உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Sunday, October 31, 2010
மேதைகள் விட்டுச் சென்றவை..
நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்கள் குற்றமல்ல.. ஆனால் ஏழையாகவே இறந்தால் அது உங்கள் குற்றம்தான் - பில்கேட்ஸ்
நீங்கள் எந்த பிரச்சினையையுமே சந்திக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கையில் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் - சுவாமி விவேகானந்தர்.
வெற்றி பெற மூன்று வழிகள்
ஒன்று.. மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு.. மற்றவர்களை அதிகமாக பணியாற்றுங்கள்
மூன்று... மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
-வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர்
நீங்கள் வெற்றி பெற்றால் அதைப் பற்றி யாருக்கும் விளக்க வேண்டியது இல்லை. ஆனால் நீங்கள் தோலவி அடைந்தால், அதை பற்றி விளக்க அங்கே நீங்கள் இருக்கக் கூடாது. - அடல்ப் ஹிட்லர்
உங்களோடு நீங்கள் யாரையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அப்படி நீங்கள் செய்தால், உங்களையே நீங்கள் இழிவுபடுத்திக் கொள்வதாக அர்த்தமாகும். - அலென் ஸ்டிரைக்
நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால், நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?- அன்னை தெரசா
வெற்றி பெற்றால் மற்றவர்களை விட நீங்கள் சிறந்தவர் என்று அர்த்தமாகாது, ஒரு வேலையை மற்றவர்களை விட சிறப்பாக மற்றும் மற்றவர்களை விட விரைவாக செய்ததாக அர்த்தமாகும்.- போன்னி பிளேர்
எல்லோருமே உலகத்தை மாற்ற வேண்டும் என்றுதான் எண்ணுகிறார்களேத் தவிர, ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை. - லியோ டோல்ஸ்டோய்
எல்லோரையும் நம்புவது பயங்கரமானது. ஆனால் யாரையுமே நம்பாமல் இருப்பது மிகவும் பயங்கரமானது - அப்ரகாம் லிங்கன்.
ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவாரேயானால், அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சித்ததில்லை என்று அர்த்தமாகும். - ஐன்ஸ்டீன்
நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் 4 விஷயங்களை மட்டும் உடைத்துவிடாதீர்கள். அதாவது, நம்பிக்கை, சத்தியம், உறவு, இதயம். ஏனெனில், இதில் எதையாவது உடைத்தால் அதிகமாக சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும் - சார்லஸ்
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
சிறந்த பொன்மொழிகள்
உனக்கு ஒரே நண்பன் நீயே, ஒரே பகைவனும் நீயே, உன்னைத் தவிர பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை
இயற்கை தன் வழியிலேயே செல்லும், அடக்குதல் என்ன செய்யும்.
சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை.
தூக்கத்தை ஒழித்தால் ஆயுள் விருத்தியாகும்.
அவசரமாக தவறு செய்வதை விட தாமதமாக சரியாகச் செய்வதே மேல்
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை இழக்கும் வரை அதன் மதிப்பு தெரிவதில்லை.
மற்றவர்களின் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையாதவனால் நற்செயல்களை செய்ய இயலாது.
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும்.
ஊசி முனையில் தவம் செய்தாலும் உன்னதுதான் கிட்டும்.
வியாதிக்கு மருந்து உண்டு, விதிக்கு மருந்த உண்டா
தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
நகைச்சுவை
"அவரும் சாப்பிட மாட்டார் சார்!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"நாலுவித மருந்து சாப்பிட்டும் வயித்து வலி நிக்கலை டாக்டர்..."
"அது என்னங்க நாலுவித மருந்து...?"
"போலி மருந்து, காலாவதியான மருந்து, கலப்பட மருந்து, நிஜ மருந்து"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"நம்ம தலைவர் அநியாயத்துக்கு பிரியாணி பிரியரா இருக்காரு..."
"எப்படி...?"
"மாற்றுக் கட்சிக்காரங்க வச்ச பிரியாணி விருந்துல, மாறுவேஷத்துல போய் சாப்பிட்டுட்டு வந்திருக்காரு!"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"
"ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!"
"ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அவர் பிரம்மாண்டமான பல் டாக்டர்..."
"அப்படியா...?"
"ஆமா... "பல் செட்"டுக்குக்கூட தோட்டாதரணியைக் கூப்பிடுவார்னா பார்த்துக்கோயேன்!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படித் தங்க முடியும்? கொஞ்சம் பெரிசா பாருங்களேன்!"
"யோவ், இது 'லிஃப்ட்'யா. ரூம் மாடியில இருக்கு!"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மனைவியை அடிக்கும் ஆண்களுக்கெல்லாம் என்ன தண்டனை தரலாம் மன்னா..?"
"தண்டனையாவது... உடனே அந்த வீரர்களை நம் படையில் சேர்த்துவிடுங்கள்!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"சிஸ்டர் எனக்கு வயித்துல ஆபரேஷன் பண்ணியாச்சில்ல?"
"ஆமா"
"தையல் எல்லாம் ஒழுங்காப் போட்டாச்சா?"
"போட்டாச்சு."
"ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க.... என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்."
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"என்னது.... டாஸ்மாக் பார்ல பார்த்த பையன் நல்லவனா? அவனுக்கே நம்ம பொண்ணைக் கட்டி வைக்கணுமா?"
"ஆமாம்டி. நான் கேட்காமயே அவனுடைய சைட்டிஷ்ல பாதியை எனக்குக் கொடுத்தான்!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"தலைவரே... உங்களுக்கு கம்ப்யூட்டர் பத்தி சொல்லித்தர வந்தவரை ஏன் துரத்திட்டீங்க?"
"டி.வி. பொட்டியைக் காட்டி "மானிட்டர்"னு சொல்றான். "மானிட்டர்னா சரக்குன்னு கூட தெரியாத ஒருத்தன் கிட்ட நான்
கத்துக்கறதுக்கு என்னய்யா இருக்கு...?"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மாடசாமி கிட்ட நெருங்கிப் பழகி இருக்கக்கூடாது..."
"ஏன் ஏட்டய்யா அப்படிச் சொல்றீங்க?"
"அவனோட மாட்டை ஸ்டேஷனுக்குக் கூட்டிவந்து லாடம் கட்டச் சொல்றான்!"
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"இந்த மருந்தை வெறும் வயித்துலதான் சாப்பிடணும்..."
"பனியன்கூட போட்டிருக்கக்கூடாதா டாக்டர்...?"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"எனக்கு உடம்பு முடியலைன்னதும் முதல்ல மெடிக்கல் ஷாப் தான் போனேன் டாக்டர்..."
"அங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?"
"ஆமா! உங்களைப் போய் பார்க்கச் சொன்னாங்க!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேனேஜர்: இந்த ஆபிஸூக்கு நான் மேனேஜரா? இல்லே நீ மேனேஜரா?
வேலையாள்: நீங்க கோபப்படற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலையே சார்?
மேனேஜர்: அட... அதில்லையா.. கொஞ்ச நாளா எனக்கு ஞாபக மறதியா இருக்கு. அதான் கேட்டேன்..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"கனவுல அடிக்கடி ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது..."
"யாரு... எமனா?"
"இல்லை.... தமன்னா!"
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
அறிஞர்
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
கிரிக்கெட்
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
Saturday, October 30, 2010
இன்றைய தமிழகம் !
இன்றைய தமிழகம் !
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் – "எதற்க்காக இத்தனை கஷ்ட்டப்படுகிறாய்?"
நான் கேட்டேன் – "கஷ்டப் படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?"
அவர் சிரித்தபடி சொன்னார் – "என்னைப் பார்,
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கி விடுவேன்.
போரடித்தால் வண்ணத்தொலைக்காட்சியில் திரைப்படம் பார்திடுவேன்.
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் இராஜமரியாதையுடன் !!"
"உழைக்காமல் எப்படியடா இத்தனையும் முடியும்?"
முதலாமவர் சிரித்தபடி கேட்டார் –
"நான் யார் தெரியுமா??
தமிழ் நாட்டுக் குடிமகன்."
"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய்
சமைப்பதற்க்கு எரிவாயுவும் அடுப்பும் இலவசம்.
பொழுதுபோக்கிற்கு வண்ணத்தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்
எதற்க்காக உழைக்கவேண்டும் ?"
நான் கேட்டேன் – "உன் எதிர் கால சந்ததியின் நிலை என்ன?"
பலமாக சிரித்தபடி உரைத்தார் -
"மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5,000 இலவசம் சிகிச்சையுடன் ..
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில் ..
படிப்பு சீருடையுடன் உணவும் இலவசம் முட்டையுடன்
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்..
தேவையென்றால் மிதி வண்டியும் இலவசம்.
பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை ரூபாய் 25,000 இலவசம்
ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் !!"
"தேவையென்றால் மாப்பிள்ளையுடன் செய்தித்தாளில் விளம்பரமும் இலவசம்
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்
நான் எதற்கு உழைக்க வேண்டும்??"
வியந்து போனேன் நான் !!
என் உயிர் தமிழகமே ! எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்க்கு இரண்டு பொருள் உண்டு
ஒன்று கையூட்டு , மற்றொன்று யாசகம்
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?
உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் – இலவசம் நின்று போனால் உன் நிலை என்ன ஆகும்??
உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய் !!
இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால்,
அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை
தமிழா விழித்திடு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு – அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு
நாளைய தமிழகம் நம் கையில்
உடன்பிறப்பே சிந்திப்பாயா?
மனது வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!
–தமிழன்
( இணையத்தில் படித்தது )
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
விவேகானந்தர்
இந்தியாவில் மூன்று பேர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஐந்து நிமிடத்திற்கு ஒற்றுமையுடன் செயல்படுவதில்லை.ஒவ்வொருவரும் பட்டம் பதவிகளுக்காகப் போட்டி இடுகிறார்கள்.
**********
பேச்சு...பேச்சு....எப்போதும் பேசிக்கொண்டிருப்பதே வியாதி இதை நன்கு உணர வேண்டும்.
**********
கோழைத்தனத்தை விடப் பெரியதொரு பாவம் வேறெதுவுமில்லை.கோழைகள் என்றுமே காப்பாற்றப் பட மாட்டார்கள்.
**********
வலிமையே வாழ்வு:கோழைத்தனமே மரணம்.வலிமையற்றவர்க்கு இங்கு இடமில்லை.பலவீனம் அடிமைத்தனத்தில் புகுத்தி விடும்.உடலளவிலும் உள்ளத்தளவிலும் வரக் கூடிய எல்லாத் துன்பங்களுக்கும் பலவீனமே காரணம்.
**********
தீயோர்களுக்கு உலகம் நரகமாகத் தெரிகிறது.நல்லோருக்கு சுவர்க்கமாகத் தெரிகிறது.அருளாளருக்கு அருள் வடிவமாகத் தெரிகிறது.பகை உணர்ச்சி உடையவர்களுக்கு வெறுப்பு மயமாகத் தெரிகிறது.சண்டை சச்சரவு இடுபவர்களுக்கு போர்க்களமாகத் தெரிகிறது.அமைதியானவர்களுக்கு அமைதிக் களஞ்சியமாகத் தெரிகிறது.முழுமையுற்ற மனிதனுக்கு தெய்வமாகத் தெரிகிறது.
