Saturday, December 11, 2010

படித்ததில் பிடித்தது

இதுவரை நீ வாழ்ந்தது போதும்இனி உன் மனதிற்காக மட்டுமே வாழ்!

ஒருவரை கூட காதலிக்காத பெண் இருக்கலாம். ஆனால் ஒருவரை மட்டும் காதலித்த பெண்ணைக் காண்பதரிது.
 

புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகழும் போய்விடுகிறது! - கெதே

உன் மௌனம் கூட அழகுதான் வார்த்தைகளால் என் மனதை காயப்படுத்தாமல் இருப்பதினால்.....
பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில் இதயங்கள் தாங்காது . 

உன்னை விட்டு பிரிதிருக்கும் போது தானே உன் அருமை எனக்கு புரிகிறது. எனக்காக இருக்கும் ஒரு சொந்தம் நீ அல்லவா. உணக்காக என்றென்றும் வாழ்வேன் என் உயிர் முச்சு உள்ளவரை.... தாய் இல்லாமல் நான் இல்லை.......................

காதல் கதைகளை விரும்பிப் படித்தேன்
உன்னை மனதில் கொண்டு
காதல் கதைகளை உண்மை என நம்பினேன் 

நீ என் காதில் பூ சுற்றும் வரை.........தீயோடு போகும் வரையில் மாறாது உன் குணம் .............

வெறுப்பது யாராகா இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம்........

என் வாழ்வில் நான் ஒரு போதும்
விழவே மாட்டேன் என்பதை நம்பவில்லை
எத்தனை தடவை விழுந்தாலும் 
எழுவேன் என்பதைத்தான் நம்புகிறேன்.... 

நாம் சிலரை வெறுப்பதற்குக் காரணம் அவர்களைச் சரியாக புரிந்து கொள்ளாததுதான். அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததற்குக் காரணம் நாம் அவர்களை வெறுப்பதுதான். - ஸ்பானிஷ் அறிஞர் 

காதல் என்பது ரஜினிகாந்த் மாதிரி எங்க, எப்ப, எப்படி வருமுன்னு தெரியாது ஆனா..வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும் ஆனா.. பொண்ணுங்க சத்தியராஜ் மாதிரி...அவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியாது ......

இரு விழி மறந்திட்டாலும்...........
இமைகளும் மறுத்திட்டாலும்..............
பெருகிடும் கண்ணீர் ஊற்று.............. 
பொய்யெனப் பொழிவதுண்டோ............ -Harishan-

ஒரு நாள், பாரதியும் மனைவி செல்லம்மாவும் மிருகக்காட்சி சாலைக்கு சென்றனர்.

சிங்கத்தின் கூண்டிற்கு முன்னால் சென்ற பாரதியார், "சிங்கராஜாவே, நான்தான் கவிராஜன் வந்திருக்கிறேன்" என்று கூண்டினுள் கையை நீட்டி சிங்கத்தை சீண்டினார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மா கடவுளை வேண்டினாராம்,........ 
"கடவுளே, அந்த சிங்கத்திற்கு நல்ல புத்தியை ...கொடு...."!!!!!! :)
நன்றி - துவராக சிங்கம்

ஒன்றிருந்தால் இன்னொன்று இல்லை
எது இயற்கையின் நியதி
மற்றவரிடம் இருப்பது நம்மிடம் இல்லை 
நம்மிடம் இருப்பது மற்றவரிடம் இல்லை

நாம் சிலரை வெறுப்பதற்குக் காரணம் அவர்களைச் சரியாக புரிந்து கொள்ளாததுதான். அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததற்குக் காரணம் நாம் அவர்களை வெறுப்பதுதான். - ஸ்பானிஷ் அறிஞர் 

செய்துகொண்டிருக்கிற தப்புகள் வெளியில்தெரியாத வரையில், நானும் உத்தமனே......!!!!

நம்முடைய உறுதியான அபிப்பிராயத்தைப் பிறர் வாயால் கேட்க எவ்வளவு மகிழ்ச்சி. - கெதே 

நீ மேலே உயரும்போது, நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள்.... நீ கீழே போகும்போது, "உண்மையான நண்பர்கள்" யார் என்று நீ அறிவாய்...... 

