If Obama was an Indian Politician
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
If Obama was an Indian Politician
நான்கு பாதிரியார்கள் ஒரு இடத்தில் மகிழ்ச்சியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் சொன்னார்,''நாமெல்லாம் நல்ல நண்பர்கள்.பிறரிடம் சொல்ல முடியாத நம் பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசலாமே?''என்றார்.எல்லோரும் சம்மதிக்கவே அவர் சொன்னார்,''இப்போதெல்லாம் நான் அதிகம் குடிக்கிறேன்.அதை நிறுத்த முடியவில்லை.'' அவர் வெளிப்படையாகப் பேசியதைப் பார்த்து அடுத்தவர் தைரியம் அடைந்து ,''என்னுடைய பிரச்சினையே நான் அதிகம் சூதாடுவதுதான்.எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை.''மூன்றாமவர் சொன்னார்,''சமீப காலமாக என் கவனம் எல்லாம் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணை எப்படி அடைவது என்பதுதான்.பாவம் என்று தெரிந்தும் என் மனம் அதையே நாடுகிறது.''நான்காமவர் சொன்னார்,''என்னுடைய கெட்ட பழக்கம் என்னவென்றால்,ஏதாவது ஒரு செய்தியைக் கேள்விப்பட்டால்,அதை எல்லோரிடமும் சொல்லாமல் என்னால் இருக்க முடிவதில்லை.''மற்ற மூவரும் மயக்கம் அடையாத குறைதான். YOGANANDHAN GANESAN |
ஒரு நேர்முகத் தேர்வுக்கு ஒருவர் வந்தார்.மேனேஜர் சொன்னார்,''நாங்கள் இந்த வேலைக்கு பொறுப்பான ஒரு நபரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்,''.இளைஞன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சொன்னார்,''நான் இதற்கு முன் வேலை பார்த்த இடத்தில் என்னை அடிக்கடி பொறுப்பானவர் என்று சொல்வார்கள்,''ஆர்வமுடன் மேனேஜர்,''இன்னும் கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்களேன்.''என்று கேட்டார்.இளைஞன் சொன்னார்,''எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளில் ஏதாவது தவறாகப் போனால்,'இதற்கு நீங்கள்தான் பொறுப்பானவர்,'என்று சொல்வார்கள்.உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நான் முன்பு வேலை பார்த்த நிறுவன மேனேஜரிடம் கேட்டுப் பாருங்கள்.''; YOGANANDHAN GANESAN |
ஒருநாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதேபோல் சிறுநீர் அடிக்கடி வெளியேறக்கூடாது. ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். இதற்கு குறைந்த நேரத்தில் சிறுநீர் கழித்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும். சிறுநீரகத்தில் பிரச்சினை, மது குடித்தல், புகைப்பழக்கம், சிறுநீர் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. முதுமையில் புராஸ்டேட்(விந்து) சுரப்பி வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். ஆனால் குளுகுளு அறையில் இருப்பது, பரபரப்பாக செயல்படுவது, பதட்டத்தில் இருக்கும் நேரங்களில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அடிக்கடி ஏற்பட்டால் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை! YOGANANDHAN GANESAN |
YOGANANDHAN GANESAN |