**********
ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுக்க முடியும் என்றா நீ நினைக்கிறாய்?அது தானாகவே கற்றுக் கொள்ளும்.வாய்ப்புகளை உண்டாக்கித் தருவது,இடர்ப்பாடுகளை நீக்குவதுதான் உன் கடமை.
**********
உங்கள் சாத்திரங்களைக் கங்கையில் எறிந்துவிட்டு பாமர ஏழை மக்களுக்கு உண்ண உணவும்,உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.அவர்களுடைய உலக வாழ்க்கைத் தேவைகள் தீர்க்கப் பட்டாலொழிய நீங்கள் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.
**********
நீங்கள் கற்ற லட்சணம் தான் என்ன?மாற்றான் மொழியில் மற்றவர் கருத்துக்களை மனப்பாடம் செய்து மூளையில் அவற்றைத் திணித்து வைத்துப் பிறகு ஒரு சில பட்டங்களைப் பெற்றதனால் மெத்தப் படித்தவர் என்ற எண்ணம் உங்களுக்கு!இதுவா கல்வி?
**********
தனக்கு எது தேவையோ,அதை இறைவன் தந்தருளவில்லை என்ற காரணத்தினால் உலகம் இறைவனைத் துறந்து விட்டது.உதாசீனப் படுத்தியுள்ளது.கடவுளை ஒரு நகராட்சியின் அதிகாரியாகவா நாம் நினைப்பது?
**********
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
குழந்தைகளை அடிக்கலாமா?
**குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும்.பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
**தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும்.மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.
**தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும்.உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.
**தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது,குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.
**தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான்,அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.
**குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும்.நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.
**குழந்தை தவறு செய்தால்,தொடர்ந்து தண்டிக்க வேண்டும்.ஒரு முறை தண்டிப்பதும்,மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.
**குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும்.தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தானுருவாகும்.
**குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.
**தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையைவிடமன ரீதியான அணுகு முறையே சிறந்தது.
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
Friday, October 29, 2010
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை
சுவாமி விவேகானந்தர் பாரீஸ் நகரிலே இருந்தபொழுது ஓய்வு எடுப்பதற்காக குதிரை வண்டியிலே தனது சிஷ்யை ஐரோப்பிய பெண்மணியுடன் பாரீஸ் நகரை வலம் வந்தார். ஒரு தெரு வழியாக ஒரு வீட்டுக்குள்ளே இருந்து இரண்டு சிறிய பையன்கள் வெளியே வந்தார்கள். அவர்களின் தோற்றம் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போன்று தோன்றியது. அவர்களது அம்மா அந்தக் குழந்தைகளை அழைத்து வந்தார்கள். குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தக் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் குதிரை வண்டியில் ஏறி ஓட்டிக்கொண்டு போனார்.
"யார் அந்த சிறுவர்கள்?" என்று விவேகானந்தரின் சிஷ்யை கேட்டாள். "என்னுடய பிள்ளைகள்தான்" என்று கூறினார் குதிரை வண்டியை ஓட்டியவர். அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியம். "குழந்தைகளைப் பார்த்தால் ரொம்ப பணக்கார வீட்டுக் குழந்தைகள் போலத் தோன்றுகிறது. இவர் குதிரை வண்டி ஓட்டுகிறாரே என்று". குதிரைவண்டு ஓட்டுகிறவர் திரும்பிப் பார்த்தார். பாரீஸ்லே ஒரு வங்கி பேரைச் சொல்லி 'அந்த வங்கியை உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டடார். "ஓ கேள்விபட்டிருக்கிரோமே! ரொம்ப பெரிய வங்கி ஆச்சே அது! எங்களுக்கு கூட அந்த வங்கியிலே கணக்கு இருந்தது. ஆனா இப்பொழுது அந்த வங்கி திவாலாகி விட்டதாக தெரிகிறதே" அப்படின்னாங்க சுவாமியோட சிஷ்யை.
இதைக் கேட்டுவிட்டு… அதற்கு பிறகு அந்த குதிரை வண்டியைய் ஓட்டியவர் விளக்கினார். "நான் தான் அந்த வங்கிக்குச் சொந்தக்காரன்! அந்த வங்கி இப்ப கொஞ்சம் கஷ்ட நிலைமையில்தான் இருக்கிறது. பாக்கிகள் எல்லாம் வசூல் பண்ணி கடன்களை எல்லாம் அடைக்க சிறிது நாள் ஆகும் போல தெரிகிறது. இந்த நிலைமையில் நான் மற்றவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. சொந்த ஊரிலே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என் கிட்டே இருந்தது… என் மனைவி கிட்டே இருந்தது எல்லாவற்றையும் விற்று இந்த குதிரை வண்டி வாங்கி வாடகை வண்டியாக ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். என் மனைவியும் கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களுடைய இரண்டு பேர் வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகிற செலவுகளை சரிசெய்து கொண்டு இருக்கிறோம். பாக்கிகளை வசுல் செய்து கடன்களை அடைத்ததும் மறுபடியும் வங்கியை திறந்துவிடுவேன்!" என்றார்.
சுவாமி விவேகானந்தர் இதை கேட்டுக் கொண்டு இருந்தார். மனதிற்கு மகிழ்சியாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் சொன்னார், "இதோ இந்த மனிதரைப் பார்? இவர்தான் சரியான வேதாந்தி. அப்படியே நடைமுறைப்டுத்தியிருக்கிறார்! பெரிய ஒரு அந்தஸ்திலே இருந்து விழுந்துவிட்டால் கூட சூழ்நிலைக்கு இரையாகிவிடவில்லை! அப்படின்னு சொல்லி ஆச்சரியப்பட்டார்!".
"எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை தளரவிடக்கூடாது"
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
ஆசை
ஆசை
கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.
கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.
துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''
வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.
"அங்கம் பருத்துவிட்டால் அழகுக் கலைகளுக்கே
பங்கம் வருவதுபோல் பணமும் ஒரு பக்கம்
சேர்ந்து கொண்டே போனால் சீரான சமுதாயம் அழகிழந்து போகுமடி…."
----இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
சிரிப்புகள்
மனைவி: என்னங்க! இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா, ரசம் வைக்கட்டுமா?
கணவர்: முதல்ல வை... அப்புறம் பேர் வைச்சுகலாம்...
ஒரு சர்தார்ஜி வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்குத் தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.மு ன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி. அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு இன்னொரு சர்தார்ஜி வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார். "கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!" தபால்காரர்- உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோமீட்டர் நடந்துவரேன். சர்தார்ஜி; ஏன் இவ்வளவு தூரம் நடந்து வறீங்க,பேசாம தபால்ல அனுப்பியிருக்கலாமே? என்னது! துணி துவைக்க "தாஜ்மகாலுக்கு" போறியா? வெயிட்டே இல்லாத "ஹவுஸ்" எது? அந்த பாம்புக்கு என்ன நோயாம்...?
ஏன்?
அங்கதானே நிறைய சலவைக்கல் இருக்கு!
"லைட் ஹவுஸ்"
வேற என்ன 'புற்று'நோய் தான்.
நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா
நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்
நிருபர் : சம்மதிக்கலனா?
நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்
உமா : ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?
பிராபகரன் : சரி உமா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?
இது மொக்கைனு திட்டுனாலும் சரி..பாராட்டுனாலும் சரி நா பொறுப்பில்ல..
--
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
Wednesday, October 27, 2010
ஜோக் மாதிரி இருந்தால் மட்டும் சிரிங்க...
"என்னது காபியா? நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்?"
"சரி சரியான நம்பர் எது?"
"ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?"
"யாரு கிட்ட?"
"நான் தான் இந்த கம்பெனியோட CEO"
"நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?"
"தெரியாது,யார் கிட்ட?"
டொக்...
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
அழகோ அழகு...
மனிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது அவனின் முகம்தான். உடலிலும், உள்ளத்திலும் குறை ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும். இன்றைய நாகரீக உலகில் முகத்திற்கு அழகு சேர்க்க சந்தையில் விற்கப்படும் பொருட்கள் ஏராளம். அதன் வருவாய் ஒவ்வொரு நாட்டிலும் 25 விழுக்காட்டிற்கு குறையாமல் உள்ளது. முன்பெல்லாம் மேல்தட்டு மக்களையும், நகர வாசிகளையும் முன்வைத்து சந்தைப் படுத்திய இந்த அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனங்கள் இப்போது நடுத்தர மக்களையும், கிராமவாசிகளையும் நோக்கி தன் விளம்பர உத்தியைத் தொடர்ந்துள்ளது. இந்த வகையான அழகு பொருட்களால் முகம் பொலிவுறுகிறதா, உண்மையான அழகு கிடைக்கிறதா என்றால் அது என்னவோ பூஞ்ஜியத்தில்தான் முடியும். இதனால் மேலும் பல சரும நோய்களின் பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது. இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்களின் பகட்டு விளம்பரங்கள் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்துக் கொண்டு இருக்கிறது என்பது உண்மை. காசு கொடுத்து கர்மத்தை வாங்காதே என்பர் நம் முன்னோர்கள். அதுபோல் இந்த முக அழகு பொருட்கள் உடலுக்கு தீங்குகளை விளைவிக்கக் கூடியவை. இவற்றை வாங்கி உபயோகிப்பதன் மூலம் நாம் பணத்தையும் அழகையும் இழப்பதுதான் மிச்சம். ஆனால் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வேதிப் பொருட்கள் கலப்பின்றி முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம். முகத்தில் வறட்சியோ, எண்ணெய் வடிதல், வெள்யைõக தோன்றுதல், பரு தோன்றுதல், முகக்கருப்பு, கருவளையம், கரும்புள்ளி என எந்தவகையான பாதிப்பு தோன்றினாலும் இதற்கு வேண்டிய மருந்துகளை பயன்படுத்தும் முன் மலச்சிக்கல் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சருமத்திற்கு ஒவ்வாமை தரக்கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும். ஓய்வு காலங்களில் இவற்றை உபயோகிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கீழ்காணும் மூலிகைப் பொருட்களால் முகம் பொலிவு பெறும். வறண்ட சருமத்திற்கு வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும். 15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது. முகம் பொலிவு பெற தேன் - 1 ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறு - 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன் இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும். எண்ணெய் பிசுகு உள்ள முகத்திற்கு
இன்றைய இளம் வயதினர் அனைவருக்கும் மன உளைச்சலைத் தருவது எண்ணெய் தோய்ந்த முகமும், முகப்பருவும் தான். எவ்வளவுதான் முகப்பவுடர் பூசினாலும் சிறிது நேரத்திலே முகம் எண்ணெய் வடிவது போல் ஆகிவிடும். இதற்கு நிரந்தரத் தீர்வு தேன் - 1 ஸ்பூன் முட்டை வெள்ளை கரு - இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகம் முழுவதும் பூசி சுமார் 20 நிமிடம் காயவைத்து பின் நன்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் எண்ணெய் தோய்ந்த முகம் மாறி, முகம் பளிச்சிடும். எலுமிச்சம் பழச்சாறில் பப்பாளிப் பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் சுருக்கமின்றி பொலிவுபெறும். மாதுளம் பழத்தோலை காயவைத்து பொடி செய்து அதனுடன் கடுகு எண்ணெய் கலந்து குழைத்து மேனி எங்கும்பூசி குளித்து வந்தால் தோல் சுருக்கங்கள் மாறும். மார்பகங்களில் பூசி வந்தால் மார்பகச் சுருக்கங்கள் நீங்கும். அழகான பாதங்களுக்கு எலுமிச்சை சாறு - 20 மிலி ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன் பால் - 50 மிலி ஏலக்காய் - 1 கிராம் பாதங்களில் பூசி வந்தால் பாதங்கள் மென்மையடைந்து, அழகு பெறும். அழகான உதடுகளுக்கு பாலாடை, நெல்லிச்சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு கருமை நீங்கி சிவப்பாகும். வெண்ணெய்யுடன் ஆரஞ்சு சாறு கலந்து உதட்டில் பூசி வந்தால் வெடிப்புகள் மாறி உதடு மென்மையாகும். YOGANANDHAN GANESAN |
பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள்!
* கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவு உணவுக்கும் காலை உணவிற்கும் இடையில் 12 மணிநேர இடைவெளி இருக்கிறது. சாப்பிடாமல் இருப்பது உடலுக்கும் மனதிற்கும் சோர்வைத் தரும். சாப்பிட நேரம் இல்லையென்றால் குறைந்தபட்சம் பாதாம் போன்ற பருப்புகளையும், வாழைப்பழத்தையுமாவது சாப்பிட வேண்டும். * வயிறு மற்றும் இடுப்புச் சதையைக் குறைக்க முயற்சிப்பது நல்லது. கை, கால் போன்ற பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள் நம் உடம்பில் சரியான இரத்த சர்க்கரை இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன. மாறாக வயிறு மற்றும் இடுப்புப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்பதற்காக சாப்பிடாமல், பசித்தால் மட்டுமே சாப்பிடுவது என்ற பழக்கத்தை கடைபிடிப்பது நல்லது. வறுப்பது, பொரிப்பது போன்றவற்றை விட்டுவிட்டு, வேக வைத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும். * அதிகப்படியாக ஈஸ்ட் சேர்த்த உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. இவற்றை அதிகமாக சாப்பிடுவதால் உற்சாகமின்மை ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உற்சாகமும் மகிழ்ச்சியும் நம்மிடமே இருக்க வேண்டுமென்றால் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், வினிகர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. * மெனோபாஸ் காலத்தை நெருங்கும்போது முகத்தில் வெயிலினால் ஏற்படும் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜனும் நம்முடைய உதவிக்கு வராது. அதனால் கண்டிப்பாக சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து பாதுகாக்கும் க்ரீம்களைப் போட்டுக் கொள்ள வேண்டும். * இந்தியாவில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் இரும்புச் சத்து குறைபாடு உடையவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் தினமும் கீரை, <உலர்ந்த திராட்சை, வெல்லம் போன்றவற்றை சாப்பிடுவதால் இந்த குறைபாட்டை நீக்க முடியும், அல்லது இரும்புசத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். * ஹை ஹீல்ஸ் செருப்புகளை தொடர்ந்து உ<பயோகிப்பது முதுகு வலி, முட்டி வலி போன்ற பிரச்னைகளைக் கொடுக்கும். வாரத்தில் இரண்டு நாட்களாவது கோலாப்பூரி செருப்புகள் போன்ற தட்டையான அடிப்பாகத்தை கொண்ட செருப்புகளை உபயோகிப்பது கால்கள் மூச்சுவிடுவதற்கு வழிவகுக்கும். * தினசரி வாழ்க்கையில் சுலபமான யோகாசனங்களை நடைமுறைப்படுத்தலாம். கீழே விழுந்த பொருட்களை எடுப்பதற்கு முதுகை வளைத்து நன்றாக குனிந்து எடுக்கலாம். உட்காரும்போது நன்றாக சம்மணமிட்டு <உட்காரலாம். ஐம்பதுகளில் இருந்தாலும் இதை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். * அதிகப்படியான புரதச்சத்து புற்றுநோயை உண்டாக்கும். புரதச்சத்தானது நம்முடைய உணவில் 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியர்கள், குறிப்பாக சைவ பிரியர்கள் இந்த 20 சதவீதத்தைக் கூட முழுமையாக சாப்பிடுவதில்லை. இதனால்தான் நம்முடைய உணவு நிபுணர்கள் அதிகப்படியான புரத சத்துள்ள உணவை சாப்பிட வலியுறுத்துகின்றனர். * பெண்களில் 80 சதவீதத்தினர் சரியான அளவிலான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தவறான அளவிலான உள்ளாடைகளை உபயோகிப்பதால் மார்பு பகுதியில் கட்டிகள், வலி போன்றவை ஏற்படும். மேலும் முதுகுவலி, தோள்வலி, சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவையும் ஏற்படும். அதனால் சிரமம் பார்க்காமல் சரியான அளவு உள்ளாடையை தேர்ந்தெடுத்து அணிவது நல்லது. * பெண்களுக்கு சோயா மிகவும் நல்லது. அதிகப்படியாக அருந்தப்படும் பசும்பால், எருமைப்பால் போன்றவை கொழுப்புச்சத்தை அதிகரித்துவிடும். இதற்கு பதிலாக சோயா பாலிலிருந்து கிடைக்கும் கால்சியம் மிகவும் நல்லது. மேலும் சோயாவில் புரதச்சத்து உள்ளது. இதை உட்கொண்டால் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவும் அதிகரிக்கும். YOGANANDHAN GANESAN |
Sunday, October 24, 2010
சிரிக்கலாம் வாங்க !
ஒரு வகுப்பறையில்...
ஆசிரியர்: மரியா.. இந்த உலக மேப்புலே தென் அமெரிக்கா எங்கே என்று சரியாக காட்டு
மரியா: சரியாக காட்டி, இங்கே இருக்கு டீச்சர்
ஆரிசியர்: வெரி குட் மரியா...
ஆசிரியர் மாணவர்களை பார்த்து யாராவது பதில் சொல்லுங்க, அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு
மாணவன்: மரியா...! டீச்சார்..
ஆசிரியர்: ????..!!!
----------------------------------------------------------
கணித ஆசிரியர்: ஜான்.. ஏன் கால்குலேசனை தரையிலே(கீழே) வைத்து போடுறே
ஜான்: சார் நீங்கதானே சொன்னீங்க மேசை (TABLE) இல்லாமல் போடசொல்லி...
----------------------------------------------------------
வேதியல் ஆசிரியர்: ஜோசப், தண்ணீருக்கு கெமிக்கல் ஃபார்முலா என்ன?
ஜோசப்: அது வந்து H I J K L M N O
வே. ஆசிரியர்: என்னா சொல்லவாரே நீ
ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று.
----------------------------------------------------------
ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா
கீதா: தேவை இல்லை சார்... ஏன்னா எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க
----------------------------------------------------------
முதலாளி வேலைகாரரைப்பார்த்து
டேய் வேலா.. தோட்டத்துக்கு போய் எல்லா செடிகளூக்கும் தண்ணீர் ஊற்று
வேலா: முதலாளி ஏற்கனவே மழை பெய்துக்கொண்டிருக்கிறது
முதலாளி: அதனாலென்னா குடை பிடித்துக்கொண்டுபோய் தண்ணீர் ஊற்று..???
----------------------------------------------------------
தேர்வு நிலை ஆசிரியர்: அட்டெண்டர் உடனே போய் பிளம்பரை வரசொல்
அட்டெண்டர்: எதுக்கு சார்
ஆசிரியர்: நிறைய கொஸ்ட்டீன் பேப்பர் லீக் (leakage) ஆகுதுனு கேள்விப்பட்டேன், தரோவாக செக் பண்ணனும்
----------------------------------------------------------
ஒரு இன்டெர்வியூவில், கார் ஓட்டுனருக்கு ஆள் சேர்ப்பு
பாஸ்: உன்னுடைய ஸ்டார்டிங் சேலரி 2500 ருபீஸ்
டிரைவர்: ஒஹ் ரொம்ப நன்றி சார், ஒவ்வொரு ஸ்டார்டிங்க்கும் 2500 ரூபாய், அப்போ கார் ஓட்டுவதற்கு எவ்வளவு சார்?
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
எடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்
1.மிஸ்,நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க, அப்படியா,உங்க மனைவி பேரென்ன? அதை நீங்கதான் சொல்லனும். (காதலை புதிய அணுகு முறையில் சொல்வது இப்படித்தான்.) 2. கவிதை என்பது வார்த்தை தொகுப்பு காதல் என்பது வயசு கொழுப்பு 3. ஒரு கடை வாசலில் போர்டு வசனம் பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5. மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன். கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது. 4. சிங்கம் ரீ மிக்ஸ் டயலாக் - என்னை ரோட்ல பாத்திருப்பே,காலேஜ்ல பாத்திருப்பே,ஆனா ஒயின் ஷாப்ல உக்காந்து தண்ணி அடிச்சு பாத்திருக்கியா?வெறித்தனமா சரக்கு அடிப்பேண்டா,உக்காந்து அடிச்சா ஒரே டைம்ல ஒன்றரை ஃபுல்டா,பாக்கறியா? 5.வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள் 1.காலை சாப்பாடு 2. மதிய சாப்பாடு 3.இரவு சாப்பாடு. 6.மாப்ளே,புது படம் ஒன்று எடுக்கறேன்,நீதான் ஹீரோ,நான் வில்லன்,நான் ஹீரோயினை ரேப் பண்றேன்,நீ அவளை மேரேஜ் பண்றே,அவளுக்கு வாழ்க்கை தர்றே,ஏன்னா நீதான் ஹீரோவாச்சே,படத்தோட டைட்டில் "இனிஷியல் உன்னுது,பேபி என்னுது." 7. காதல் ஒரு மழை மாதிரி,நனையும்போது சந்தோஷம், நனைந்தபின்பு ஜலதோஷம். 8. அன்பர்களே,100 கோவில்கள் கட்டுவதை விட ஒரு காலேஜ் கட்டுவது சிறந்தது,ஏன் தெரியுமா? கோவிலை விட காலேஜ்லதான் நிறைய ஃபிகரை பாக்க முடியும். 9.என்னோடு அவள் இருந்திருந்தால் இளவரசியாக இருந்திருப்பாள்,பாவம் இப்போது யாருக்கோ இல்லத்தரசியாக இருக்கிறாள். 10.என்னோட அட்ரஸ் வேணும்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க,இதோ, ஜே.நெப்போலியன்,சன் ஆஃப் மார்க்கோபோலோ,எம் சி இல்லம்,மானிட்டர் நகர்,ஓல்டு மங்க் முதல் கட்டிங்க்,கிங் ஃபிஷர் ஏரியா,விஸ்கி தாலுகா, ரம் டிஸ்டிரிக்ட்,பின்கோடு -60005000. 11.தீபாவளிக்கு டாஸ்மாக் கடைல பட்டாசு விக்கப்போறாங்களாம். அப்போ பட்டாஸ்மாக் கடைனு சொல்லுங்க. 12.காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா? ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா? இல்ல,அடிக்கடி அதுங்ககிட்ட ஜோக் சொல்லனும்,அழுகாம சிரிச்சுட்டே இருக்கும். (கடவுளே ,என்னை ஏன் தான் இவ்வளவு புத்திசாலியா படைச்சியோ?) 13.நட்புக்கும்,காதலுக்கும் என்ன வித்யாசம்? வீட்ல இருக்கறவனை ஒயின்ஷாப்புக்கு போக வைக்கறது காதல்,ஒயின்ஷாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிடு வர்றது நட்பு. YOGANANDHAN GANESAN |
கற்ப மூலிகை -கண்டங் கத்திரி
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்ற ஔவையாரின் கூற்றுப்படி மனிதனாய் பிறப்பதே ஒரு மாபெரும் தவமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த உடலை நோயின்றி பாதுகாப்பது நம் கடமையாகும்.