நினைவு நல்லது வேண்டும்,நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;கனவு மெய்ப்பட வேண்டும்,கைவசமாவது விரைவில் வேண்டும்; -மகாகவி-

இன்று என்னை பிரிந்தாலும் மறந்தாலும் என்றாவது
நீ என்னை நினைக்கும் போது நான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக!!! .....

சொல்லிச் சொல்லி வந்தால் காதல் என்ன காதல்?....
சொல்லும் வ‌ரை வ‌ந்தால் காத‌ல் என்ன‌ காத‌ல்?.....
சொல்லச் சொல்லி வ‌ந்தால் காத‌ல் என்ன‌ காத‌ல்?.....
சொல்லைச் சொல்லி வ‌ந்தால் காத‌ல் என்ன‌ காத‌ல்?...-Harishan-

வாழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி, முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும். முள்ளை கண்டு பயந்து விடாதே, மலரை கண்டு மயங்கி விடாதே.
THAT IS LIFE.

என் உயிரை எடுக்க வந்த எமன் வெறும் கையோடு
திரும்பிப் போனன். காதலி என் உயிரை
எப்போதோ எடுத்துச் சென்று விட்டதால்.....!!!!

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் 


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வயதுக்கேற்ற `யோகா'

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி யோகா செய்தால் நிம்மதியாக வாழலாம்.

குழந்தைகள்: குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை ரையீரலே உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. கல்லீரலும், பித்தப்பைகளும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. இவர்களுக்கு மார்புச்சளி, பசியின்மை, ஆஸ்துமா, செரியாமை, மலச்சிக்கல், வயிற்றுப் பூச்சி ஆகியவை ஏற்படலாம்.

செய்ய வேண்டிய பயிற்சி:- 7 வயது முதல் யோகாசன பயிற்சியை ஆரம்பித்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

வளர் இளம்பருவம்:- 10 முதல் 20 வயதுள்ளவர்கள் யோகாசன பயிற்சிகளோடு பிராணாயாமம், தியானம், கண் பயிற்சிகள் செய்ய வேண்டும். இது ஒழுக்க கட்டுப்பாடு வளர வேண்டிய முக்கியமான பருவம். இளமை:- 20 முதல் 30 வயது வரையான பருவம் இளம் பருவம். என்றாலும் இதுதான் முதுமையின் தொடக்கமும் கூட.

பயிற்சிகள்:- பின்னால் வளைந்து செய்யும் ஆசனங்களை செய்ய வேண்டும். இதனால் முதுகுத்தண்டு பலம் பெறும். மூளையும் சுறுசுறுப்புடன் இயங்கும். இந்த வயதில் பகலில் உறங்காமல் இருக்க வேண்டும். அப்படி பகலில் உறங்கினால் மூளை மந்தமாக இயங்கும்.

பின் இளமை:- 30 முதல் 40 வயதுக்குள்ளாக உடல் இளமையை இழக்கத் தொடங்கும். புருவங்களுக்கு மத்தியில் சுருக்கம் தோன்றும்.

பயிற்சி:- யோகாசனம் மற்றும் பிராணாயாம பயிற்சிகளை தொடர்ந்து வர வேண்டும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளும் அவசியம்.

முதுமையின் தொடக்கம்:- 40 முதல் 50 வயதிற்குள்ளாக கண்களுக்கு பக்கத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும். பயிற்சி:- தவறாது யோகாசனங்கள் செய்து வர வேண்டும். பெண்களும் யோகா செய்து வந்தால் மெனோபாஸ் பருவத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கால் கருப்பையை அகற்ற வேண்டிய அளவுக்கு சிக்கல் வராமல் தடுக்கலாம்.

