Tuesday, April 5, 2011

"டிப்ரஷனுக்கு காரணம் உர்ர்ர்ர் தான்""

"டிப்ரஷன்' ஆரம்பமே இது தான்:சோகம்; வருத்தம்; வேதனை; நோயால் பாதிப்பு; மன தளர்ச்சி என்று எது வேண்டுமானாலும், "டிப்ரஷன்' என்று மருத்துவ அகராதியில் கூறப்படுகிறது.

*

சில காரணங்களால் "டிப்ரஷன்' வருகிறது என்று டாக்டர்கள் கூறினாலும், மனதை சரிசமமாக வைத்துக் கொள்ளாமல், எப்போதும் உர்ர்ர்ர்...என்றிருப்பதும் இந்த பாதிப்பின் அறிகுறியே!

*

எந்த ஒரு கோளாறும் , குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நீடிக்கக் கூடாது; அப்படியிருந்தால் ஏதோ பெரிய வியாதிக்கு அறிகுறி. அதுபோல, மனத்தளர்ச்சி எந்த உருவில் வந்தாலும், நாட்கணக்கில் நீடித்தால், கண்டிப்பாக அதை உடனே கவனிக்க வேண்டும்.

***

டிப்ரஷன் என்றால்?:

1. டிப்ரஷன் என்றால், சோர்வு, வருத்தம், வேதனை என்று கூறலாம். ஆனால், மனதளவில் எந்த விதமான உணர்ச்சிகளும், அது இவற்றுக்கு வழி வகுத்தால் அது தான் டிப்ரஷன். சில சூழ்நிலைகள், சம்பவங்களால் டிப்ரஷன் வரலாம்.

*

2. ஆனால், எந்த காரணமும் இல்லாமல், எப்போதும் உர்ர்ர்ர்... என்றிருப்பதும் கூட டிப்ரஷனில் விட்டுவிடும் ஆபத்து உண்டு. தனக்கு நேர்ந்த நிலைமையால், எப்போதும் யாரிடமும் முகம் கொடுத்துபேசாமல் இருப்பது, சிரிக்கக்கூட யோசிப்பது, எந்த ஒரு விஷயத்திலும் மனம் ஒப்பாமை ஆகியவையும் கூட, மனத் தளர்ச்சியை ஏற்படுத்தும்.

*

3. இதனால், முகத்தில் புன்முறுவல் வராது;அப்படியே வந்தாலும், அதை அடக்கிக்கொண்டு விடுவர். அர்த்தமில்லாத கோபம் வரும்; தேவையில்லாத குழப்பம் வரும்; அதுவே டிப்ரஷனில் விட்டு விடும்; அதன் பின் கேட்கவே வேண்டாம்... ரத்த அழுத்தம்; சர்க்கரை நோய் , கதவை தட்ட ஆரம்பித்து விடும்.

***

எப்படி வருகிறது?

1. எல்லா நோய்களுக்கும் இருப்பது போல, இதற்கும் பரம்பரை பாதிப்பும் ஒரு காரணமாக உள்ளது; அதற்கு அடுத்து, வாழ்க்கையில் நேரும் நிகழ்வுகளை சொல்லலாம்.

*

2. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கோ, ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கோ டிப்ரஷன் வரலாம். மூளையில் உள்ள ஒரு வித ரசாயன மாற்றம் தான் டிப்ரஷனை அதிகப்படுத்துகிறது.


*

3. ஆண்களை விட, பெண்களிடம் தான் அதிகமாக இந்த பாதிப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

*

4. குறிப்பாக, மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு டிப்ரஷன் அதிகமாக நேர வாய்ப்பு உண்டு. மருத்துவ ரீதியான டிப்ரஷனும் கூட இவர்களுக்கு நேருவது உண்டு.

*

5. பரம்பரையில் யாருக்காவது இருந்தால், வாரிசு வழியில் அது தொடர வாய்ப்பு உண்டு. மூன்று தலைமுறைக்கு முன் இப்படி ஒருவருக்கு இருந்தால், இந்த தலைமுறையில் ஒருவருக்கு நேரலாம்.

