* செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்கள் மிகுந்த மருத்துவப் பயன்கள் கொண்டவை. இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் உடையவை. வழுவழுப்பான தன்மை கொண்ட இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது. பூக்கள் குளிர்ச்சி பொருந்தியதால் சருமம் அழகாகும். சிவப்பு பூக்கள்தான் மருத்துவ சிறப்பு வாய்ந்தவை. செம்பருத்திப் பூவில் தங்கச் சத்து உண்டு என்று மருத்துவ சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்கிவிடும். * துளசி இலையில் புரதம், கார்போஹைட்ரேட், அமிலச் சத்துகள் மற்றும் உலோகச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. துளசி வேர்ப்பட்டைத் தூள் அரை டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும். நாக்கில் தோன்றும் எல்லாவித குறைபாட்டையும் நீக்கும் குணம் உடையது. சருமத்தை சுத்தம் செய்து மென்மை தரக்கூடியது. * வேப்பிலையை அரைத்து சாற்றை முகப்பருக்களுக்கு தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் மறையும். ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைப்போல அரைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வர, அம்மை வடு மறையும். வேப்பம்பூவை காய்ச்சி, அதனுடன் நெல்லிக்காய் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் சரும நோய்கள் நீங்கும். * கறிவேப்பிலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இது சோப்புகளில் வாசனையை நிலைக்கச் செய்யும். தலை முடி நரைப்பதைத் தடுத்து கேசத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். கறிவேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலையின் தண்டு, வேப்பிலையின் கொழுந்து சிறிது சேர்த்து அரைத்து தலையில் பூசி வந்தால் நரை மறையும். * புதினா இலைகளின் சாறு குளிர்ச்சி தரக் கூடியது. பருக்கள் மற்றும் வடுக்களுக்கு மருந்தாகவும், தோலின் வனப்பை ஊக்கப்படுத்தும் டானிக்காகவும் பயன்படுகிறது. இதன் எண்ணை சருமத்திற்கு புத்துணர்ச்சியை வழங்குகிறது. குளியல் தைலங்களிலும், இதன் பயன்பாடு அதிகம். பொடுகை அகற்றி கேசத்தின் வேர்க்கால்களில் ஊடுருவி கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. * கொத்தமல்லி இலையின் சாறை சருமத்தின் சொரசொரப்பான பகுதிகளில் காலையில் தேய்த்து, மாலையில் குளித்து வந்தால் தோல் தடிப்பு மாறி வழவழப்பாகும். கொத்தமல்லி இலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். கொத்தமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டது. வாசனைப் பொருட்களில் அதிகஅளவில் கொத்தமல்லி பயன்படுகிறது. * தேயிலையில் இருக்கும் `காபின்' என்ற பொருள் நரம்பு மண்டலத்தின் செயலை ஊக்குவிக்கிறது. கிரீன் டீ என குறிக்கப்படும் தேயிலை தற்போது அழகு சாதனப் பொருட்களில் பங்கு வகிக்கின்றது. தேயிலையில் வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நோயை தடுக்கக் கூடிய `ஆன்டி ஆக்ஸிடென்டுகள்' உள்ளன. மூளையை ஊக்கப்படுத்துதல், ஞாபக சக்தி, இளமையைத் தக்க வைத்தல், ஆரோக்கியம் ஆகியவை தேயிலைக்கு உரிய குணங்கள். பற்சிதைவு போன்ற பல் தொடர்பான நோய்களைத் தடுக்கும் வைட்டமின் சி, டி, கே மற்றும் ப்ளோரைடுகள் ஆகியவை இதில் அதிகம் உள்ளன. YOGANANDHAN GANESAN |
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Sunday, November 21, 2010
'மருத்துவ இலைகள்!'
வேர்க்கடலை சாப்பிடுவோம்!
எங்கும், எப்போதும், எளிதில் கிடைக்கும் வேர்க்கடலையில் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்துள்ளது. எனவே, குழந்தைகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது. சேயாபீன்சிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதமும், முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதமும் வேர்க்கடலையில் உள்ளது. மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன. எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது. ஒபிசிட்டி பிரச்சினை உள்ளவர்கள், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. குறைந்த அளவே உணவை சாப்பிட முடியும். இவ்வாறாக உடல் எடையையும் குறைக்கலாம். வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறதுYOGANANDHAN GANESAN |
ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்!
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
நல்ல சிந்தனைகள்
மனிதன் சூழ்நிலைக்காக படைக்கப்படவில்லை சூழ்நிலைகளே மனிதனுக்காக படைக்கப்பட்டன...
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....