Monday, April 25, 2011

மாதவிடாயையும் வெல்லலாம் ... !

மெனோபாஸ். நடுத்தர வயதை எட்டிக் கொண்டிருப்பவர்களை மிரட்டும் மெனஸ் இது.



நடுத்தர வயதை எட்டிப்பிடித்தவர்கள் இளம் வயதுப் பெண்களுடன் அழகுக்கு இணையாக தங்களையும் பராமரித்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள். எல்லாம் மெனோபாஸ் மிரட்டல்தான் காரணம்.

*

தங்களை விட இளம் வயதுப் பெண்கள் உடல் ரீதியாக ஆண்களை கட்டி இழுத்து விடுவார்களே என்ற பயத்தாலும், மேக்கப், முகப் பொலிவு, உடற்கட்டு குறித்து அதிகம் கவலைப்படுவார்கள்.

*

குடும்பப் பொறுப்புகள், பிள்ளைகளை கவனிக்க வேண்டிய கடமை. அவர்களுக்கு அதிக நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயம், நேரமின்மை என பல காரணங்களால், நடுத்தர வயதினருக்கு பெரும் மனக் கவலைகள், மனச் சுமைகள்.

*

ஆனால் மெனோபாஸ் காலத்தில் இருப்பவர்களுக்கு உடலுறவு மட்டுமே சந்தோஷம் தரும் விஷயமல்ல. அதையும் தாண்டி பல விஷயங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பது நிறைய பேருக்கு மறந்து விடுகிறது.

*

உடல் ரீதியான சந்தோஷத்திற்கு உடலுறவு மட்டும்தான் ஒரே வழி என்றில்லை. அதற்குப் பிறகும் நிறைய மேட்டர்கள் உள்ளன.

*

மெனோபாஸ் காலத்தில்தான் உண்மையிலேயே சுதந்திரமாகவும், மன இறுக்கம் இன்றியும், எந்தவித பயமின்றியும் உடல் ரீதியிலான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.

*

இந்த காலகட்டத்தில்தான் கணவர்களுடன், இளம் வயதில் இருந்ததை விட சுதந்திரமாகவும், பயமின்றியும் உடல் ரீதியான உறவைக் கொள்ள முடிகிறது என பல பெண்கள் கூறுகிறார்கள்.

*

கர்ப்பமாகி விடுவோமோ என்ற பயம் இல்லை. நினைத்தபோது சந்தோஷமாக இருக்கலாம் என்பதே இதற்குக் காரணம்.

*

இருப்பினும், இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. மெனோபாஸ் வந்து விட்ட பெண்களுக்கு இரவு நேரத்தில் அதிகம் வியர்வை சுரக்கும். பெண்ணுறுப்பில் ஒரு வறட்சித்தன்மை இருக்கும். மன நிலை ஒரே மாதிரியாக இருக்காது.

*

மன அழுத்தமும் கூடவே வந்து முழுமையான இன்பத்தை அனுபவிக்க தடையாக இருக்கின்றன.

*

ஆனால் மெனோபாஸ் பயத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. மெனோபாஸ், இனியும் அவர்களுக்கு வறண்ட பாலைவனமாக இருக்கப் போவதில்லை.

*

பாலைவனத்திற்கு அழகூட்டும் ஓயாசிஸ் போல, அவர்களுக்கும் ஒரு பரிகாரம் வந்து விட்டது.

*

இதையெல்லாம் ஒரே ஒரு தெரபி மூலம் சரி செய்து விடலாம். அதுதான் ஹார்மோன் மாற்று தெரப்பி.

*

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் மற்றும் மன நிலை மாற்றங்களை சரி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட தெரபிதான் இந்த ஹார்மோன் மாற்று தெரபி.

***

அது என்ன ஹார்மோன் மாற்று தெரபி ..?

மெனோபாஸ் காலத்தில் பெண்களிடம் இருந்து மறையும் ஹார்மோன்களுக்குப் பதிலாக இயற்கை அல்லது செயற்கை செக்ஸ் ஹார்மோன்களை செலுத்துவதுதான் இந்த தெரபியின் முக்கிய அம்சம்.

*

மாத்திரைகள், பேட்ச்சுகள் மற்றும் ஜெல் வடிவில் இதை உட் கொள்ளலாம். இதில், மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் குறைக்கும் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருக்கும். இது பெண்களுக்கு பெரும் வரமாக அமைந்துள்ளது.

*

மன கட்டுப்பாட்டை இந்த தெரபி அதிகரிக்கிறது, எலும்பின் பலத்தையும் கூட்டுகிறது, இயல்பான நிலையில் நமது உணர்வுகளும், உடலும் இருக்க உதவுகிறது.

*

மகப்பேறு மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில்தான் இந்த தெரபியை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 6 மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை இந்த தெரபியை எடுத்துக் கொள்ளலாம்.

*

இந்த தெரபியை எடுத்துக் கொள்வதை விட மிக முக்கியமானது நமது மன நிலையை இயற்கையாகவே நமது சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்வதுதான்.

*

உடலுறவு மட்டுமே சந்தோஷம் தரும் விஷயம் என்ற முடிவுக்கு வந்து விடாமல், உடல் ஸ்பரிசங்கள், தித்திக்கும் முத்தம், நெருக்கமான அன்பு உள்ளிட்ட விஷயங்களும் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று எண்ண வேண்டும்.

*

காதலையும், அன்பையும் வெளிப்படுத்த உடலுறவு மட்டுமே வடிகால் என்ற எண்ணத்தை விட வேண்டும். பரஸ்பரம் நம்பிக்கை, மாறாத அன்பு, உணர்வுகளுக்கு தரும் மதிப்பு ஆகியவையும் கூட கணவன், மனைவியரிடையே அன்பையும், காதலையும் இறுக்கமாக வைத்திருக்க உதவும்.



***
நன்றி தற்ஸ் தமிழ்
***




"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment