படைவீரர்களின் காலை பெரேடுக்கு எட்டு பேர் சரியான நேரத்துக்கு வரவில்லை.பத்து நிமிட தாமதத்தில் ஒருவன் வந்தான்.தாமதத்திற்கான காரணத்தை அதிகாரி கேட்க அவன் சொன்னா,''என் தாயாருக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரைப் பார்த்து விட்டு வந்ததில் சிறிது தாமதமாயிற்று.பின்னர் நான் வந்த பேருந்து வழியில் ரிப்பேர் ஆகி விட்டது.எனவே ஒரு குதிரையை வாடகைக்கு பிடித்து வந்தேன்.வரும் வழியில் திடீரென குதிரை கீழே விழுந்து இறந்து விட்டது.எனவே எஞ்சிய பத்து கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே வந்தேன்.அதனால் சற்று தாமதமாகி விட்டது,''அதிகாரி அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு அவனை அனுமதித்தார்.அடுத்து இரண்டாவது ஒருவன் வந்தான்.இவனும் முதலாமவன் சொன்னது போலவே சொன்னான்.அரைகுறை மனதோடு அவனும் அனுமதிக்கப் பட்டான்.பின்னர் வந்த ஐந்து பேர் அதே காரணத்தை சொல்ல அதிகாரி ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை நிறுத்தி வைத்தார்.அப்போது எட்டாவது ஆளும் வந்து,''சார், உடல் நலமில்லாத தாயாரைப் பார்க்கப் போயிருந்தேன்பெருந்து ரிப்பேர் ஆகி விட்டது.எனவே ஒரு டாக்சியை பிடித்து வந்தேன்.''என்று ஆரம்பித்தான்.உடனே அதிகாரி,''நிறுத்து.அடுத்து டாக்சி ரிப்பேர் ஆகி விட்டது என்று சொல்லப் போகிறாய்.அப்படித்தானே?''அந்த ஆள் சொன்னான்,''இல்லை சார்,டாக்சி ரிப்பேர் ஆகவில்லை.வரும் வழியில் ஏழு குதிரைகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்ததால் அதைத் தாண்டி வரமுடிய வில்லை.எனவே அங்கிருந்து நடந்தே வந்தேன்.'' YOGANANDHAN GANESAN |
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Monday, November 8, 2010
தாமதம்
வந்தாண்டா பால்காரன்!
தண்ணீர் கலந்து பால் விற்கும் ஒருவன் முன் கடவுள் தோன்றி,பாலில் தண்ணீர் கலக்கும் காரணம் என்ன என்று கேட்டார்.அவன் சொன்னான்,''ஒரு குடம் பாலில் ஒரு குடம் தண்ணீர் கலந்தால் இரட்டிப்பாகப் பணம் கிடைக்கும்,''என்றான்.கடவுள் உடனே அவனுக்கு ஒரு குடம் பால் வரவழைத்துக் கொடுத்தார்.அவனும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு அவன் வழியே நடக்கலானான்.வேறேதேனும் வேண்டுமா எனக் கடவுள் அவனிடம் கேட்டார்.''உங்களால் முடிந்தால்...''என்று அவன் இழுக்க,''இன்னொரு குடம் பால் வேண்டுமா என்று கடவுள் கேட்டார்.அவன் சொன்னான்,''நான் அவ்வளவு பேராசைக்காரன் அல்ல.இன்னொரு குடம் தண்ணீர் கொடுத்தால் போதும்.அதை நீங்கள் கொடுத்த பாலில் ஊற்றி இரட்டிப்பாக்கி விடுவேன்.''அடுத்த நிமிடம் கடவுள் அந்த இடத்தில் நிற்க வில்லை. YOGANANDHAN GANESAN |
சிரிக்க ...
நீ ஏன் பட்டபகல்ல திருடினே ?
எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல டாக்டர் வெளியில போகக்கூடாதுன்னு சொல்லிட்டார் !
======================================================================
இப்படி தான் மச்சி ஏன் கம்பெனில வந்து நானும் மாடிகிடீன் ....நான் ஊதுறதை எனக்கே ஊதுரங்கபா
நரி ஓஓஓஒ
திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...
அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?
==========================================================================
''ஒவ்வொரு சனிக்கிழமையும், என் மனைவியைப் பார்க்க மதுரைக்குப் போய்விடுவேன்.''
'அப்போ உங்க மனைவி, சனி எப்போடா வரும்னு நினைச்சுக்கிட்டே இருப்பாங்களோ?'
*******===============================================================================
மிஸ்டர். மொக்கை ஒரு விபத்தில் சிக்கினார்.
தன்மீது மோதி படுகாயப்படுத்திய போக்குவரத்து நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். அன்று நீதிமன்றத்தில் மொக்கையின் வழக்கு கேட்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. போக்குவரத்து நிறுவனம் ஒரு பிரபல வழக்குரைஞரை நியமித்திருந்தது. குறுக்கு விசாரணைக்காக, பாதிக்கப்பட்ட மொக்கையை போ.நி. வழக்கறிஞர் கூண்டிலேற்றி விசாரிக்கிறார்.. இதுதான் இன்றைய காட்சி.
வழக்கு : விபத்து நடந்த உடனே நிகழ்விடத்துக்கு வந்த காவலர்களிடம் "நான் நன்றாக இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை.." என்று சொன்னீர்கள் அல்லவா..?
மொக்கை : அன்று என்ன நடந்தது என்று சொல்கிறேன்.. நானும் என் அன்புக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும்...
வழக்கு : (இடைமறித்து) எனக்கு அந்த விபரமெல்லாம் வேண்டாம்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னீர்களா இல்லையா..?
மொக்கை : நிகழ்வு நாளன்று நானும் என் கழுதை கல்யாணியும்..
வழக்கு : (குறுக்கிட்டு... நீதிபதியை நோக்கி..) கனம் கோர்ட்டார் அவர்களே.. விபத்து நடந்தவுடன் வந்த காவலர்களிடம் இவர் தனக்கு எதுவும் ஆகவில்லையென்று கூறியிருக்கிறார். இப்போது தீயநோக்கத்தோடு வழக்கு தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணடிக்கிறார். உடனே இவர் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்.
நீதிபதி : பொறுங்கள்.. எனக்கு அவர் கல்யாணிக் கதையைக் கேட்க ஆவலாக இருக்கிறது. மிஸ்டர்.மொக்கை.. நீங்கள் உங்கள் தரப்பு நியாயத்தைக் கூறுங்கள்..
மொக்கை : நன்றி நீதிபதி அவர்களே.. அன்று நானும் என் பாசத்துக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும் சாலை ஓரமாகச் சென்றுகொண்டிருந்தபோது, இந்த வாகனம் எங்களை மோதி தூக்கி எறிந்துவிட்டது. நாங்கள் சாலையில் பக்கத்துக்கொருவராக விழுந்தோம். எனக்கு கையிலும் காலிலும் எலும்பு முறிவு. மூன்று பற்கள் விழுந்துவிட்டன. மூக்கு நசுங்கி ரத்தம் பீறிட்டது. சாலையின் அந்தப்பக்கம் விழுந்து கிடந்த கல்யாணி, பாதி உடல் நைந்துபோய் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.
தற்செயலாக அங்கு வந்த காவல் அதிகாரி, முதலில் கழுதையைப் போய்ப்பார்த்தார். அதன் அவஸ்தையைக் காணச் சகியாமல், துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டார். அடுத்து என்னைப் பார்த்து,"உனக்கு என்ன ஆயிற்று..?" என்று கேட்டார்.. அந்தச் சூழ்நிலையில் நான் வேறு என்ன சொல்லியிருக்க முடியும் யுவர் ஆனர்..?"

===========================================================================
மொக்கை மனித வள அலுவலர். இறந்தபின் சொர்க்கம் போனார். வாயிலில் தடுக்கப்பட்டார். உங்களுக்கு நரகத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.
நரகத்துக்கு போய் ஒரு நாள் சோதனை ஓட்டமாக தங்கியிருப்பேன். பிடித்தால் தொடர்ந்து இருப்பேன். இல்லாவிட்டால் இங்கு வருவேன். இடம் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் நரகம் போனார் மொக்கை.
போய்ப் பார்த்தால், நரகமா, சொர்க்கமா என்று இருந்தது. அருவிகள், பூங்காக்கள், மான்கள், மயில்கள், இன்னிசை, ரம்பை, ஊர்வசி ஆட்டம் என்று ஜெகஜ்ஜோதியாக இருந்தது.
மகிழ்ந்த மொக்கை, திரும்ப சொர்க்க வாயிலோனிடம் வந்து, நரகத்திலேயே வசிப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.
மறுநாள்.. நரகம்..!
எங்கும் மரண ஓலம், சாம்பலும் புகையும் சூழ, கிங்கரர்கள், பாவிகளை கொத்து பரோட்டா போட்டுக்கொண்டிருக்க, மொக்கை பரிதாபமாகக் கேட்டார்..
"நேத்து பார்த்தது ஸ்கிரீன் சேவரா..?"
பதில் உடனே வந்தது,,,
இல்லை.. நேற்று உன்னை நாங்கள் ரெக்ரூட் செய்தோம்.. இன்று முதல் நீ எங்கள் பணியாள்..!
"நேத்து பார்த்தது ஸ்கிரீன் சேவரா..?"
நரகத்துக்கு போய் ஒரு நாள் சோதனை ஓட்டமாக தங்கியிருப்பேன். பிடித்தால் தொடர்ந்து இருப்பேன். இல்லாவிட்டால் இங்கு வருவேன். இடம் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் நரகம் போனார் மொக்கை.
போய்ப் பார்த்தால், நரகமா, சொர்க்கமா என்று இருந்தது. அருவிகள், பூங்காக்கள், மான்கள், மயில்கள், இன்னிசை, ரம்பை, ஊர்வசி ஆட்டம் என்று ஜெகஜ்ஜோதியாக இருந்தது.
மகிழ்ந்த மொக்கை, திரும்ப சொர்க்க வாயிலோனிடம் வந்து, நரகத்திலேயே வசிப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.
மறுநாள்.. நரகம்..!
எங்கும் மரண ஓலம், சாம்பலும் புகையும் சூழ, கிங்கரர்கள், பாவிகளை கொத்து பரோட்டா போட்டுக்கொண்டிருக்க, மொக்கை பரிதாபமாகக் கேட்டார்..
"நேத்து பார்த்தது ஸ்கிரீன் சேவரா..?"
பதில் உடனே வந்தது,,,
இல்லை.. நேற்று உன்னை நாங்கள் ரெக்ரூட் செய்தோம்.. இன்று முதல் நீ எங்கள் பணியாள்..!
இப்படி தான் மச்சி ஏன் கம்பெனில வந்து நானும் மாடிகிடீன் ....நான் ஊதுறதை எனக்கே ஊதுரங்கபா
நரி ஓஓஓஒ
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....