Sunday, December 6, 2009

சவால்

சந்தைக் கும்பலில் குப்பத்துக்காரன் காலில் ஒருவன் மிதித்து விட்டான்.கூட்ட நெரிசல்.குப்பத்துக்காரனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.''டேய்,சந்தைக்கூட்டம் என்று பார்க்கிறேன்.நான்கு பேர் கூடுற இடத்தில் ஏதாவது செய்தால் நன்றாக இராது என்று உன்னைச் சும்மா விட்டு வைக்கிறேன்.'' என்று கத்தினான்.மிதித்தவன்,''இங்கேயே நீ என்ன செய்ய முடியுமோ அதைச் செய்''என்று பதிலுக்குக் கத்தினான்.
குப்பத்துக்காரன்,''என் ஊருக்கு வாடா,என்ன நடக்கிறது பார்.''என குப்பத்துக்காரன் மிதித்தவன் ஊருக்கே வந்தான்.''உன் ஊருக்கே வந்து விட்டேன்.என்ன செய்யப் போகிறாய்?''என்று சவால் விட்டான்.
''என்னுடைய தெருவிற்கு வாடா,தெரியும்,''என்றான் குப்பத்துக்காரன்.மிதித்தவன் அவனுடைய தெருவிற்கும் வந்து விட்டான்.
''என் வீட்டு வாசற்படியை மிதித்தால் பிறகு தெரியும்.''
மிதித்தவன் குப்பத்துக்காரன் வீட்டு வாசற்படிக்கும் வந்தான்.
''என் வீட்ட்ற்குள் வந்தால் என்ன ஆகும் தெரியுமா?''
அவன் வீட்டிற்குள்ளும் நுழைந்து விட்டான்.குப்பத்துக்காரன் உடனே நெடுஞ்சாண் கிடையாக அவன் காலில் விழுந்தான்.''அண்ணே,வாங்க!நமக்குள் என்ன சண்டை?உட்காருங்க,காபி சாப்பிடுங்கோ!''என்று உபசரித்தான்.
அளவுக்கு மீறி தன்னைப் பற்றிப் பேசி அச்சத்தை உருவாக்குபவர்கள் அருகில் நெருங்கிச் சென்றால் தான் அத்தனையும் வெத்து வெட்டு என்பது தெளிவாகும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கழுதை லாயம்

ஒரு அரசன் சில கவிதைகளைப் புனைந்து தன அமைச்சரிடம் காட்டினான்.அமைச்சர் சொன்னார்,''இவை மோசமான கவிதைகள்.உங்களால் முடியாத காரியத்தில் ஏன்தலையிட வேண்டும்?''இது கேட்டு மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.
சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பிக் காட்டினான்.அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.''எங்கே போகிறீர்?''என்று அரசன் கேட்டான்.''கழுதை லாயத்திற்கு''என்றார் அமைச்சர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net