உடலை நோயின்றி பாதுகாக்க சித்தர்கள் கண்ட வழிமுறைதான் காயகற்பம். அதாவது கற்பமென்பது உடம்பினை நோயுறாதபடி நன்னிலையில் வைத்திருந்து நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு நீக்கி பாதுகாப்பது.
இந்த வகையான கற்ப மூலிகைகளில் ஒன்றான கண்டங்கத்திரி பற்றி தெரிந்து கொள்வோம்.
கண்டங்கத்திரி, செடி வகையைச் சார்ந்தது. எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலும் மிகுதியாக காணப்படுகிறது.
இதன் இலை, பூ, காய், பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.
காச சுவாசங் கதித்தஷய மந்தமனல்
வீசுசுரஞ் சன்னி விளைதோடம் - ஆகறுங்கால்
இத்தரையு ணிற்கா எரிகாரஞ் சேர்க்கண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்
(அகத்தியர் குணபாடம்)
பாடல் விளக்கம் - கண்டங்கத்திரி காசம், சுவாசம், அக்கினிமந்தம், தீச்சுரம், சன்னி வாதம், ஏழுவகைத் தோடங்கள், வாத நோய் ஆகியவற்றைத் தீர்க்கும்.
காச சுவாசம் குணமாக
இன்றைய நவீன யுகத்தில் காற்றும், நீரும் மாசடைந்துள்ளது. மேலும் உணவுப் பழக்கங்களாலும் மனித உடல் நோய் எதிர்ப்பு சக்தி குன்றி காணப்படுகிறது. இதனால் முதலில் மனிதன் பாதிக்கப்படுவது சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால்தான்.
உடலில் ஒவ்வாமை உண்டாகி அது நுரையீரலை அடைந்து இரத்தத்தில் கலந்து மூக்கில் நீரேற்றம், நீர் வடிதல், தலைவலி, சைனஸ் போன்றவற்றை உண்டு பண்ணுகிறது. நாளடைவில் காச சுவாச நோயாக மாறிவிடுகிறது.
கண்டங்கத்திரி சமூலத்தை (இலை, பூ, காய், பழம், விதை, வேர்) நிழலில் உலர்த்தி பொடித்து வைத்து அதனுடன் தேன் கலந்து காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் காச சுவாசத்தின் பாதிப்பு குறைந்து நாளடைவில் குணமாகும். அல்லது இதன் பொடியை கஷாயமாக்கி அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வரலாம். இதனால் தலைவலி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவை குணமாகும். சைனஸ் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபட இது சிறந்த மருந்தாகும்.
சளியைப் போக்க
இருமல், ஈளை, சளி, தொண்டைக்கட்டு நீங்கவும், உடலில் உள்ள சளியைக் குறைக்கவும் கண்டங்கத்திரி கஷாயம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்திய மருத்துவ முறைகளில் இதன் பயன்பாடு அதிகம். இரத்தத்தில் உள்ள சளியை மாற்றும் தன்மை கொண்டது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இருதயக் குழாய்களில் ஓடும் ரத்தத்தின் ஒட்டும் தன்மையை மாற்றி அடைப்புகளை நீக்கும்.
ஈளை இழுப்பு இருமல் சுவாசகாசம்
மாறும்தானும் கண்டங்கத்திரியாலே..
என்று அகத்தியர் வர்ம காண்டத்தில் கூறியுள்ளார். மேலும் காயகற்பமான வாசாதி லேகியம் என்ற திருமேனி லேகியத்தில் கண்டங்கத்திரி முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. ஆஸ்துமா மற்றும் ரத்த அழுத்தத்தையும், நுரையீரல் சளியையும், சுவாசக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளையும் நீக்கும் தன்மை கண்டங் கத்திரிக்கு உள்ளதால் வாசாதி லேகியத்தில் சேர்க்கப்படுகிறது. இதனால் தான் சித்தர்கள் கண்டங்கத்திரியை காயகற்ப மூலிகை என்று அழைக்கின்றனர்.
பசியைத் தூண்ட
மலச்சிக்கலும், அஜீரணக் கோளாறும் நீங்கினாலே மனிதன் ஆரோக்கியமாக வாழலாம். இவை நீங்கினால்தான் உடல் புத்துணர்வு பெறும்.
நன்கு பசியெடுக்க குடலில் செரிமான சக்தி அதிகமாக இருக்க வேண்டும். கண்டங்கத்திரி, செரிமான சக்தியைத் தூண்டும் தன்மை கொண்டது. கண்டங்கத்திரியின் பழத்தை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை அருந்தி வந்தால் நல்ல செரிமான சக்தி கிடைக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
பல் வலி நீங்க
பல் வலி, பல் ஈறுகளில் வீக்கம், பூச்சிப்பல், இவற்றால் ஏற்படும் பாதிப்புகளைப் போக்க கண்டங்கத்திரி வேரை நிழலில் உலர்த்தி அதனுடன் காயவைத்த புதினா இலைகளைச் சேர்த்து நன்கு பொடியாக்கி அதைக்கொண்டு தினமும் பல் துலக்கினால், அல்லது பல் துலக்கிய பின் இந்த பொடியை பற்களிலும் ,ஈறுகளிலும் நன்கு தேய்த்து வந்தால் பல்வலி, பல் ஈறு நோய்கள் நீங்கும்.
கண்டங்கத்திரி சமூலத்தை பொடித்து வைத்து அதை கஷாயமாக்கி அருந்தி வந்தால் கழுத்து வலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் மூட்டுகளில் உள்ள வலிகளைப் போக்கி , அதன் இறுக்கத் தன்மையைக் குறைக்கும்.
வியர்வை நாற்றம் நீங்க
கண்டங்கத்திரி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து நன்றாக கொதித்த பின் வடிகட்டி ஆறவைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உடலெங்கும் பூசி வந்தால், வெயில் காலங்களில் உண்டாகும் வியர்வை நாற்றம் நீங்கும்.
வெண்புள்ளிகள் மறைய
கண்டங்கத்திரியின் பழத்தை குழைய வேக வைத்து நன்றாக கடைந்து வடிகட்டி எடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி உடலில் உள்ள வெண்மை நிறப் புள்ளிகள் மீது தடவி வந்தால், வெண்புள்ளிகள் மறையும். இது சித்த மருத்துவத்தில் வெண்குஷ்ட நோய்க்கு மருந்தாகச் சேர்க்கப்படுகிறது.
கண்டங்கத்திரி வேரை காயவைத்து பொடித்து, கஷாயம் செய்து அதில் திப்பிலி பொடியும், தேனும் கலந்து அருந்திவந்தால் நீரின் மூலமாக உண்டாகும் தொற்று நோய்கள் விரைவில் குணமாகும்.
கண்டங்கத்திரியை முள் செடி என்று ஓரங்கட்டி விடாமல், அதன் பயனறிந்து தேவைக்கு உபயோகித்து சிறந்த பலனை அடைந்து ஆரோக்கியம் பெறலாம்.
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
சிரிக்கலாம் வாங்க !
1.வாழ்க்கை என்பது பனை மரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!
2. லைப்ல சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும். உதாரணம்.
நமீதா எவ்வளவு பெரிய நடிகை ஆனா அவுங்க இவ்வளவு பாப்புலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தானே காரணம்.
3. வகுப்பறை என்பது ரயில் மாதிரி முதல் இரண்டு பெஞ் வீ ஐ பி (VIP) நடுவில் இரண்ட பெஞ் பொது (General) கடைசியில இரண்டும் தூங்கும் பெஞ்!(Sleeper)
கவிதை வடிவில் அதுவும் ஹைகூ வடிவில் யோசித்திருக்காங்க பாருங்க!
4. அருகில் இருந்தும் பேச முடியவில்லை உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை – எக்ஸாம் ஹாலில்……!
5. 3 G A P A 6 = ?....
யோசிங்க ……
என்னா எடிசனுக்கு போட்டியா யோசிப்பீங்களே! இது கூட தெரியாதா?
விடை: மூஞ்சிய பாரு……
6. வாழ்கையில வெற்றி ன்னா என்னனு தெரியுமா?
அடைமழை பெயும் போது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான்,
இன்னுமா புரியலை அட WET TREE!
7. தினந்தோரும் என் பிராத்தனை
எனக்கு எதுவும் வேண்டாம் கடவுளே! என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும் - அது போதும் எனக்கு.
குறிப்பு:-
என்ன செய்ய!, ஒன்னுமே செய்ய முடியாத போது பைத்தியம் போல சரி சிரிச்சிக்கிட்டு இருப்போம்;
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
Wednesday, October 20, 2010
சிந்தித்க தூண்டும் நகைச்சுவை கலந்த உரையாடல் - அப்படி என்ன வேலை தான் பாப்பீங்க ?
அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி
-
"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?
நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.
நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
-
"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."
"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.
"சரி"
-
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".
இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.
காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?
ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.
அப்பா : "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?
"MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."
அப்பா : "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" –
அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
அப்பா : "சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"
"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"
அப்பா : "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"
"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.
ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.
"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
-
"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
-
அப்பா : "CR-னா?"
-
"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
-
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
அப்பா : "இதுக்கு அவன் ஒத்துபானா?"
-
"ஒத்துகிட்டு தான் ஆகணும்.
முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"
அப்பா : "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"
"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
அப்பா : "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."
"அதான் கிடையாது.
இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."
அப்பா : "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –
-
அப்பா குழம்பினார்.
"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை."
-
"பாவம்பா"
"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."
அப்பா : "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"
"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
-
அப்பா : "நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!"
"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
-
அப்பா : "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"
"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
அப்பா : "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"
"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.
அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?
"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
அப்பா: "கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"
"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
-
அப்பா : "எப்படி?"
"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".
அப்பா : "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"
"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."
"அப்புறம்?"
"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
-
"அப்புறம்?"
"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."
இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.
அப்பா : "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .