Tuesday, June 19, 2012

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்

கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்  இதோ:
  • வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால் வெடிப்பு மறையும்.
  • கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.
  • இரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும். குளிக்கும்போது தேங்காய் எண்ணை தேய்த்து குளிக்கவும். (கடையில் மெட்டல் ஸ்க்ரப்பர் கிடைக்கும் அதை வாங்கி தினமும் குளிக்கும்போது கால் பாதங்களை தேய்க்கவும் சரியாகிவிடும்.) அல்லது (கால்களுக்கு தேய்க்கும் ப்ரஷ் அல்லது ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் கால்களை துடைத்துவிட்டு ஃபூட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யுங்கள். தினமும் குளிக்கும் போதும் ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்துக் குளியுங்கள். சரியாகி விடும்.
  • பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும்.வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள்.
  • ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.
  • கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.
  • முதல் நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள்  தண்ணீரில் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.தொடர்ந்து இப்படி மாறி மாறி  செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும்.
  • வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.
  • மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது கால் வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.
  • மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்
  • கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்
  • உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.
  • பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும்.
  • வெங்காயத்தை வணக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.
குறிப்பு:- கால் வெடிப்பு ஸ்கின் ட்ரை ஆவதால் ஏற்படுகிறது. துணி துவைக்கும் போது சோப்பு தண்ணீரில் நிற்காமல் பார்த்துக் கொள்ளவும். அதே போல் காலுறைகளையும் அழுக்கின்றி அணியவும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net