Monday, May 24, 2010

கூச்சல்

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான சார்லஸ் லாம்ப்,முதல் முதலாக நாடகம் ஒன்றை எழுதி முடித்தார்.நாடகம் நடந்தது.கூடியிருந்த மக்களுக்கு நாடகம் பிடிக்க வில்லை.கூச்சலிட்டனர்.கூட்டத்தினர் கூச்சலிட்ட போது சார்லஸ் லாம்பும் சேர்ந்து கூச்சலிட்டார்.கூட இருந்த நண்பர்,''நீங்களும் ஏன் கூச்சல் போடுகிறீர்கள்?''என்று கேட்டார்.லாம்ப் கூறினார்,''இல்லாவிடில் இந்த நாடகத்தை எழுதிய ஆசிரியர் நான் தான் என்று கண்டு பிடித்து உதைத்திருப்பார்களே?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மிருகம்

வஞ்சனையாலும் சூதினாலும் சமயத்துக்கேற்ப பல வித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் நரி; ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனம் சோர்ந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு;தர்மத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல் அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி; சுதந்திரத்தில் இச்சை இல்லாமல்,பிறர்க்குப் பிரியமாய் நடந்து கொண்டு அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய்; பிறரது அக்கிரமத்தை நிறுத்த முடியாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன்  கழுதை;தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு.
                                                       --மகா கவி பாரதியார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மூளை

ஒரு பெரிய வழக்கு. அதில் சி.ஆர்.தாஸ்,நார்ட்டன் துரை ஆகியோர் எதிர் எதிர் வழக்கறிஞர்கள்.ஒரு முறை சி.ஆர்.தாஸ் வாதம் செய்து கொண்டிருக்கையில் நார்ட்டன் எழுந்து துடுக்காக,''மிஸ்டர் தாஸ்!ரொம்பப் பேச வேண்டாம்.உம்மை என் சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்வேன்,''என்றார்.உடனே தாஸ்,    ''அப்படிச் செய்தால் உம்முடைய தலையில் இருப்பதை விட உமது பாக்கெட்டுக்குள் அதிக மூளை இருக்கும்.''என்றாராம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தண்டனை

பிரெஞ்சுக்காரரான வால்டேர் ஒருமுறை நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தில் தங்கி இருந்தார்.அப்போது இங்கிலாந்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான மனோநிலை மக்களிடம் இருந்தது.ஒரு நாள்  அவர்ஒரு தெரு ஓரமாய் நடந்து போய்க் கொண்டிருந்தார்.அப்போது ஆங்கிலேயர்கள் கூட்டமாய் அவ்வழியே வந்தனர்.வால்டேரைப் பார்த்தவுடன்,''அதோ,ஒரு பிரெஞ்சுக்காரன் போகிறான்.அவனைத் தூக்கிலிடுங்கள்,''என்று கத்திக் கொண்டே அவரை சூழ்ந்து கொண்டனர்.வால்டேர்  அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து அமைதியாகச் சொன்னார்,''இங்கிலாந்தின் பெருமக்களே!நான் பிரெஞ்சுக்காரன் என்பதால் என்னைக் கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.ஒரு ஆங்கிலேயனாகப் பிறக்காமல் ஒரு பிரெஞ்சுக்காரனாகப் பிறந்ததே பெரிய தண்டனை என்று நான் எண்ணுகிறேன்.இந்தத் தண்டனை போதாதா?இதற்கு மேலும் ஒரு தண்டனை அவசியம் என்று நினைக்கிறீர்களா?''அவருடைய சமயோசிதமான பதிலைக் கேட்டுக் கூட்டம் ஆர்ப்பரித்தது.அவர் த்ங்குமிடத்திற்குப் பத்திரமாக அழைத்து சென்றார்கள்.