Wednesday, April 20, 2011

பரம்பரை வீட்டு வைத்தியம்

இருதய நோய்களுக்கு:

இருதய நோயாளிகள் அவர்களது நாளங்களில் கொழுப்பு படிந்து அவற்றின் விட்டம் குறைந்திருப்பதால் ஏற்படுகிறது, மென்மைபான மரக்கறி, பழவகை உணவுகள், கொழுப்பில்லாத தயிர் ஆகியவை உண்ணலாம், சீனிச்சத்து, உப்பு இவற்றைக் குறைப்பது அவசியம். செந்தாமரைப்பூ இதழ்களை கஷாயம் செய்து தேன், கொழுப்பில்லாத பால் சேர்த்து காலையில் குடித்தால் இருதய நோய் படிப்படியாக குணமாகும்.. இருதயநோய் உள்ளவர்கள் தினம் மென்மையான உடற்பயிற்சி செய்தல் அவசியம். சுவாசப்பயிற்சி தினம் இருமுறையாவது செய்தல் அவசியம்.

இதைச் சுலபமாக எவரும் செய்யலாம். ஓரிடத்தில் நிமிர்ந்து இருக்கவும் வாயை நன்கு மூடிக்கொள்ளவும். வாய்க்குள் நாக்கை கீழ்முரசுடன் அழுத்தி வைத்துக் கொள்ளவும்.(இது உடம்பை தளர்த்திய நிலை). கண்ணையும் மூடிக்கொள்ளவும். மூக்கால் மூச்சை நன்கு உள் இழுக்கவும். சில வினாடிகள் உள் வைத்திருக்கவும் பின் இழுத்த நேரத்திலும் இருமடங்கு நேரத்தில் மூச்சை வெளியே விடவும். இப்படி 15 முறை செய்யவும். தினம் மூன்று முறையாவது இந்தச் சுவாசப்பயிற்சி செய்தால் உடம்பு நன்கு தளரும். புகைத்தல், மதுபானம் தவிர்க்கப்பட வேண்டும். மனதை அமைதியாக வைத்திருத்தல் அவசியம். இரவில் படுக்குமுன் சீமை அத்திப்பழம் மூன்றை கொழுப்பற்ற பாலில் காச்சி குடிப்பதும் இந்த நோயாளிகளுக்கு நற்பலன் தரும். கடுக்காய் கொட்டையை நீக்கி அதன் சதையை இடித்து சூரணம்செய்து அந்தத் தூளை கொழுப்பற்ற பாலில் காச்சி இரவில் குடித்தால் இருதயம் பலப்படும்..

இரும்புச்சத்து கூடுவதற்கு:

இரத்தத்தில் பிராண வாயுவை சேர்ப்பதற்கு உதவுவது செங்குருதி. இதில் போதிய இரும்புச்சத்து இல்லாவிடில் செங்குருதி உருவாகாது இதனால் காமாளை நோய் ஏற்பட்டு உயர் ஆபத்து நேரும். விரைவாக உடம்பிற்கு இரும்புச்சத்து சேர்ப்பதற்கு உணவில் ஈரலை சேர்த்தால் விரைவாக இரும்புச்சத்து இரத்தத்தில் கூடும். சைவ உணவு உண்பவர்கள் அதிகம் வெங்காயம், வாழைக்காய், உருளைக்கிழங்கு, வாழைத்தண்டுக்கறி, பூசணிக்காய், தக்காளி, பருப்புவகை, பேரீச்சம்பழம் கீரைவகை உண்பதால் இரும்புச்சத்து உடம்பில் கூடும். இத்துடன் உடற்பயிற்சி செய்து வரவும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment