக்கு இந்த நீரைக் கொண்டு கழுவலாம்.
என்பது நம் முன்னோர்களின் பழமொழி. ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் நன்கு வலுவுடன் பளிச்சிடும். ஆலம் பால் ஆடும் பற்களை உறுதிப்படுத்தும். பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நீக்கி ஈறுகளை பலப்படுத்தும். YOGANANDHAN GANESAN |
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Thursday, November 25, 2010
மரம் - ஆலமரம்
ஜோக்ஸ்
1. கண்டதும் காதலில் விழுந்தேன்; அவளோட அப்பா இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும், 'பொத்' தென காலில் விழுந்தேன்!
2. "தலைவரே, ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங்ல அடிக்கடி ஆக்சிடென்ட் நடக்குதே... இது பத்தி என்ன நினைக்கறீங்க?"
"அதான் எனக்கும் புரியல. ஆளே இல்ல; எப்படி ஆக்சிடென்ட் நடக்குது?"
3. "தலைவலின்னு ஒரு நாள் லீவ் எடுத்தே... ஓ.கே! கால் வலிக்கு ஏன் ரெண்டு நாள் லீவ் கேக்கறே?"
"தலை ஒண்ணுதான் இருக்கு; ஆனா கால் ரெண்டு இருக்கே..."
"சரி சரி... பல் வலி வராம பார்த்துக்கோ!"
4. "இந்த ஒற்றன் வேலைக்குப் புதுசா...?"
"எப்படி மன்னா கண்டுபிடித்தீர்...?"
" 'போர் அபாயம்... ஓடுங்கள்' என்று குரல் தராமல், 'கிளம்புங்கள் போர்க்களத்திற்கு' என்று உளறுகிறானே..."
5. "போர்களத்தில் முள் குத்தியதால் மன்னர் துடிக்கிறார்!"
"யாரிடமாவது குண்டூசி வாங்கி முள்ளை எடுப்பதுதானே?"
"வேண்டாம். போர்க்களத்தில் பின்வாங்கினோம் என்ற அவப்பெயர் வந்துவிடும்!"
6. "மாறுவேடத்தில் மன்னர் நகர்வலம் வந்தது வேஸ்ட் ஆகிவிட்டதா?"
"ஆமாம! 'மன்னர் மாறுவேடத்தில் வருகிறார்... பராக்... பராக்...!' என்று ஒரு சேவகன் கத்தித் தொலைத்துவிட்டான்!"
7. "அமைச்சரே! நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்?"
"போர்க்களத்தில் மண்ணையும், அந்தப்புரத்தில் பெண்ணையும் அசராமல் கவ்வும் அசகாய சூரர் என்று பேசிக்கொள்கிறார்கள், மன்னா!"
8. "மன்னா! உடனடியாக உங்கள் எடையைக் குறையுங்கள்!"
"ஏன்?"
"180-ம் கிலோத்துங்க சோழன் என்று அழைக்கிறார்கள்!"
9. "அரண்மனைக்குள் இருப்பதற்கு நேர் எதிராக மன்னர் வெளியில் இருக்கும்போது நடந்துகொள்வார்."
"எப்படி?"
"அரண்மனையில் 'யாரங்கே' என்று அதிகாரமாக கேட்பார். நகர்வலம் போக வெளியே வந்தால் 'அங்கே யாரு' என்று பம்முவார்!"
10. "புறமுதுகிட்டு ஓடிவரும்போது மன்னர் தனியாக ஓடி வராமல் வீரர்களுடன் சேர்ந்தே ஓடி வருகிறாரே?"
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைக் கடைபிடிக்கறாராம்!"
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....