Saturday, April 9, 2011

இதயம் பற்றி சில துளிகள்.

இதயத்தின் அபார பணி:

இதயம் என்பது எலும்புகளே இல்லாத ஒரு சதை உறுப்பு.





இதயம் என்பது நான்கு அறைகளைக் கொண்டது. இந்த நான்கு அறைகளை வலது, இடது ஆரிக்கிள், வலது இடது வென்ட்ரிக்கிள் என்று பிரிக்கலாம்.

*

வலது பக்கம் கெட்ட ரத்தத்தை வாங்குகிறது. இடது பக்கம் நல்ல ரத்தத்தை அனுப்புகிறது.

*

அதாவது வலது ஆரிக்கிள் கெட்ட ரத்தத்தை வாங்கி அதை வலது வென்ட்ரிக்கிளுக்கு அனுப்புகிறது.

*

வலது வென்ட்ரிக்கிள் அதனை நுரையீரலுக்கு அனுப்பி ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

*

அங்கிருந்து அது இடது ஆரிக்கிளை அடைகிறது. இடது ஆரிக்கிள் அதனை இடது வென்ட்ரிக்கிளுக்கு அனுப்புகிறது.

*

இடது வென்ட்ரிக்கிள் அதனை உடலின் எல்லாப் பாகங்களுக்கும் அனுப்புகிறது.

***

உயிர் நிறைந்த இதயம்:

மனத உடலில் மிக முக்கியமான பாகங்களில் இதயமும் ஒன்று. ஆனால் இதயம் நின்று போனால் எத்தனை முக்கிய பாகமும் அந்த உயிருக்கு பயன்படாது.

*

உடலில் ரத்தத்தை சுத்திகரித்து தூய்மைப்படுத்தும் பணியையும், அசுத்தமான ரத்தத்தை உள்வாங்கி அதனை தூய்மைப்படுத்தி, உடல் முழுவதும் அனுப்பும் ஒரு பம்பிங் மோட்டார் போல செயல்படுகிறது இதயம்.

*

மரணம் ஏற்படும் வரை அதாவது, உடலில் இருந்து உயிர் பிரியும் வரை ஒரு கண நேரமும் ஓய்வெடுக்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்பும் இதயம்தான்.

*

தலையாய பணியைச் செய்யும் இதயத்தில் ஏற்படும் சிறு பிரச்சினையும் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

*

அதனால்தான் இயற்கையிலேயே மார்புக் கூட்டிற்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது இதயம்.

***
thnks webdunia

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment