Tuesday, May 25, 2010

பந்தயம்

ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.''கடமையில் கருத்தாக இருப்பான்.ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்.''அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்துவிட்டு,'பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம்.எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?'என்று கேட்டார்.அவனோ,''எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன்.இப்போது கூட ஒரு பந்தயம்.உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன்.பந்தயம் நூறு ரூபாய்.''என்றான்.'எனக்கு முதுகில் மச்சமே கிடையாது.நீதோற்று விட்டாய்.நீயே பார்,''என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான். புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார்.''அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன்.இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்,''என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.உடன் பதில் வந்தது.''நீங்கள் தான் தோற்றுப் போய் விட்டீர்கள்.புதிய இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே  உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டிவிட்டுத்தான் அங்கு வந்தான்.வெற்றி அவனுக்குத்தான்.''

விந்தை எண்

2519  ஒரு விந்தையான எண்
இதை 9   ஆல் வகுத்தால் 8   மீதி வரும்.
இதை 8    ஆல் வகுத்தால்  7    மீதி வரும்

இதை7    ஆல் வகுத்தால்6    மீதி வரும்
இதை 6    ஆல் வகுத்தால் 5    மீதி வரும்
இதை5    ஆல் வகுத்தால்4    மீதி வரும்
இதை4    ஆல் வகுத்தால்3    மீதி வரும்
இதை3    ஆல் வகுத்தால் 2   மீதி வரும்
இதை2    ஆல் வகுத்தால்1    மீதி வரும்

சம்மதம்

அந்தரே என்பவர் இலங்கைமன்னரின் அரசவை விகடகவி.அந்தரே ஒரு முறை மன்னரைப் பழி வாங்க எண்ணினார்.அரசருக்குச் சொந்தமான வயலில் நெல் அறுவடை ஆரம்பம் ஆகியது.வைக்கோலையும் நெல்லையும் பிரிக்க காளை மாடுகள் தேவைப்பட்டன.அந்தரேயைக் கூப்பிட்டுமன்னர்,''நூறு காளைகளுக்குச் சொல்லி விடு,''என்று சொல்லி விட்டார்.மறு நாள் காலை மன்னரும் மற்றவர்களும்  காளைகளுக்காகக் காத்திருந்தனர்.ஆனால் காளைகள் வரவில்லை.மன்னர் அந்தரேயைக் கூப்பிட்டு காரணம் கேட்க, அந்தரே ,''நானே நேரே போய்,காலையில்வந்து விட வேண்டும் என்று நூறு காளைகளிடம் சொல்லி விட்டு வந்தேன்.அவை கூட வருவதாகத் தலையையும் காதுகளையும் ஆட்டி சம்மதித்தன.ஆனால் ஏன் வரவில்லை எனத் தெரியவில்லை.''என்றாரே பார்க்கலாம்!