1. தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு. - பிரையண்ட்
2. எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். - கெதே
3. அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது. - ரிரேஸ்
4. சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன.- செக்கோஸ்லோவேகியா
5. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான். - கர்னல் கீல்
6. தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. - லெனின்
7. வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை தீமை என்ற இரு நூல்களும் இருக்கும். - ஷேக்ஸ்பியர்
8. அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது. - விவேகாநந்தர்
9. தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும். - பெர்னாட்ஷா
10. அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று. அது எப்போது எப்படி தோன்றுகிறது என்பதை நாம் அறிய முடியாது.
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Tuesday, August 17, 2010
Monday, August 9, 2010
சிரிப்பு
1. "போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிறதா சொல்றீங்க, வெயிலைப் பத்தி கவலையே இல்லைங்கறீங்களே, எப்படி?"
2. "உங்களுக்கு அலர்ஜி நோய் வந்திருக்கு... ஒத்துக்காததை எல்லாம் ஒதுக்கி வைக்கணும்!"
"அப்படின்னா என் சம்சாரத்தைக் கூடவா டாக்டர்...?"
3. என் மாமியாருக்கு சர்க்கரை வியாதி இருக்கற விஷயம் உனக்கு எப்படித் தெரியும்?"
"உங்க வீட்ல அடிக்கடி ஸ்வீட் செய்யறதை வச்சுத்தான் சொன்னேன்...!"
4. "ஆபீசுக்கு போகும் போது டென்ஷன் படுத்தாதே..."
"அதையே நெனச்சு நெனச்சு, தூக்கமே வர மாட்டேங்குது...!"