Wednesday, May 26, 2010

அயிரை மீன்

ஒரு முறை சிவனும் பார்வதியும் வானத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு குளக்கரையில் ஒரு கொக்கு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.உடனே பார்வதி சிவனிடம்,''இந்தக் கொக்கு ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?''என்று கேட்டார்.சிவன்,''கொக்கே,உனக்கு என்ன வேண்டும்?சொர்க்கத்திற்கு வருகிறாயா?''என்று கொக்கிடம் கேட்டார்.'சொர்க்கத்தில் அயிரை மீன் கிடைக்குமா?'என்று கேட்டது கொக்கு.கிடைக்காது என்றார் சிவன்.'அப்போ,சொர்க்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.எங்கே அயிரை மீன் கிடைக்கிறதோ,அதுவே எனக்கு சொர்க்கம்.'என்றது கொக்கு.
எங்கே நமக்கு நிம்மதி கிடைக்கிறதோ,அதுவே நமக்கு சொர்க்கம்.

தள்ளாதவன்

கி.வா.ஜ.வும் அவர் நண்பர்களும் காரில் சென்று கொண்டிருந்தனர்.வழியில் கார் நின்று விட்டது.;;சரி,இறங்கித் தள்ளுங்கள்,''என்றார் ஓட்டுனர் கி.வா.ஜ.வும் இறங்கித் தள்ளச் சென்ற போது மரியாதை காரணமாக ''நீங்கள் சும்மா இருங்கள்,''என்றார் காரின் சொந்தக்காரர்.கி.வா.ஜ.,கேட்டார்,''ஏன்,நான் தள்ளாதவன் என்று நினைக்கிறீர்களா?''

இலைகள்

தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
வாழை மரம்,அரச மரம்,ஆல மரம்                   --இலை
பூமியில் வளரும் கொடிகளின் இலை           ---பூண்டு
கோரை,அறுகு இவற்றின் இலை                        ---புல்
நெல்,கேழ்வரகு இவற்றின் இலை                   --தாள்
மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள்  --தழை
சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள்          --மடல் 
நாணல்,கரும்பு இவற்றின் இலைகள்            --தோகை
தென்னை,பனை இவற்றின் இலைகள்          --ஓலை
அகத்தி,பசலை இவற்றின் இலைகள்             --கீரை