முதுமை:- 50 வயதுக்கு மேல் பெரும்பாலானவர்களின் உடல் வியாதிகளின் சங்கமமாக மாறிவிடும். காதுகள் கேட்கும் ஆற்றல் குறைய ஆரம்பிக்கும். இதய நோய்கள் அதிகரிக்கும். எலும்பு முறிவு, சளி பிடித்தல் போன்ற கோளாறுகள் தோன்ற ஆரம்பிக்கும். பயிற்சி:- தினம் தவறாது விபரீதகாரணி, பத்ராசனம் போன்ற ஆசனங்கள் செய்ய வேண்டும். சிறு வயது முதலே யோகாசனம் செய்து வந்திருந்தால் இவற்றில் பெரும்பாலான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மாக்சீம் கார்க்கி

நீ மற்ற மனிதர்களோடு பேசும்போது தீவிரமாகப் பேசாதே.மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும்.அவர்கள் ஒருவரை ஒருவரே வெறுக்கிறார்கள்.பொறாமையாலும்,
பகைமையாலுமே  வாழ்கிறார்கள்.அடுத்தவனைத் துன்புறுத்துவதில் ஆனந்தம் கொள்கிறார்கள்.நீ அதை எடுத்துக்காட்டி அவர்களைக்  குறை கூறத் தொடங்கினால் உடனே அவர்கள் உன்னைப் பகைப்பார்கள்.உன்னை அழித்தே விடுவார்கள்.
**********
பயம்தான் நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது.நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறார்களே,அவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியத்தைச் சாதிக்கிறார்கள்.மேலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
**********
ஒவ்வொருவனும் அடுத்தவன் நம்மை அறையப் போகிறான்  என்று எண்ணித்தான்  பயப்படுகிறான்.எனவே முதல் அடியை இவனே கொடுக்க முற்படுகிறான்.இப்படித்தான் வாழ்க்கை இருக்கிறது.
**********
என் கடவுளை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போய் விட்டால் என் துயரத்தை சொல்லி அழக்கூட ஒரு துணையிராது.
**********
 நமது காசும் மற்ற காசுகளைப்போல வட்டக்காசுதான்.ஆனால்,மற்றவற்றைவிட இதன் கனம் அதிகம்.அவ்வளவுதான்.ஆனால் மனேஜரின்காசில் இருப்பதைவிட நமது காசில் மனித இரத்தம் அதிகம்.நாம் வெறும் காசை மதிக்கவில்லை.அந்தக் காசிலுள்ள இரத்தத்தை,நியாயத்தைத்தான் மதிக்கிறோம்.
**********
எல்லாப் பழமொழிகளும் வயிற்றிலிருந்துதான்பிறக்கின்றன.இவற்றைக் கொண்டு மனதிற்குக் கடிவாளம் பின்னுகிறது வயிறு.மனித இதயம் வாழ்க்கைப் பாதையில் சுலபமாகச் செல்வதற்காக,அதைப் பக்குவப்  படுத்துவதற்காகவே பழமொழிகள் பயன்படுகின்றன.
**********
எந்தத் தவறானாலும் சரி,அது என்னை பாதித்தாலும்,பாதிக்காவிட்டாலும் அதை மன்னித்து விட்டுக் கொடுக்க எனக்கு உரிமை கிடையாது.இந்த உலகில் நான் ஒருவன் மட்டுமே உயிர் வாழவில்லை.இன்றைக்கு எனக்கு ஒருவன் தீங்கு இழைப்பதை  நான் விட்டுக் கொடுத்து விடலாம்:அவனது தீங்கு அவ்வளவு ஒன்றும் பிரமாதமில்லை என்ற நினைப்பால் அதைக் கண்டு நான் சிரிக்கலாம்;அது என்னை சீண்டுவதில்லை.ஆனால் நாளைக்கோ என் மீது பலப் பரீட்சை செய்து பழகிய காரணத்தால் வேறொருவனின் முதுகுத் தோலை உரிக்க அவன் முனையலாம்.ஒவ்வொருவரையும் ஒரே மாதிரிக் கருதிவிட முடியாது.
**********
ஒவ்வொருவனும் அவனவன் வயிற்ரை நிரப்பவே வழி பார்க்கிறான்.அந்தப் பிரச்சினையை நாளை வரை ஒத்தி வைப்பதற்குக் கூட எவனும் விரும்புவதில்லை.
**********
                                       --  தாய் எனும் நாவலிலிருந்து.

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net