*

6. பெற்றோர், உறவினர் உட்பட நெருங்கியவர்கள் மரணம் கணிசமான அளவில் டிப்ரஷனுக்கு காரணமாகிறது.

*

7. புற்றுநோய் உட்பட சில நோய் பாதிப்பில் இருக்கும் நோயாளிகளுக்கு இது வரும்.


*

8. முதுமை நோய்க்கு டிப்ரஷனும் ஒரு அறிகுறி தான்.

*

9. சில மருந்துகளின் பக்க விளைவுகளாலும் கூட இந்த பாதிப்பு வரும்.

*

10. கோபம், ஆத்திரம், தோல்வி மனப்பான்மை போன்றவையும் டிப்ரஷனில் விட்டு விடும்.

***

அறிகுறிகள் எவை?

1. ராத்திரி படுத்தால் தூக்கம் வராது; அடிக்கடி விழிப்பு வரும்; தூக்கம் தடை படும்.

*

2. சோர்வு ஏற்படும்; சிறிய தூரம் நடந்து சென்று விட்டுவந்தால் கூட சோர்வு ஏற்படும்.

*

3. அடிக்கடி தலைவலி வரும்.

*

4. சிறிய விஷயங்களுக்கு கூட அழுகை வந்து விடும்; எப்போதும் ஒரு வித எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.

*

5. பசி அறவே இருக்காது; அப்ப டியே பசிப்பதாக தட்டு முன் உட்கார்ந்தால், சாப்பிட பிடிக்காது.

*

6. படிப்பிலும்,வேலையிலும் ஈடுபாடு காட்ட முடியாது; உடலில் ஒரு வித வலி இருந்துகொண்டே இருக்கும்.

*

7. உடல் எடை சில சமயம் அதிகமாக இருக்கும்; சில சமயம், மிக குறைவாக இருக்கும்.

*

8. மலச்சிக்கல் அடிக்கடி ஏற்படும். குற்ற மனப்பான்மை இருக்கும். "நாம் எதற்கும் லாயக்கில்லை' என்ற உணர்வு தலைதூக்கும்.

*

9. தற்கொலை எண்ணம் மனதில் நிழலாடும்;

*

10. தற்கொலை முயற்சியும் செய்ய வைக்கும்.


***

கண்டுபிடிப்பது எப்படி?

டாக்டர் பரிசோதித்து, டிப்ரஷனுக்கு எது முக்கிய காரணமாக உள்ளது என்பதை கண்டுபிடிப்பார். அதன் பின், ரத்த பரிசோதனை எடுக்கப்படும். ரத்த சோகை, தைராய்டு போன்ற பிரச்னை இல்லை என்று தெரிந்தால், மனோதத்துவ நிபுணர் பரிசோதிப்பார்.

*

இரண்டு வாரம் தொடர்ந்து நோயாளியை பரிசோதித்தால், எதனால் டிப்ரஷன் என்பது சரியாக கணக்கிட முடியும். அதன் பின், சிகிச்சை முறை உறுதி செய்யப்படும்.

***

சிகிச்சை சுலபமே!

1. "ஆன்டி டிப்ரஷன்' மாத்திரைகள் உள்ளன;அவற்றை சில நாள் சாப்பிட்டு வந்தால், டிப்ரஷன் அளவு கண்டுபிடிக்க முடியும்.


*

2. இந்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால், இரண்டு வாரத்தில் அதன் குணம் தெரியும்; முதலில், நல்ல தூக்கம் வரும்; தூக்கப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

*

3. மன திடத்தை ஏற்படுத்த சில உடல், மனது பயிற்சிகள் உள்ளன. தாழ்வு மனப்பான்மை, கோபம் எல்லாம் பறந்துவிடும். கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.


***

நன்றி விபரம்.

***

"வாழ்க வளமுடன்"

***

நான் திருடிய இடங்கள்
http://jeyarajanm.blogspot.com
http://azhkadalkalangiyam.blogspot.com
http://pittujokku.blogspot.com
http://therinjikko.blogspot.com
http://writerbala.blogspot.com
http://wwwrasigancom.blogspot.com
http://www.sivastar.net
http://www.eegarai.net

No comments:

Post a Comment